26 வயதான குறித்த யுவதி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றபோது, அதே பீடத்தில் கல்வி கற்ற இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், பின்னர் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து அந்தக் காதல் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, பிரான்ஸில் தொழில் புரிந்து வந்த 35 வயது இளைஞருடன் கடந்த மாத தொடக்கத்தில் குறித்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

திருமணத்துக்குப் பின்னர் கணவன் யாழ்ப்பாணத்தில் மனைவியுடன் தங்கியிருந்ததாகவும், தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெற்றோருடன் தங்கியிருந்த புதுமணப் பெண் யாழ். நகருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தொலைபேசி அணைக்கப்பட்டிருந்ததால் உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த பெண் தனது பழைய காதலனுடன் இருப்பதாக தெரியவந்ததாக கூறப்படுகிறது.

பொலிஸார் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, தான் காதலனுடன் சேர்ந்து வாழ்வதாகவும், தனது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, திருமணத்துக்காக வழங்கப்பட்ட நகைகள், பணம் மற்றும் ஏனைய சொத்துக்கள் தொடர்பாகவும் இருதரப்பினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருமணச் செலவுகள் மற்றும் நகைகள் தொடர்பாக கணவன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments