அழிக்க முடியாத தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழிக்க அவர்களின் திறமையான கிட்டு உட்பட குரப்பா போன்ற தளதிகளும் கணிசமான தமிழ் இளைஞர்களும் எமது இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள் அதைவிட 1200 இந்தியாப்படையனர் உங்களின் சுதந்திரத்திற்காக மடிந்ததை இலங்கை ஒருபோதும் மறக்கக் கூடாது?
இலங்கை ஏதேனும் நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம் இந்தியா எப்போதும் உறுதியாக அந்நாட்டுடன் துணை நிற்கும் என்று இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சராக இலங்கைக்குத் தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்ட அவர், இன்று(08) கொழும்பில் நடைபெற்ற இந்தியச் சமூகத்தினருடனான சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவும் இலங்கையும் நெருக்கமான கலாச்சார மற்றும் நாகரிகத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்வதாகவும், இவை இருதரப்பு உறவுக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளன என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம்
தொடர்ந்தும் உரையாற்றிய ராஜ்நாத் சிங், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களை எடுத்துரைத்துள்ளார்.

மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும், உலகளாவிய வளர்ச்சியில் 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
