கோராவெளி, ஈச்சையடித்தீவுக் கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளன.

இக்கிராமங்கள் இயற்கை வளம் நிறைந்த விவசாயக் கிராமங்களாகும். மக்கள் நெற்செய்கை மரக்கறிப் பயிர்ச்செய்கை போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததுடன், தங்களது கிராமத்திற்குரிய தனித்துவமான கலைகளையும் வளர்த்து வந்தார்கள்.

கோராவெளிக் கிராமத்தில் இந்து மதத்தவர்களின் பிரசித்திபெற்ற கோராவெளி அம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.

இங்கு கடந்த 1990 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன.

இராணுவத்தினரும் சிங்கள-முஸ்லிம் குழுக்களும் மக்கள் மீதான தாக்குலை நடத்திவந்தனர் என குற்றச்சாட்டுக்கள் இன்றளவும் பரந்து காணப்படுகின்றன. 

இந்த கோரத்தில் 1990.08.14 நண்பகல் செங்கலடி, கல்லடி இராணுவ முகாம்களிலிருந்து வந்த இராணுவத்தினர் கோராவெளி, பச்சையடித்தீவு கிராமங்களைச் சுற்றிவளைத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

இராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகத்தில் வீடுகளிலிருந்தவர்கள், வீதிகளிற் சென்றவர்கள், வயல்களில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் எனப் பதினைந்து பேர் உயிரிழந்தார்கள். மேலும் இருபத்தைந்து பேர் காயமடைந்தார்கள்.

 அன்றைய கொடூரமான நாட்களையும் அன்று கொன்றொழிக்கப்பட்ட அப்பாவித்தமிழ் மக்களையும் கனதியான வலிகளோடு நினைவேந்துகிறது ஐபிசி தமிழ்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments