எதிர்கால சமாதானப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, ஈரானால் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆதரிக்கப்பட்டதாகவும் கூறப்படும் தாக்குதல்கள் மற்றும் அட்டூழியங்களைச் சுட்டிக்காட்டி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானிடம் இழப்பீடு கோரியுள்ளார்.

Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில்,

கடந்த ஐந்து மாதப் போரில் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரான் இழப்பீடு கோருவது தொடர்பான யோசனையை “சுவாரஸ்யமான யோசனை” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிடம் இழப்பீடு

அதேவேளை, அதற்குப் பதிலாக அமெரிக்காவும் ஈரானிடம் இழப்பீடு கோரும் என அவர் தெரிவித்துள்ளார். ஈரான் கோரி வரும் இழப்பீடு தொடர்பான விடயம், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

2000ஆம் ஆண்டு யேமன் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை போர்க்கப்பலான USS Cole மீது நடத்தப்பட்ட கொடிய குண்டுத் தாக்குதலையும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு அல்-கொய்தா அமைப்பே காரணம் என FBI தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் 17 அமெரிக்க கடற்படை வீரர்கள் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். “இது ஒரு சுவாரஸ்யமான யோசனை. ஏனெனில், பல மோதல்களிலும் சாலையோர குண்டுத் தாக்குதல்களிலும் கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த மக்களுக்காக, தற்போது நானும் ஈரானிடம் இழப்பீடு கோருகிறேன்.

ட்ரம்ப் பதிவு

இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஈரான் பிரபலமானது. ஆரம்பத்தில் ஜெனரல் சுலைமானி தலைமையிலும் இவை இடம்பெற்றன. USS Cole தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காகவும், போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோருக்காகவும் இந்த இழப்பீட்டை கோருகிறேன்” என ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பதிலுக்கு பதில் - ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்..! ட்ருத் சோசியலில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு | Interesting Idea Iran Demand Trump Compensation

மேலும், கடந்த 50 ஆண்டுகளில் இடம்பெற்ற பொது எழுச்சிப் போராட்டங்களின்போது கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும், கடந்த ஐந்து மாதங்களில் கொல்லப்பட்ட 52,000 பேருக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் இந்த விடயத்தை உறுதியாக முன்வைக்குமாறு எனது பிரதிநிதிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments