உலகப்புகழ் பெற்ற தீர்க்கதரிசிகள் என்று கூறப்படும் பாபா வங்கா மற்றும் நாஸ்ட்ரடாமஸ் என்ற பெயர்கள், உலகில் முக்கிய சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் மீண்டும் பேசப்படுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாபா வங்கா 2026-ஆம் ஆண்டுக்காகக் கணித்ததாகக் கூறப்படும் தகவல்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.

பாபா வங்கா 2026 கணிப்புகள்

பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்த பாபா வங்கா சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். கண் பார்வையை இழந்த பாபா வங்காவிற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது.

பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி மரணம் அடைந்தார்.

பாபா வங்கா உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் இதுரையில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளதுள்ளதால் மக்கள் மத்தியில் பாபாவங்காவின் கணிப்புகள் மீது அதீத நம்பிக்கை காணப்படுகின்றது.  

குறிப்பாக, உலகளாவிய மோதல், பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் நெருக்கடி குறித்து பாபா வங்கா முன்கூட்டியே கணித்ததாக பல வைரல் பதிவுகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பெட்ரோல், டீசல், CNG மற்றும் LPG விலைகள் பல குடும்பங்களை பாதித்து வரும் நிலையில், இந்தக் கணிப்புகள் தற்போது நடப்பில் வெளிப்படத் தொடங்கியுள்ளதாக பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர்.

மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்தால், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக ஈரானைச் சார்ந்த மோதல் தீவிரமடைந்தாலோ அல்லது முக்கிய கப்பல் போக்குவரத்து பாதைகள் பாதிக்கப்பட்டாலோ, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர அதிக வாய்ப்புள்ளது. 

இதன் தாக்கம் இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசல், CNG மற்றும் LPG விலைகளிலும் பிரதிபலிக்கும்.உலகில் போர், பொருளாதார நெருக்கடி அல்லது இயற்கைப் பேரிடர் போன்ற அசாதாரண சூழல்கள் உருவாகும் ஒவ்வொரு முறையும், பாபா வங்காவின் பெயரும் அவரது கணிப்புகளும் மீண்டும் பேசப்படுகின்றன.

உலகை அச்சுறுத்தும் எரிபொருள் நெருக்கடி? பாபா வங்காவின் 2026 கணிப்பு வைரல்! | Baba Vanga Predicts About Petrol Diesel Crisis

அவரது கணிப்புகள் பல்வேறு விதமாகப் பொருள் கொள்ளக்கூடியதாக இருப்பதால், அவற்றை தற்போதைய நிகழ்வுகளுடன் மக்களால் எளிதாக தொடர்புபடுத்திக் கொள்ள முடிகின்றது. இதனால், உலகளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் போதெல்லாம் பாபா வங்காவின் கணிப்புகள் மீண்டும் மீண்டும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments