இது தொடர்பாக வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்கள், 

”காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (Office on Missing Persons – OMP), காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகள் தொடர்பான நடவடிக்கைகளுக்காக குடும்பங்களை அழைத்து, ஆவணங்கள், சாட்சிகள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைக் கொண்டு வருமாறு கோருவது குறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளான நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

OMP நடவடிக்கை

மேலும், கிராம சேவகர் (GS) அதிகாரிகள் மூலம் குடும்பங்களைத் தொடர்புகொண்டு OMP நடவடிக்கைகளில் கலந்துகொள்ள அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் சில குடும்பங்கள் அச்சுறுத்தப்பட்டதாக அல்லது கட்டாயப்படுத்தப்பட்டதாக தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.

எந்த கிராம சேவகர் அதிகாரியோ அல்லது வேறு அரச அதிகாரியோ காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை OMP கூட்டத்திற்குச் செல்லவோ, மரணச் சான்றிதழை ஏற்றுக்கொள்ளவோ, வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கவோ அச்சுறுத்தவோ, அழுத்தம் கொடுக்கவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கே உள்ளனர் என்பவை நம்பகமான சுயாதீன விசாரணையின் மூலம் நிரூபிக்கப்படாத நிலையில், அவர்களின் குடும்பங்கள் மரணச் சான்றிதழை ஏற்றுக்கொள்ள அழுத்தப்படக்கூடாது” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments