அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் பாலமுனைப் பகுதியில் இன்று சனிக்கிழமை (12) இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாலமுனையைப் பிறப்பிடமாகவும், அட்டாளைச்சேனை – 08 அக்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட 4 பிள்ளைகளின் தந்தை இச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

பாலமுனைப் பகுதியில் வைத்து எதிர்வந்த தனியார் பேருந்துடன் இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் பலமாக மோதியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments