இது திருத்தம் செய்யப்படாதே வரலாறு ஆவணம் ஆகையால் எவரும் இதைப்பார்வையிடவேண்டாம்?

19/04/1995 அன்றுதிருமலை துறைமுகம் பகுதியில் நங் கூரமிட்டு இருந்த இரண்டு போர்க்கப்பல் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.

கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன், கடற்கரும்புலி மேஜர் கதிரவன், கடற்கரும்புலி மேஜர் மதுசா, கடற்கரும்புலி மேஜர் சாந்தா வீரவணக்க நாள் இன்றாகும்.

திருமலைக் துறைமுகத்தினுள் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் முதுகெலும்பு என வர்ணிக்கபட்ட “சூரயா – ரணசுரு” ஆகிய போர்க்கப்பல்கள்மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் 19.04.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன், கடற்கரும்புலி மேஜர் கதிரவன், கடற்கரும்புலி மேஜர் மதுசா, கடற்கரும்புலி மேஜர் சாந்தா ஆகிய   கடற்கரும்புலி மாவீரர்களின் ஈடுயினையற்ற தியாகம் ஆகும்

​தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் சாந்தா​

12 : 45 மணிக்கு தங்களின் சாதனையைப் படைத்தனர். இது அதிஉயர் பாதுகாப்புவலையம் என அரசாங்கத்தால் சொல்லப்பட்ட இடமாகும்.

அதியுயர் பாதுகாப்பு வலயம் கடற்படையினரின் அவலக்குரலாய் நிறைந்தது. மீண்டும் இலங்கையில் எப்பகுதியிலும் படையினர் இருக்க முடியாது என்ற நிலை உணர்த்தப்பட்டது. இந்நடவடிக்கையில்  இரண்டு போர்க்கப்பல்கள் முற்றாகக்கடலிற்குள் மூழ்கியது.

 கரும்புலி மேஜர் மதுசா

 கடைசி விடுமுறையில் சென்ற தணிகைமாறன்.
“அம்மா தனியச்சாப்பிட ஒரு மாதிரிக் கிடக்கு…. ஊர்ப்பொடியன்கள் கொஞ்சப் பேரைக் கூட்டிவாம்மா. ” மகன் கேட்டபோது அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவன் சின்னனில இருந்து எல்லோரிலும் பாசம் கொண்டவன் என்று அம்மாவிற்குத் தெரியும். அம்மா அவன் பழகிய ஊர்ப்பொடியலை நித்திரையில் இருந்து எழுப்பி வந்தாள். முற்றத்தில் எல்லோரையும் வட்டமாய் இருத்தி மகனே எலோருக்கும் சாப்பாட்டைப் பகிர்ந்துகொடுத்தான்.
” அம்மா இந்தாங்கோ இதைச் சாப்பிடுங்கோ ” தன் கையினால் பிசைந்து அளைந்த சாப்பாட்டில் பாதியை அம்மாவிடம் நீட்டினான்.அம்மாவும் வாங்கிச் சாப்பிட்டாள். எல்லாம் முடிந்த பிறகு ” அம்மா காலமை வேளைக்கு என்னை எழுப்பிவிடு ” பாயில படுத்தான். ஆழமாக உறங்கினான்.

காலை விடிந்ததுமே சைக்கிளையும் எடுத்துக் கொண்டு அம்மாவிற்கு – அப்பாவிற்கு தங்கைமாருக்கு , தம்பிமாருக்கென்று எல்லோருக்கும் தனியத் தனிய போட்டுவாறன்  என்று வாசல்வரை சொல்லிப் புறப்பட்டான்.
” 10 மணிக்கு வாகனத்தில் வந்து கூட்டிக்கொண்டு போறம் என்றல்லா சொல்லிப்போட்டு போனவர்கள். ஏன்ரா இப்பவே. ” அம்மா மெதுவான குரலில் இழுத்தாள்”.


” ஊரில எல்லோருக்கும் சொல்லிப்போட்டு போகவேணும். இப்பவே போனாத்தான் சொல்லிப்போட்டுப் போகலாம். ”
சொல்லிவிட்டு மகன் சிரித்தான். வீட்டுக்காரரைப் போல ஊரவர் ஒவ்வொருவரையும் நேசித்து வந்தான் தனது மகன் என்று அம்மாவிற்குத் தெரியும். அதற்குமேல் எதுவும் பேசவில்லை.
மகன் போய்விட்டான் ; அம்மா பாவம் எதுவும் புரியவில்லை. காத்திருந்தாள். தன் மகன் தன்னிடம் இறுதியாகத்தான் விடைபெற்றுப் போகிறான் என்று அவளிற்குத் தெரியாது. இன்னும் ஒரு பகலும் ஒரு இரவும் கழித்தால் தன் மகன் இலக்கினை நோக்கிச் சென்றுவிடுவான் என்று அறிந்தால் பெற்றவள் தாங்கிக்கொள்வாளா…?

(கட்டன் சாந்தா)ஆனால் அவனிற்கு தெரியும்.
இன்னும் ஒரு இரவினதும் பகலினதும் இடைவெளிக்குள் தான் கதைப்பது சிரிப்பது கலகலப்பது எல்லாம் என்று.
அதற்கிடையில் தான் நேசித்த ஒவ்வொருவரிற்கும் இறுதி விடை கொடுத்துக் கொண்டிருந்தான்.
அவன் ஊரவர்களை , தனது உறவினரை நேசித்த நேசப்பிற்க்குள் எத்தனை புனிதமான உணர்வுகள் பொதிந்திருந்தன. அந்த ஊரவர்களின் துயரம் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல்த் தானே அவனது மூச்சு புயலாக மையம் கொண்டது.
ஒவ்வொருவரையும் மிக மென்மையாக நேசித்த அவனிற்கு ஒரே இரவில் ஒன்பது ஊரவர்கள் கடற்படையால் குதறப்பட்ட சேதியை தாங்கிக் கொள்ள முடியாததாய் இருந்தது.

மற்றும் புதியபோராளிகளை வன்னிக்கு பயிற்சிக்காக அழைத்துக் கொண்டுவரும்வேளை இச்சம்பவம் நடைபெற்றது .கடற்படையின் இக்காட்டுமிராண்டித்தனமான செயற்பாடானது கடற்புலிகளை ஒரு பாரிய இக்கட்டில் தள்ளிவிட்டது. அதாவது இக்கடற்படைக்கு அவனது கோட்டைக்குள்ளே வைத்துத் தாக்குதல் நாடாத்தி பழிதீர்ப்பது.இதற்கான வேவுத்தரவுகள் விரைவாகச் சேகரிக்கப்பட்டு போராளிகள் தளபதிகளால் ஆராயப்பட்டு தலைவர் அவர்களிடம் திட்டம் கொடுக்கப்பட்டது.
இவைகளை தீவிரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள் தளபதி கங்கைஅமரன் அவர்களின் நேரடிப் பயிற்சியிலிருந்த சுலோஐன் நீரடிநீச்சல் பிரிவும் அங்கயற்கன்னி நீரடிநீச்சல் பிரிவிடமும் இத்தாக்குதல் திட்டத்தைக் கொடுத்து அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி இத்தாக்குதல் திட்டத்திற்கான பயிற்சிகளையும் அடிக்கடி வந்து பார்வையிட்டதுடன் சகல ஆலோசனைகளையும் வழங்கினார். ( இப்பயிற்சித்திட்டத்தினை தலைவர் அவர்கள் பார்வையிட படமும் இணைக்கப் பட்டிருக்கிறது.

இந்த நிகழ்வு அவனின் நெஞ்சத்தை மட்டுமல்ல உயிரையே சுட்டது.
அப்போது அவன் இயக்கவேலை காரணமாக மன்னாரில் நின்றான்.
ஒன்பது இரத்த உறவுகளும் ஒரேடியாக வேட்டையாடப்பட்டனர். என்ற சோகம் தொலைத் தொடர்பு சாதனம் மூலம் தான் அவனிற்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை நம்ப கஸ்ரமாக இருந்தது.
கடலில் அன்றாடம் மீன்பிடித்து வாழ்க்கை நடத்துகின்ற வெற்றிலைக்கேணி கிராமத்திலா இப்படி……

” அம்பாச் ” சொல்லி வலையிழுக்கும் சத்தமும் , ” ஏலேலோ ” பாடி படகிறக்கும் ஓசையும் , கரைமுட்டி அலைபாடும் ராகமும் காற்றில் சந்தோசமாக கலக்கின்ற ஊரிலா இப்போ ஒப்பாரி ஓலங்கள் …?
கரையிலேயே தவண்டு , அலையிலே நண்டு பிடித்து , கடலிலே தொழில் செய்த மனிதரிலையா இப்போ வெறியாட்டம்.
” அழுகுரலும் , அவலமும் நிறைந்திருக்கும் ஊரிப்பார்த்து , நான் எப்படித் தாங்கிக்கொள்ளப் போறன். ”ஒரு சில கணத்திற்குள் எத்தனையோ சிந்தனை மின்னலாய் பளிச்சிட்டு மறைந்தன. அன்று வெளியே சென்ற அவன் திரும்பவே இல்லை வெற்றிச் சமரோடு தமிழீத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தான்.

 தலைவரின் பாதுகாப்பிற்கான தனிப்பட்ட புலனாய்வு அணி எப்படி உருவாக்கப்பட்டது.

28/06/1995 அன்று புலனாய்வு அணிப் பொறுப்பாகயிருந்த திரு நிருபன் மாற்றப்பட்டு கெளதமன் புலனாய்வுப் பொறுப்பாளராக நியமணிக்கப்பட்டார்,

1990 ஆண்டு சந்தோஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட 15 வயது தொடக்கம் 18 வயது வரையான 15 போராளிகள் தலைவரோடு சென்றோம் என முன்னர் குறிப்பிட்டேன்,

 சிவில் புலனாய்வு தொடர்பாகச் சொர்ணம் அண்ணை பல முறை எங்களிற்கு வகுப்பு எடுப்பார். அதாவது ஒரு சைக்கிளில் இரண்டு பேர் படி 3 சைக்கிளில் ஆறு பேர் வெளிக்கிடுவோம். இருவருக்கு ஒரு மைக்றோ பிஸ்ரேல் இருக்கும். உளவாளி என்று சந்தேகப்படுபவரை கை துப்பாக்கி வைத்து இருப்பவர் 10 மீற்றர் தூரத்தில் நிக்க வேண்டும். அடுத்தவர் சந்தேகம் ஆனவரிடம் கிட்டச் சென்று ஆயுதங்கள் உள்ளளவா என செக் பண்ணிப் பார்க்க வேண்டும்.

 பின்னர் அவரைக் கைது செய்யலாம். எக்காரணம் கொண்டும் பொது மக்களிடம் கைத்துப்பாக்கியைக் காட்டக்கூடாது. நாங்கள் இயக்கம் என்றும் சொல்லக் கூடாது. அப்படி ஏதாவது மக்களிடம் ஆயுதங்களைக் காட்டினால் ஆறு மாதச் சமையல் என்று அவரால் எங்களிற்குச் சொல்லப்பட்டது. அதை விட ஒரு கொப்பியும் பேனாவும் கொண்டு செல்ல வேண்டும். நாம் பாதையால் செல்லும் போது அப்பாதையில் நாம் காணும் சம்பவங்கள் எதுவாகயிருந்தாலும் அக்கொப்பியில் எழுத வேண்டும்.

 அதாவது அப்பாதையால் செல்லும் ஐஸ் பழவியாபாரி, மீன் சாவாரி பாதையால் செல்லும் லொறி வாகனம் அனைத்தையும் எழுதிக் கிழமைக்கு ஒரு தடவை சொர்ணம் அண்ணையிடம் கொடுக்க வேண்டும். இது24 மணித்தியாலம் தலைவரின் முகாமைச் சுற்றி கண்காணித்தவாறே இருப்போம்.

இது இப்படி நடந்துகொண்டிருக்க புதிதாக பயிற்சி எடுத்து இளம் போராளிகளை எமது படையணிக்கு சொர்ணம் அண்ணை நிறையப் பேரை எடுத்தார். அதில் குறிப்பிட்ட போராளிகளை இனங்கண்டு அவர்களை ஒரு வீட்டில் வைத்து அவர்கட்கு கிழமையில் இரு தடவை புலநாய்வு ரீதியாக செயற்ப் படுவதற்கான வகுப்பு எடுப்பார்.

 நாளடைவில் யாழ்பாணத்தில் கொய்யாத் தோட்டம் ஒன்று அவர்கட்கு வாங்கப்பட்டது. அடுத்துஅங்கே அவர்கள் விடப்பட்டார்கள. ஆனால் இயக்கம் என்று மக்களிற்குச் சொல்லக்கூடாது மாறாக வேலை ஆட்கள் என்றே  சொல்ல வேண்டும். கிழமையில் ஒரு தடவை சொர்ணம் அண்ணையும் நானும் அங்கே செல்வோம். அப்பொழுது நான் வெளியே நிற்பேன் .சொர்ணம் அண்ணை அவர்கட்கு வகுப்பு எடுப்பார். ஒரு நாள் சென்றோம். கொய்யாப்பழம் சாப்பிட்டு  அவர்களில் ஒரு போராளிக்கு முன் பல்லு அரித்துக்காணப்பட்டது. கோபம் அடைந்த சொர்ணம் அண்ணை அவனின் கன்னத்தில் இரண்டு அறைபோட்டார்.

பின் அனைவருக்கும் புத்தி  சொன்னார். உங்களின் பற்கள் பழுது அடைந்தால் உங்களைப் பொதுமகன் என மக்கள் கருத மாட்டார்கள். மாறாக அவர்கள் வேறுமாதிரி நினைப்பார்கள். நீங்கள் குளித்து முழுகி அழகான உடுப்புப்போட்டுப் பார்ப்பவர்கள் உங்களைக் கவர வேண்டும். மக்களிற்குத் தேவையானவர்களாக உங்களை நீங்கள் இனம் காட்ட வேண்டும். என அவர்கட்குத் தெளிவு படுத்தினார்.

நாளடைவில் வசந் தலைமையில் கொண்டச்சித் தாக்குதல் நடந்தபின் போராளி நிருபன் தலைமையில் ஒரு கொமாண்டோ அணி 1990/11 ஆம் மாதம் நாவற்குழியில் வந்து இறங்கியது எனக் குறிப்பிட்டேன். அதில் வந்த ரெட்ணம் சாவகச்சேரியில் இருந்த எமது படையணித் தடுப்பு முகாம் ஆன புளியடி முகாமிற்குப் பொறுப்பாக விடப்பட்டார். போராளி நிருபன் பயிற்சி முகாம் பொறுப்பாளராகவும் புலனாய்வு அணி மேலாளராகவும் அதாவது இரண்டு வேலை அவருக்கு சொர்ணம் அண்ணையால் வழங்கப்பட்டது.

நாளடைவில் அப்புலனாய்வு அணியை சிறந்த முறையில் கட்டி எழுப்பினார். நிருபன் அண்ணை அது மட்டும் அல்ல மாத்தையா இந்தியாவின் “றோ ” புலனாய்வாளர்களின் கதையை நம்பி தலைவரைக் கொலை செய்வதற்கு அவரோடு நின்ற பல போராளிகளை தனக்குச் சார்பாக மாற்றி வைத்திருந்தான். அக்காலப்பகுதியில் இரவோடு இரவாக மாத்தையாவைக் கைதுசெய்து விட்டுத் தளபதி கடாபி தலைமையில் நான் உட்பட மிகவும் குறைந்த போராளிகளோடு தலைவரோடு சென்று கரவெட்டிப் பகுதியில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்தோம்.  அக்காலப் பகுதியில் சொர்ணம் அண்ணையோடு தோளோடு தோள் நின்று அனைத்து சந்தேகத்திற்கு இடமான போராளிகளைக் கைது செய்து விசாரணைக்காக அவர்களை அம்மானிடம் ஒப்படைக்கப்பட்டது. இக்கடமைச் திறமையாகப் செய்த பெருமை நிருபன் அண்ணையைச் சேரும். அத்தோடு எமது புலநாய்வுப் போராளிகளும் இரவுபகலாக இந்த சிலந்திவலையில் சிக்கியவர்களை மீட்பதற்கு கடுமையாக உழைத்தார்கள்.அடுத்த நடவடிக்கையாக

28/06/1995 அன்று திருகோணமலைப்பொறுப்பாளராக இருந்த லெப். கேணல் கில்மன் தவறுதலான விபத்தில் வீரச்சாவு அடைந்தார்.

 அதனால் அவரின் பொறுப்பை செய்வதற்காக நிருபன் அண்ணை திருகோணமலைக்கு அனுப்பப்பட்டார். அன்றிலிருந்து தலைவரின் பாதுகாப்பிற்கான புலனாய்வு அணிப்பொறுப்பாளாக  கப்டன் கௌதமன் நியமிக்கப்பட்டார். 19/07/1996  அன்று கெளதமனுக்கு  என்ன நடந்தது பிறகு பார்ப்போம்.

09/07/1995 அன்று அதிபர் சந்திரிகா தலைமையிலான அரசு நவாலி சென். பீற்றர்ஸ்தேவாலயத்தின் மீது விமானத்தாக்குதல் மேற்கொண்டது.

 பாரிய ஒரு இனப்படுகொலையை ஒன்றை மேற்கொண்டது.

இலங்கை பாதுகாப்புப் படையினரால் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலின்போது பலியானவர்களின் தொகை அதாவது உடனே உயிர் இழந்தவர்களின் தொகை 65 அதில்  150  பேர் படுகாயம் அடைந்தனர். அதில் சிகிச்சை பலன் அழிக்காமல் இறந்தவர்கள் 53 மிகுதி பேர் உயிர் பிழைத்தனர், அதில் மொத்தம் 118 பெண்கள் குழந்தைகள், முதிவர்கள் என கொல்லப்பட்டனர்.

 யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலையம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப் படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத் தாக்குதலை நேராகப் பார்த்தவர்கள் தெரிவிக்கையில்,….

அன்றைய தினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக அகதிகளாக வெளியேறிய மக்கள் நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் கோயிலிலும் தாகம் தீர்ப்பதற்காக அமர்ந்து களைப்பாறினர்.

அவ்வேளையில், யாழ். நகரப் பகுதியிலிருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த “அன்ரநோவ்” விமானம் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மேற்படி இரு ஆலயங்கள் மீதும் வீசியது..

மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு தேவாலயங்களும் பலத்த சேதமடைந்தன. இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட118   பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன், சுமார் 150ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம், நவாலியிலுள்ள சென். பீற்றர் மற்றும் போல் தேவாலயம், போரிலிருந்து பாதுகாப்பும் அடைக்கலமும் தேடி இடம்பெயர்ந்து வந்த தமிழ் மக்களால் நிரம்பியிருந்தது. இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு உணவு மற்றும் தற்காலிக கழிப்பறைகளை அமைத்தல் உள்ளிட்ட உதவிகளை தேவாலயத்தின் இளைஞர் கழகம் உள்ளிட்ட நவாலியிலுள்ள மக்கள் வழங்கிக் கொண்டிருந்தனர்.

 அண்ணளவாக 45 பேர் நவாலி பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆனால், அதிகமானோர் அடைக்கலம் தேடி இடம்பெயர்ந்து நவாலிக்கு வருகை தந்தவர்களாவர். அன்றைய தினம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டனர். ஒரு சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்படவேயில்லை. தான் வீடு சென்றுபார்த்தபோது தனது 18 வயதான மகளின் சடலத்தின் கீழ் தனது உறவினரின் குழந்தை ஒன்றை உயிருடன் கண்டெடுத்தது எப்படி என்பதை பெண்ணொருவர் விபரித்தார். சில சடலங்கள் சில நாட்களின் பின்னரே மீட்கப்பட்டன.

 தலைகளற்ற சடலங்கள் நிலமெங்கும் பரந்து கிடந்தன. சில உடல்களின் தலைகள் மரத்தின் மீதிருந்து கண்டெடுக்கப்பட்டன. பல உடல்கள் அடையாளம் காணமுடியாதபடி கருகியிருந்தன. அன்றைய தினம் மாலை தான் யாழ்ப்பாணத்திலிருந்து நவாலி நோக்கி சைக்கிளில் பயணித்தபோது, சடலங்களும் அவற்றின் பாகங்களும் வீதியெங்கும் சிதறிக்கிடந்ததாக கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் விபரித்தார்.

ஆரம்பத்தில் யாழ்ப்பாணக் கத்தோலிக்க பேராயர் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) ஆகியோரை மேற்கோள்காட்டி இக்குண்டுத் தாக்குதலில் 65 பேர் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், பின்னர் இந்த எண்ணிக்கை 118 ஆக அதிகரித்தது.  எப்படியிருப்பினும் கிராமவாசிகள் 147, 165 மற்றும் 217 என வேறுபட்ட எண்ணிக்கைகளை என்னிடம் கூறினர். சிலர் 300 பேர் வரை கொல்லப்பட்டனர் என்றும் கூறினர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இடம்பெயர்ந்தவர்கள் என்பதாலும் காயமடைந்த பலர் பின்னர் உயிரிழந்ததாலும் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது கடினமாகும். எனது நண்பர் ஒருவரின் மாமியும் காயங்கள் காரணமாக பின்னர் உயிரிழந்தவர்களுள் அடங்குவார்.

 மறுநாளும் (ஜூலை 10) அதேபோன்று அதிகமான குண்டுகள் வீசப்பட்டதாகவும், அதில் ஆகக் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பலர் என்னிடம் கூறினர். குறித்த குண்டுகள் இலங்கை விமானப் படையினாலேயே வீசப்பட்டதாக நவாலியில் நான் சந்தித்த எல்லா மக்களும் என்னிடம் உறுதிபடத் தெரிவித்தனர். வழங்கப்பட்ட மரணச் சான்றிதழ்களில் “வான்வழி குண்டுவீச்சினால் ஏற்பட்ட காயங்களினால் ஏற்பட்ட உயிரிழப்பு” எனக் காரணம் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இது மீளவும் உறுதிப்படுத்தப்பட்டது. 1995 காலப்பகுதியில் எந்தவொரு வேறு ஆயுதக் குழுவும் வான்வழி குண்டுத்தாக்குதல் நடாத்தும் விமானங்களைக் கொண்டிருக்கவில்லை.

உயிரிழந்த தமது குடும்ப உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இறுதிச் சடங்குகளை உரிய முறையில் நடத்தவோ அல்லது அவர்களை உரிய முறையில் அடக்கம் செய்யவோ முடியவில்லை என பலரும் இன்றுவரை துயரப்படுகின்றனர். சவப்பெட்டிகளைப் பெற்றுக் கொள்வது சிரமமாகவிருந்ததுடன், பல சடலங்கள் ட்ரக்டர் வண்டிகளில் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன. சடலங்களை ட்ரக்டர்களில் ஏற்றிக் கொண்டிருந்த நபர் ஒருவருக்கு அவற்றுள் தனது சொந்த மகனின் சடலத்தையும் காண நேர்ந்தது.

. அத்துடன், காயமடைந்தவர்களை யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மாற்றுவதும் கடினமானதாகவிருந்தது. காயமடைந்த பெண் ஒருவர், தான் மாதக் கணக்கில் வைத்தியசாலையிலும் வெளியிலும் தங்கியிருந்ததாகவும் ஆனால் இன்று வரை சரியாக நடக்க முடியவில்லை என்றும் என்னிடம் 

கூறினார். அவரது மகளும் மகனும் கூட கொல்லப்பட்டனர். மற்றொருவர், குண்டுகள் தன்னைச் சூழ வீழ்ந்தபோது வீதியில் தட்டையாக வீழ்ந்துகிடந்து உயிர் தப்பினார். சில நிமிடங்களில் அவர் எழுந்து நின்றபோது இரத்தத்தால் நனைந்திருந்தார். யாரோ ஒருவரது இரத்தம் தோய்ந்த கை அவர் மீது வந்து வீழ்ந்தது. எந்தவித உடல் காயங்களுமின்றி அவர் தப்பியபோதிலும் அதிர்ச்சி மற்றும் மன அழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தக் குண்டுத் தாக்குதலானது தேவாலயக் கட்டடம் (கூரை உட்பட), இந்து ஆலயம் மற்றும் 30 வீடுகள் அடங்கலாக பல கட்டடங்களுக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. கத்தோலிக்க தேவாலயம், இந்துக் கோவில் மற்றும் முழுமையாக அழிக்கப்பட்ட, சேதமடைந்த பல வீடுகள் இன்று மீள நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனினும் நான் அவதானித்த மூன்று வீடுகளில் இன்னமும் இடிபாடுகளே எஞ்சியுள்ளன. மற்றொரு வீட்டின் சுவர் ஊடாக தெரியும் துளைகளை அவதானிக்க முடிந்தது. இரும்புக் கதவொன்று பல நூறு மீட்டர்கள் தூரம் தூக்கி வீசப்படுமளவுக்கு குண்டுகளின் தாக்கம் மிகப் பெரியதாகும்.

இதே விமானம் தீவகப்பகுதியில் தாழப்பறப்பதாக தமிழீழத் தேசியத்தலைவருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அறிந்த தலைவர் தளபதி கடாபி அவர்களைக் கூப்பிட்டு நேரடியாக நீரே சென்று இலக்குத் தவறாமல் சுட்டு வீழ்த்துமாறு கட்டளை வழங்கினார். கட்டளையை ஏற்ற கடாபி அண்ணை விமான எதிர்ப்பு ஆயுதத்துடன் ஒரு மீன் வோட்டில் கரையை நோக்கிச் சென்றுகொண்டுயிருந்தார். ஆனால் வளமையாக வாற நேரத்திற்கு 30 நிமிடம் முன்னரே அவ்விமானம் வந்துகொண்டிருந்தது வோட்டில் இருந்தவாறே அவ்விமானத்தை சுட்டு வீழ்தினார் தளபதி கடாபி அண்ணை. அன்றைய நாள் அவ்விமானத்தோடு சேர்த்து அவ்விமானிக்கும் சாவொறுப்பு வழக்கப்பட்டது. இதை அறிந்த எமது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

14.07.1995 தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு இராணுவ நடவடிக்கையான புலிப்பாய்ச்சலும் பின்னோக்கிப் பாய்ந்த இராணுவமும்…!


சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில், இதுவரை காலமும் நடைபெற்ற சண்டைகளில், யாழ் குடாநாட்டைக் கைப்பற்ற அரசாங்கம் நடத்திய “முன்னோக்கிப் பாய்தல்” இராணுவ நடவடிக்கை பல்வேறு காரணங்களினால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய இராணுவம் குடாநாட்டின் மீது நடத்திய “பவான்” இராணுவ நடவடிக்கையை விட இது அழிப்பிலும், ஆக்ரோஷத்திலும் குறைவாகவும், சிறிலங்காவின் “ஒப்பரேஷன் லிபரேஷனை” விடப் பாரியதாகவும் இருந்துள்ளது. “பவான்” நடவடிக்கையில் உலங்கு வானுர்த்திகளால், ஏவப்பட்ட எறிகணைகளாலும், பீரங்கித் தாக்குதல்களாலும், முன்னேறிய படையினராலும் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் கொல்லப்பட்ட, 6000 – 8000கும் இடைப்பட்ட பொதுமக்களில், “பவான்” நடவடிக்கையின் போதே பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர்.

யாழ்ப்பாண வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள், நோயாளிகள் தரைப்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டது எல்லாக் கொலைகளுக்கும் சிகரமாய் அமைந்தது. “முன்னோக்கிப் பாய்தல்” நடவடிக்கையில், ஷெல் வீச்சுக்களினாலும் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஒரு நிமிடத்துக்கு ஒரு ஷெல்லாவது விழுந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. நவாலி சென்பீற்றர் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொலைச் செயல்களுக்கு மகுடம் வைத்தது போல் இருந்தது. இந்திய அரசாங்கத்தின் பூரண ஆசியுடனேயே இக்கொலைகளும் நடத்தப்பட்டன என்பது முக்கிய விடயமாக உள்ளது. இவ் இராணுவ நடவடிக்கையின் போது 247 பொதுமக்கள் கொல்லப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 470 பேர் படுகாயம் அடைந்து உடல் உறுப்புக்களை இழந்தார்கள். கொல்லப்பட்டவர்களில், 65 பேர் குழந்தைகளாக உள்ளனர். இறந்து, காயமடைந்தவர்களில் அரைவாசிக்கு மேல் பெண்களும், வயது முதிர்ந்தோர்களும் ஆவார். தேவாலயம் மீதான தாக்குதலில் மட்டும் 120 பொதுமக்கள் இறந்தனர். அங்கு இறந்த 20 சிறார்களில் 13 பேர் கைக்குழந்தைகளாகவும் உள்ளனர்.

யாழ். குடாநாட்டில் சிறிலங்காவின் கட்டுப்பாட்டிலுள்ள பலாலியிலிருந்து அச்சுவேலி, சங்கானை, சண்டிலிப்பாய், அளவெட்டிக்கூடாக ஒரு பெரும் அணியும், மாதகலிலிருந்து இன்னொரு பேரணி, கரையோரமாக காரைநகருக்கூடாகவும், ஊர்காவற்துறையில் இருந்து அராலிக்கூடாகவும் இன்னொரு அணியும் வந்து வட்டுக்கோட்டை, துணாவி ஆகிய இடங்களில் சந்திப்பதே முதற்கட்ட நடவடிக்கையாகும். பின்னர் அராலியிலிருந்து, அனைத்து அணிகளும் கல்லுண்டாய் வெளி, பொம்மை வெளிக்கூடாக யாழ். நகரை நோக்கி வந்து அதனைக் கைப்பற்றுவதாக இராணுவத் திட்டம் இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை 09ம் திகதி காலை “முன்னோக்கிப் பாய்தல்” என்ற குறியீட்டுப் பெயருடன், 4 பிரிகேட் படைப் பிரிவுகளைக் கொண்டதான 10000க்கு மேற்ப்பட்ட இராணுவத்தின் இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகியது. அப்போதே இப்போர் நடவடிக்கையின் தோல்வியைத் தேசியத் தலைவர் பிரபாகரன் தீர்மானித்து விட்டதாகக் கருதுகிறேன். பின்னர், எப்படி? எங்கு? எந்த நேரத்தில் இராணுவத் தோல்வியை முற்றுப் பெறச்செய்ய வேண்டும் என்ற அம்சங்களை தலைவர் தீர்மானிப்பதும், அதனை அச்சொட்டாக நடைமுறைப்படுத்துவதுமே எஞ்சி இருந்தன.

முதலில், இராணுவ நடவடிக்கை தமிழ் இனப்பிரச்சினையோடு மட்டும் தொடர்புடையதாக இருக்கவில்லை. கொழும்பில் உள்ளூர் அரசியலோடும் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது. தென்பகுதியில் போர் ஆயத்தங்களின் விளைவாக ஏற்பட்ட விலைவாசி உயர்வுகள், வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டியிருந்தது. மேலும் ஜனாதிபதிப் பதவியை அகற்றப் போவதாக தேர்தல் காலத்தில் பகிரங்கமாக கூறிய போதிலும், சகல வல்லமை பொருந்திய அப் பதவியை விட்டுவிட ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு மனம் ஒப்பவில்லை. ஜூலை 15ம் திகதிக்குள் அதனைச் செய்வதான காலக்கெடு நெருங்கிவந்து கொண்டிருந்தது. எனவே இப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவும், இராணுவ வெற்றி ஒன்றுடன் ஏனைய பிரச்சினைகளைச் சமாளித்து தனது அரசியல் நிலையைப் பலப்படுத்திக் கொள்ளவும் ஜனாதிபதி சந்திரிக்கா விரும்பினார்.

எனவே தான் உக்ரேனிலிருந்து வருவதாக இருந்த AN – 32 துருப்புக்காகவும் விமானங்கள் போன்ற இராணுவத் தளபாடங்கள் முழுமையாக வந்திறங்கும் முன்னரே இராணுவ நடவடிக்கையைத் தொடங்க அரசாங்கம் விரும்பியது. எனவே தான் “இந்தியா டுடே”க்கு அளித்த பேட்டியில் சந்திரிக்கா கூறியிருந்தது போன்று, “ஏராளமான உயிரிழப்புக்கள் ஏற்படும். அப் பகுதியே துடைத்தழிக்கப்படும்” என்று தெரிந்தும் இராணுவ நடவடிக்கையை அவர் அவசரப்படுத்தித் தொடங்கினார்.

இத்தகையதொரு இராணுவ நடவடிக்கை குடாநாட்டின் மீது ஆரம்பமாகப் போவது. மேற்கூறிய உள்ளூர் அரசியல் நோக்குக் காரணமாக ஏற்கனவே வெளிப்படையாகத் தெரிந்திருந்தது. எந்தத் திகதி என்பது தான் தெரியாது இருந்தது. எனவே இதனை எதிர்கொள்ள புதிய போராளிகள் ஏராளமானோரைச் சேர்த்துக் கொள்ளும் நிர்ப்பந்தத்தையும், சர்ந்தர்ப்பத்தையும் விடுதலைப் புலிகளுக்குக் கொடுத்தது. மேலும் மண்டைதீவு மீதான முன் எச்சரிக்கையான தாக்குதல், அரசாங்கத்தின் இராணுவ தந்திரோபாயத்தில் பெரும் ஒரு அடியாகவும், ஓட்டையாகவும் அமைந்தது. (மண்டைதீவு தாக்குதல் தொடர்பான கட்டுரையை நோக்கவும் விரைவில் தேசக்காற்றில் இணைக்கப்படும்) எனவே, இராணுவம் பலாலியிலிருந்து பெரும் படை நகர்வை, கிடுக்கி போன்ற வடிவமைப்பில் (pincermovemenr) நடத்த வேண்டியிருந்தது.

மண்டைதீவில் இருந்தோ ஏனைய முகாம்களில் இருந்தோ ஒரே நேரத்தில் புறப்படும் கடந்த கால நடவடிக்கை, இம் முறை கைக்கொள்ளப்படாது, பலாலியிலிருந்து பெரும்படை நகர்வை திட்டமிட்ட ரீதியில் வழிநடத்துவது என்ற நோக்கத்தின் பாற்பட்டதாக இருக்கலாம். இங்கு தான் இப்படை எடுப்பின் தோல்விக்கான பலவீனம் இருந்தது. அப்பலவீனத்தை தேசியத் தலைவர் மிக நுட்பமகாக, அவகாசமாக பயன்படுத்திக் கொண்டதே, போர் நடவடிக்கையில் திருப்பு முனையாக அமைந்தது. அது சிறீலங்காவின் “முன்னோக்கிப் பாய்தல்” என்ற தாக்குதல் நடவடிக்கை, விடுதலைப் புலிகளின் “புலிப்பாய்ச்சல்” என்ற தாக்குதல் நடவடிக்கைக்கு வழி வகுத்தது.

போர் நடவடிக்கையில் விநியோகம் என்பது முக்கியமான இடத்தை வகிக்கின்றது. மரபு ரீதியான போர்முறையில் இதன் பங்கு இன்னும் அதிகமானது. படை எடுக்கும் இராணுவப் பேரணி, எவ்வளவு நீளமாக்கப்படுகின்றதோ, எவ்வளவு பரவலாக்கப்படுகின்றதோ அவ்வளவுக்கு விநியோகம் என்பது சிக்கலடைகிறது. புதிய துருப்புக்கள், புதிய ஆயுத தளபாடங்கள், வெடிபொருட்கள், உணவு வகைகள் ஆகியவை தொடர்ந்து சண்டைக் களத்துக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருத்தல் வேண்டும். அல்லது படையணிகளில் சீர்குலைவு ஏற்பட்டு விடும். சிறீலங்காவை பொறுத்தவரை, கடற்புலிகளின் செயற்பாட்டால், மிகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டே விநியோகங்கள் ஓரிருமுறை குடாநாட்டு முகாம்களுக்கு வழங்கப்பட்டன.

இச் சர்ந்தப்பத்தையும், பொருத்தமான இடத்தையும் தக்கியதில்தான் பிரபாகரனின் போர்த்தந்திரம் அடங்கியுள்ளது. தாக்கிய இடங்கள், இராணுவப் பேரணியின் கட்டளை, விநியோக மையமாக மாற்றப்பட்டு, தற்காலிக முகாம்களாக அமைந்திருந்த அளவெட்டி, சண்டிலிப்பாய் பகுதிகளாகும். இதில் அடிப்பது தலையிலும், வயிற்றிலும் அடிப்பதைப் போன்றது. இதன் போது 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர், 4 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 17 கனரக கவசவாகனங்கள் இராணுவ விநியோகங்களோடு புலிகளால் கைப்பற்றப்பட்டன.

அங்கிருந்த இராணுவ விநோயோகங்கள் அனைத்தையும் புலிகள் எடுத்துச் சென்றுவிட்டதாக இராணுவ அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டார். மிகவும் தேவையான நேரத்தில் தமது விநியோகங்களை இழப்பது மட்டுமல்ல, எதிரிக்குக் கொடுப்பதும் இரண்டு தரம் தற்கொலை செய்வதற்கு ஒப்பானது. புலிகளின் இத்தாக்குதலோடு, முதுகெலும்பு முறிந்து நகர முடியாத நிலை அரச படைகளுக்கு ஏற்பட்டுவிட்டது. இதன் பிறகு பின்னோக்கிப் பாய்தலைத் தவிர வேறுவழி இருக்கவில்லை.

முன்னோக்கி மேலும் நகர முடியாத நிலைமைக்கு அன்றையதினம் “புக்காரா”  குண்டுவீச்சு விமானம் விடுதலைப்புலிகளால் வீழ்த்தப்பட்டதும் முக்கிய காரணம். வழமையாக மரபு இராணுவங்கள் செய்வது போன்றே, முன்னேற உள்ள பகுதிகள் மீது இடைவிடாத எறிகணைத் தாக்குதல்களை நடத்திவிட்டு, சிறீலங்கா இராணுவ அணிகளும் முதல் 6 நாட்கள் முன்னேறின. அரசாங்கம் திட்டமிட்டவாறு, 3 இராணுவ அணிகளும் வட்டுக்கோட்டைப் பகுதியில் சந்தித்துக் கொண்டன. இனிமேல், யாழ்நகர் மீது தாக்குதல் நடத்துவது குறித்த ஆயுதங்களைச் செய்துகொண்டிருக்கும் போதே திருப்புமுனையான, சண்டையின் திசையே முற்றாகத் திரும்பிவிடும்படியான விடுதலைப்புலிகள் தாக்குதல் இடம்பெற்றது. உணவு தளபாட விநியோகம், புதிய துருப்புக்களை பொருத்தமான இடங்களில் இறக்குதல், காயப்பட்டோரை அப்புறப்படுத்தல், இராணுவ அதிகாரிகளின் போக்குவரத்து ஆகியவற்றிற்கு விமானங்களை, உலங்குவானூர்திகளை பயன்படுத்த முடியாத நிலை, “புக்காரா”வின் வீழ்ச்சியுடன் ஏற்பட்டது. “புக்காரா” வீழ்ந்ததன் பின்னர், குடாநாட்டு காலப்பகுதிகளில் எவ்வித விமானங்களும் பறக்காதது குறிப்பிடத்தக்கது.

ஒரு சண்டையின் வெற்றிக்கு, எதிர்பாராத திடீர்தாக்குதல் கணிசமான பங்கை வகிக்கிறது. முதற்கட்ட நடவடிக்கை பெரும் இழப்புக்களின்றி முடிவுற்ற திருப்தியில் இராணுவம் இருந்தது. இராணுவ அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் யாழ்ப்பாண நகரைப் பிடிக்கும் கனவுகளில் மிதந்தனர். “விடுவிக்கப்பட்ட” பகுதிகளுக்கு எண்ணெய், மின்சாரம், உணவுப்பொருட்களை, புனர்வாழ்வு அமைச்சரை அனுப்பி அவர் மூலமே விநியோகிக்க அரசாங்கம் முடிவெடுத்தது. புலிகள் அப்புறப்படுத்தப்பட்ட பகுதிகளில் உணவுப் பொருட்களைக் கொண்டு போய் வைத்தால், சனங்கள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து, அவர்களை மீறிக்கொண்டு உணவுக்காக இராணுவப் பகுதிகளுக்கு ஓடிவருவார்கள் என்ற கருத்தும் அப்போது சந்திரிக்கா அம்மையாரால் வைக்கப்பட்டது. புலிகள் எல்லோரும் ஓடிப்போய் அகதி முகாம்களில் இருப்பதாகவும் ஒரு கதை பரப்பப்பட்டது. பிரபாகரன் வெள்ளைக் கொடியைத் தூக்கிக் கொண்டு அரசாங்கத்தின் காலில் விழுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வாறு பலூன் போன்று பூரித்த இராணுவத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. பலாலியில் இருந்து புறப்பட்ட பிரதான அணியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அப்பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட பின்னர் கரையோரமாக உள் நுழைந்த அணிமீதும், ஊர்காவற்துறையிலிருந்து அராலிக்கூடாக உள் நுழைந்த இராணுவ அணிமீதும் “புலிப்பாய்ச்சல்” நடவடிக்கை என்ற பேரில் பிரபாகரனின் தலைமையில் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இச் சண்டைகள் வலிகாமம் மேற்குப் பகுதியில் நடந்தன. கடுமையான எதிர்த் தாக்குதல்களைத் தாங்கமுடியாத இராணுவம் பின்வாங்கித் தமது முன்னைய நிலைகளுக்குள் சென்று முடங்கிக்கொண்டது. இச் சண்டைகளின் போது 150க்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இத்துடன் சிறீலங்காவின் (முன்னோக்கிப்பாய்தல்) நடவடிக்கை தோல்வியில் முற்றுப்பெற்றது. ஆயினும

ஞாயிறு காலை, “புலிப்பாய்ச்சல்” ஒரு அம்சமாக காங்கேசன் துறைமுகத்தினுள் தரித்து நின்ற கடற்படைக் கப்பல்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டன.”முன்னோக்கிப் பாய்தல்” மீது ”புலிப்பாய்ச்சல்” ! 14-07-1995 அன்று அதிகாலை

முன்னைய அரசைப் போலவே தற்போதைய அரசும் குடாநாட்டைக் கைப்பற்றுவதிலேயே கண்ணங் கருத்துமாக இருந்து வருகின்றது. முன்னைய அரசின் திட்டம்: குடாநாட்டைச் சூழ ஒரு இராணுவ முற்றுகையை இட்டு – புலிகளின் நகர்திறனைச் சிதைத்து – பின்னர் புலிகளை அழிப்பது ஆகும். இருந்தபோதிலும், இந்த முற்றுகை முயற்சி புலிகள் இயக்கத்தால் முறியடிக்கப்பட்டதால், தற்போதைய அரசு வேறொரு திட்டத்தைத் தயாரித்து வைத்திருக்கின்றது.

அதாவது, யாழ்நகர் உட்பட, குடாநாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகர்களைக் கைப்பற்றி, குடாநாட்டில் இருந்து புலிகளை அடித்து விரட்டுவதுடன் – புலிகளுடனான போரைப் பயன்படுத்தி, கணிசமான தமிழ் மக்களைக் கொன்று – இனப்படுகொலை செய்து – தமிழ் மக்களின் போராட்ட உறுதியையும் நசுக்கிவிடுவதே, சந்திரிகா – ரத்வத்த அரசின் புதிய திட்டமாகும்.

இந்தப் புதிய திட்டத்தின் முதற்கட்டம்தான், சிங்களப் படைகள் நடாத்திய ”முன்னோக்கிப் பாய்தல்” நடவடிக்கை ஆகும். சண்டிலிப்பாய் – சங்கானை – சித்தன்கேணி – சங்கரத்தை – சுழிபுரம் – பொன்னாலை – மூளாய் – வட்டுக்கோட்டைப் பகுதிகளைக் கைப்பற்றிவிட்டு, பின்னர், சண்டிலிப்பாய் ஊடாகவும் வட்டுக்கோட்டைப் பகுதியில் இருந்து அராலிக் கடற்கரை வழியாகவும் – இரண்டு முனைகளுடாக – யாழ் நகரத்தை நோக்கிப் படைகளை நகர்த்துவதே ”முன்னோக்கிப் பாய்தல்” நடவடிக்கையின் இறுதி இலக்காக இருந்தது. கொப்பேகடுவ தயாரித்து நடைமுறைப்படுத்த விரும்பிய திட்டமும் கிட்டத்தட்ட இதை ஒத்தது என்பது கவனிக்கத்தக்கது.

கொப்பேகடுவவும் அவரது திட்டமும் அராலிக் கண்ணியில் சிதறுண்டது போல, சந்திரிகா – ரத்வத்தவின் திட்டம் ”புலிப்பாய்ச்சலுடன” புழுதியில் வீழந்துவிட்டது. அன்று – குடாநாடு எதிர்கொள்ள இருந்த ஒரு அபாயத்தை அராலிக் கண்ணி தற்காலிகமாகத தடுத்தது.
அதேபோல, இன்று – குடாநாடு சந்திக்க இருந்த ஒரு போராபத்தை ”புலிப்பாய்ச்சல்” தற்காலிகமாகத் தடுத்துள்ளது. இந்த, தற்காலிகப் பாதுகாப்புக்களை நிரந்தரப் பாதுகாப்பாக மாற்ற வேண்டிய கடமை எமது இளைஞர் – யுவதிகளின் கைகளில்தான் தங்கியுள்ளது. அதாவது, புலிகள் இயக்கத்தின் ஆட்தொகையை அதிகரிப்பதன்மூலம் இந்த நிரந்தரப் பாதுகாப்பைத் தேடிக்கொள்ள முடியும்.

”முன்னோக்கிப் பாய்தலில்” அரசுப்படைகள் கடைப்பிடித்த நகர்வு யுக்தியை ‘ஆங்கில எழுத்தான ‘யூ’ வடிவிலான தந்திரோபாயம்’ என, சிங்களத் தளபதிகள் வர்ணித்துள்ளனர். அளவெட்டிப் பகுதியில் இருந்து சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியை நோக்கிய ஒரு நகர்வையும், மாதகலில் இருந்து கடற்கரை ஓரமாக மூளாய், பொன்னாலை வழியாக வட்டுக்கோட்டை வரை அடுத்த நகர்வையும் சிங்களப் படைகள் செய்தன. இந்த இருமுனை நகர்வையும் இணைத்து – ஒரு வழங்கல் பாதையை ஏற்படுத்தவும் – அதன்மூலம் படையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் என, சண்டிலிப்பாயிலிருந்து வட்டுக்கோட்டை வரையுள்ள சங்கானை – சித்தன்கேணி – சங்கரத்தை ஆகிய இடங்களையும் சிங்களப் படைகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தன. ஆயினும், இந்த ‘யூ’ வடிவ இராணுவ நிலைகளின் ஒரு பகுதியான சண்டிலிப்பாய் – சங்கானை – அளவெட்டிப் பகுதிகள் மீது, 14-07-1995 அன்று அதிகாலை, ‘யூ’ இனை நடுவில் பிளந்ததுபோல – நடந்த ”புலிப்பாய்ச்சலுடன்”, சிங்களப் படைகளின் படைநகர்வு வடிவம் சிதைவடைந்துவிட்டது.

”முன்னோக்கிப் பாய்தல்” நடவடிக்கையின் வெற்றி பற்றி, சிங்கள அரசு செய்த மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரத்தால் ஆகர்சிக்கப்பட்ட சிங்கள மக்கள், தமது இனம் ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுவிட்டது போல எண்ணி மகிழ்ந்தனர். சூனியத்தில் பிறந்த இந்த மகிழ்ச்சி நெருப்பை, சிங்களச் செய்திதாள்கள் நெய்வார்த்து வளர்த்தன. ”முன்னோக்கிப் பாய்தல்” இராணுவ நடவடிக்கை என்பது – ”புலிகள் தலையில் விழுந்த ஒரு குட்டு” என, ”டெய்லி நியூஸ்” செய்தித்தாள் ஆசிரியர் தலையங்கம் எழுதி மகிழ்ந்தது.

தாண்டிக்குளத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் ‘ஐஸ்கிறீம்’ விநியோகித்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தனர். சிங்கள தேசத்தின் மற்றைய இடங்களில் வெடிகொளுத்தி – இனிப்புப் பண்டங்களை வழங்கி – சிங்கள இனம் வெற்றியைக் கொண்டாடியது. கோட்டை இராச்சியத்தின் படைகள், யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றியது போன்ற உணர்வைச் சிங்கள மக்கள் பெற்றிருந்தனர் போலும்! பலாலிப் படைத்தளத்தைச் சேர்ந்த படையினரைத் தவிர மிகுதி அனைத்துச் சிங்களச் சிப்பாய்களும், தங்களைத் துட்டகைமுனுவின் மறுபிறப்புக்களாகவே எண்ணி மகிழ்ந்து இருந்தனர். ஆனால், ”புலிப்பாய்ச்சலின்” பின்னர் களநிலைமை வேறுவிதமாக மாறிவிட்டது என்ற உண்மையைச் சிங்கள இனம் அறிந்த பின்னர் என்ன செய்தனரோ தெரியவில்லை!

”முன்னோக்கிப் பாய்தல” இராணுவ நடவடிக்கைக்குச் சந்திரிகாவின் அரசியல் தலைமையும், ரத்வத்தவின் படைத் தலைமையும் சேர்ந்து செய்த முன்னேற்பாடுகள் பிரமாண்டமானவை. இப்பாரிய முன்னேற்பாடுகளைக் கண்டு திருப்தியுற்ற ரத்வத்த சொன்னார், ‘புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையை எமது படைகள் தொடங்கும்போது நாடே வியப்புறும்’ என்று. இந்தப் படையெடுப்பிற்கான முன்னேற்பாடுகளில் பெரும் நம்பிக்கை கொண்ட சந்திரிகா அம்மையார் சொன்னார், ‘இது சமாதானத்திற்கான போர்!’ போரின் வெற்றியில் நம்பிக்கை வைத்து இவ்வாறு போருக்கு வியாக்கியானம் கொடுத்தார். சந்திரிகா அம்மையாரும் ரத்வத்தவும் நம்பியதுபோலவே படையெடுப்பிற்கான ஏற்பாடுகளும் பாரிய அளவில் நடந்தன.

‘முன்னோக்கிப் பாய்தல்’ இராணுவ நடவடிக்கை தொடங்க முன்னர் ‘எடித்தாரா’ கப்பல் ஊடாகவும், தரையிறக்கு கலங்கள் ஊடாகவும், 2400 தொன் எடையுடைய வெடிப்பொருட்கள் – பிரதானமாக எறிகணை வகைகள் – காங்கேசன்துறை துறைமுகத்திற்கூடாக இறக்கப்பட்டிருந்தன ஜலண்ட் – 20-07-95 அதேவேளை 25 இற்கும் மேற்பட்ட ரஷ்யத் தயாரிப்பான டாங்கிகளும் – கவச வாகனங்களும் மேலதிகமாகப் பலாலிக்குக் கடல்வழியாக அனுப்பி வைக்கப்பட்டன. இத்துடன் சிங்கள வான்படையும் விமான எதிர்ப்பு ஆயுதங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய ரஷ்யத் தயாரிப்பு விமானங்களை வாங்கி வைத்திருந்தது.

முன்னோக்கிப் பாய்தல் நடவடிக்கை 09-07-1995 ஞாயிற்றுக்கிழமை, அளவெட்டிப் பகுதிக்கூடாகவும், மாதகல் பகுதிக்கூடாகவும் சிங்களப் படைகள் களத்தைத் திறந்தன. முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு பெருந்தொகையில் – பொதுமக்களது இடங்களை நோக்கி – சிங்களப் படைகள் எறிகணை வீச்சுக்களை நடாத்தின. மக்கள் இடம்பெயர்ந்து செல்வதற்குரிய அவகாசத்தையோ அல்லது இன்ன இடத்தால் இடம்பெயர்ந்து செல்லலாம் என்று ஒரு பிரதேசத்தையோ ஒதுக்காது, அனைத்துத் திசைகளிலும் – அப்பகுதியின் அனைத்துக் குக்கிராமங்கள் மீதும் – எறிகணைகளை மழையாகப் பொழிந்தனர். இதனால், அவலமான ஒரு அவசர இடப்பெயர்வுக்கு மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். 

எறிகணைச் சிதறல்பட்டு இறந்த அல்லது காயமடைந்த தம் உறவுகளைக்கூட அந்தந்த இடத்திலேயே விட்டுச் செல்லும் அளவுக்கு, எறிகணை வீச்சுக்களின் கோரமும் – அவை கொடுத்த அதிர்ச்சியும் மக்களை வெகுவாகப் பாதித்தன. தம் கண்களுக்கு முன்னாலேயே தம் உறவுகளைப் பறிகொடுத்ததுடன் – காயமடைந்த உறவுகளைப் பாதுகாக்கவோ அல்லது அப்புறப்படுத்தவோ முடியாத அவலத்தை மக்கள் அனுபவித்தனர்.

இராணுவ நடவடிக்கை நடைபெற்ற பகுதிக்கு அப்பாலும் – எதுவித இராணுவ நோக்கமும் இல்லாமல் – சிங்களப் படைகள் எறிகணை வீச்சில் ஈடுபட்டன. ”புலிகளிடமிருந்து எதிர்ப்புக்களைக் காணவில்லை” என்று அரசே அறிக்கைவிட்டது. அப்படியாயின் ஏன் அந்த எறிகணை மழையை அரசுப் படைகள் பொழிந்தன. இங்கே தான் ஒரு விடயம் தெளிவாகத் தெரியவருகின்றது. அதாவது – ”முன்னோக்கிப் பாய்தல்” இராணுவ நடவடிக்கையின் இலக்குகளில், தமிழ் மக்களின் அழிவும் – இடப்பெயர்வும் அடங்கியிருந்தன என்பதே அதுவாகும்.

இந்த இராணுவ நடவடிக்கையின்போது சிங்கள வான்படையின் சுப்பசொனிக்கும் – புக்காரா விமானங்களும் – உலங்கு வானூர்திகளும், தரையில் நகர்ந்த படையினருக்கு உதவும் வகையில் தாக்குதல்களில் ஈடுபட்டன. புக்காராவும் – சுப்பசொனிக் விமானமும்  8000 அடிக்கு மேலே நின்று குண்டு வீச்சுக்களில் ஈடுபட்டன. இதனால் இந்தக் குண்டுவீச்சு விமானங்கள் போர்முனைப் பகுதிகளில் குண்டுகளை வீசுவதை விட, அதற்கு அப்பால் மக்கள் தஞ்சமடைந்த பகுதிகளிலேயே குண்டுவீச்சுக்களை நடாத்தின. அதன் காரணமாக என்றுமில்லாத அளவுக்கு, விமானக் குண்டுவீச்சுக்களால் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். நவாலி தேவாலயத்தின் மீது நடந்த விமானத் தாக்குதலில் 120இற்க மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தரையில் நகர்ந்த படையினருக்கு உதவியாக அவர்களுக்கு மேல் பறந்து கொண்டிருந்த உலங்குவானூர்திகள், நகர்வின் திசைகளையும் இடங்களையும் மற்றும் புலிகளின் நடமாட்டங்களையும் அவதானித்ததுடன், காயமடைந்த படையினரை ஏற்றும் பணியிலும் ஈடுபட்டிருந்தன.
இந்த இராணுவ நடவடிக்கையின்போது இரண்டு உலங்குவானூர்திகள் தாக்கப்பட்டிருந்ததாக அரசுப்படைகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

அதில் ஒன்று பலத்த சேதத்திற்கு உள்ளாகி – பறக்க முடியாது – மாதகலில் அவசர தரையிறக்கத்துக்கு முயன்றபோது விழுந்து நொறுங்கியதாக, கொழும்புச் செய்திதாளொன்று (சண்டெ ரைம்ஸ் – 16-07-95) தெரிவித்தது. ஏறக்குறைய பத்தாயிரம் விசேட பயிற்சி பெற்ற படையினர் நன்கு ஆயுதமயப்படுத்தப்பட்ட நிலையில் – இந்த இராணுவ நடவடிக்கையில் பங்குகொண்டனர். பாரிய இழப்புக்கள் எதையும் அவர்கள் சந்திக்காததால், யாழ் நகர் நோக்கிய அடுத்த நகர்விற்காகச் சிங்களப் படைகள் ஆவலுடன் காத்திருந்தன.

”படை நகர்வு சுலபமாக அமைந்துவிட்டது என்ற யாழ். நகரிலிருந்து 7 கிலோமீற்றர் தொலைவிலேயே படைகள் நிற்கின்றன” என்றும், அறிவிப்பு போர் முனையில் இருந்து சென்றபோது, சந்திரிகா அரசு பேருவகை அடைந்திருக்க வேண்டும்! இதன் விளைவாக இன்னும் சில நாட்களில் தீர்வுத் திட்டம் பகிரங்கப்படுத்தப்படும் என, நீதி அமைச்சர் பீரிஸ் அறிக்கையும் விடுத்தார். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிட்டு, தமிழ் இனத்தின் மீது அரைகுறைத் தீர்வுத்திட்டம் ஒன்றைத் திணிப்பதற்காக, அரசு காத்திருந்தது.

”முன்னோக்கிப் பாய்தல்” இராணுவ நடவடிக்கை தொடங்கிய நாளில் இருந்து ஒவ்வொரு நாளும், ”ரூபவாகினியும்” சிறீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும், போர்பற்றிய வர்ணனைகளை வெகு டாம்பீகமாகக் கொடுத்துக்கொண்டே இருந்தன. ஆனால் 14 ஆம் திகதியுடன், இந்த விசேட ஒளிபரப்புக்கள் திடீரென முன்னறிவித்தல்கள் இன்றி நின்று போய்விட்டன. அன்றிலிருந்து சிங்கள தேசத்தில் பல வதந்திகள் உலாவத் தொடங்கின. அதை மறுப்பதிலும் போர்க்கள நிலைமைகளை மறைப்பதிலுமே, ரூபவாகினியும் – ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் ஈடுபட்டன.

”புலிப்பாய்ச்சல்” நடவடிக்கை ஒப்பறேசன் ”முன்னோக்கிப் பாய்தலின்” போது சிங்களப் படைகள் கைப்பற்றிய பரந்த நிலப்பகுதி – அதில் கொல்லப்பட்ட மக்கள் தொகை – இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை மற்றும் கண்மூடித்தனமான எறிகணை, வான் தாக்குதல்களாலும் குடாநாட்டு மக்கள் பீதியடைந்த நிலையிலேயே காணப்பட்டனர்.

இந்த நிலையில்தான், சிங்களப் படைகளின் இராணுவ நடவடிக்கைக்குத் தக்க பதிலடி ஒன்று கொடுக்க, தலைவர் ஆயத்தங்களைச் செய்தார். புலிவீரர்களின் பாரிய படையணி ஒன்றை ஒருபெரும் எதிர்த்தாக்குதல் ஒன்றுக்காகத் தயார்ப்படுத்தினார்.

சண்டிலிப்பாய் – அளவெட்டிப் பகுதிகளில் நிலைகொண்டபடி, யாழ். நகரை நோக்கிய அடுத்த கட்ட நகர்விற்காகக் காத்திருந்த படையினர் மீது, 14.07.1995 அன்று அதிகாலை, புலிவீரர்கள் ஒரு பெருந்தாக்குதலைத் தொடுத்தனர். தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் நடந்த இந்தப் பதில் இராணுவ நடவடிக்கைக்குப் ”புலிப்பாய்ச்சல்” எனத் தலைவரே பெயர் சூட்டினார்.பெயரிற்கேற்றாற்போல  புலி வீரர்கள் சிங்களப் படைமீது பாய்ந்து, அதைத் துவம்சம் செய்தனர்! பகல்போல நிலவு இருந்த அந்த இரவில், புலிவீரர்கள் துணிகரமான முறையில் தொடுத்த புலிப்பாய்ச்சல் நடவடிக்கையால், ”முன்னேறிப்பாய்தலில்” பங்கு கொண்ட படையினர் சிதறிப் பின்னோக்கி ஓடினர்! அவர்களது கட்டளைப்பீடமும் – விநியோகமார்க்கமும் சிதைந்து போயின. நூறிற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். அத்துடன், தரைப்படைக்குத் துணையாகக் குண்டுவீச்சில் ஈடுபட்டபடி – சிங்களச் சிப்பாய்களின் போரிடும் உறுதியை ஊக்குவித்துக் கொண்டிருந்த, ”புக்காரா” குண்டுவீச்சு விமானம் அவர்களின் கண்முன்னாலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதால், சிங்களப் படைகளின் நம்பிக்கையும் சிதறிப்போனது.

இதேவேளை, ”முன்னோக்கிப் பாய்தல்”

16.07.1995 அன்று கடற்கரும்புலிகளான மேஜர் தங்கன்,மேஜர் நியூட்டன், கப்டன் தமிழினி ஆகியோர் காங்கேசன்துறைத் துறைமுகத்திற்குள் ஊடுருவி எடித்தாராக்கப்பலை மூழ்கடித்துத் தலைவர் அவர்களின் சொல்லுக்குச் செயல்வடிவம் தந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா கடற்படையின் அதி உச்சப் பாதுகாப்புகடற்படைத்தளத்தினுள்; ஊடுருவி கடற்படையினர் மீதும், கட்டளைக் கப்பல் எடித்தாராவையும் மூழ்கடித்து ஆயத விநியோகத்திற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்திய கடற்கரும்புலிகள், கடற்புலிகள். இலங்கைப் படைகளால் யாழ்க்குடாநாட்டை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட இராணுவநடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சலும் அதற்கெதிரான தலைவர் அவர்களின் நேரடி நெறிப்படுத்தலில் விடுதலைப்புலிகளால் தீடிரென மேற்கொள்ளப்பட்ட அதிரடித்தாக்குதலான புலிப்பாய்ச்சலும் யாவருமறிந்ததே .இப்படை நடவடிக்கையின் வழங்கள் மையம் எது அதற்கென்ன செய்யவேண்டும் என்பதை தீவிரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள்.இது சம்பந்தமான மேலதிக தகவல்களையும் கடற்புலிகளிடம் கேட்டறிந்து அதற்கமைவாக ஒரு சிறந்த தாக்குதற் திட்டம் அதாவது கடற்புலிகளின் நீரடிநீச்சல் பிரிவு மற்றும் கடற்கரும்புலிகளணி கடற்தாக்குதற் படையணிகள் இணைக்கப்பட்டு கடற்புலிகளிடம் தலைவர் அவர்களால் கொடுக்கப்பட்டது.

அதற்கமைவாக காங்கேசன்துறை துறைமுகத்தில் படையினருக்குத் தேவையான பொருட்களை இறக்கிக்கொண்டிருக்கும் கடற்படைக்கலங்கள் மீது கடற்புலிகளின் நீரடிநீச்சல் கடற் கரும்புலிகள் தாக்குதல் நடாத்தும் சமநேரத்தில் கடற்புலிகளின் கடற்தாக்குதல் படையணிகளான லெப் கேணல் சாள்ஸ் படையணியும் லெப்.கேணல் நளாயினி படையணியும் கடற்கரும்புலிகள் அணியும் கடற்புலிகளின் கடற்தாக்குதற் தளபதி லெப்.கேணல் நரேஸ் மற்றும் கடற்புலிகள் மகளிர் படைப்பிரிவுத் தளபதி லெப்.கேணல் மாதவி தலைமையில் (லெப்.கேணல் குணேஸ் லெப்.கேணல் நிமல் லெப்.கேணல் இரும்பொறை லெப்.கேணல் சதீஸ் லெப்.கேணல் நாவரசன் மேஐர் விசும்பன் இவர்கள் வெவ்வேறு கடற்சமரில் பின்னாளில் வீரச்சாவடைந்தனர்.) தலைமையிலான படகுகள் சென்று ஏனைய கடற்படைக்கலங்கள் மீது தாக்குதல் நடாத்தி ஒரு பாரிய சேதத்தை ஏற்படுத்துவது எனத் திட்டமிடப்பட்டது.

அதற்கேற்ப 1995.07.16 அன்று நள்ளிரவு நீரடிநீச்சல் கடற்கரும்புலிகளான மேஐர் தங்கன் அவர்களும் மேஐர் நியுட்டன் அவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்தில் படையினருக்குத்தேவையான பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த கப்பலான எடித்தாராக் கட்டளைக்கப்பல் மீது கப்பலின் அடிப்பகுதியில் குண்டைபொருத்தி வெடிக்கவைத்து காங்கேசன்துறை துறைமுகத்தில் ஒரு வரலாற்றை எழுதிச்சென்றனர்.

என்ன நடந்ததென்று கடற்படையினர் திகைத்து நின்ற சமநேரத்தில் இலங்கைக் கடற்படையின் உச்ச விழிப்புடன் இருந்த காங்கேசன்துறை துறைமுக பாதுகாப்பு வேலியை மிகவிரைவாக ஊடுருவிச்சென்ற கடற்புலிகளின் சண்டைப்படகுகள் துறைமுகப்பாதுகாப்புப் பணியிலிருந்த கடற்படையினர் மீது ஒரு மூர்க்கத்தனமான திகைப்புத் தாக்குதலைத் தொடுத்தனர்.சண்டை ஆரம்பித்த சிறிதுநேரத்தில் இக்கடற்சமரை கடலில் வழிநடாத்திய லெப்.கேணல் நரேஸ் அவர்கள் வீரச்சாவடைய

லெப் கேணல் குணேஸ் அவர்கள் களத்தை தலைமையேற்று தொடர்ந்து வழிநடாத்தினார். மூன்று மணிநேரம் நீடித்த இப்பெரும் கடற்சமர் கடற்படைக்கு ஆள் ஆயுத வழங்கலகளுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்திவிட்டு தலைவர் அவர்கள் கொடுத்த திட்டத்திற்க்கு கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் செயல்வடிவம் கொடுத்தனர்.இவ்வெற்றிகரகடற்சமரை கடற்புலிகளின் பிரதான ராடர் (கதுவி) நிலையமான கப்டன் அலன் முகாமில் தலைவர் அவர்கள் அருகிருந்து சிறப்புத்தளபதி சூசை அவர்களும் தளபதி கங்கைஅமரன் அவர்களும் துணைத் தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்களும் தலைவர் அவர்களின் ஆலோசனைப்படி வழிநடாத்தியிருந்தார்கள்.

இவ் எடித்தாராக் கட்டளைக் கப்பலானது 14.07.1990 கடற்கரும்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி பாரிய சேதத்திற்க்குள்ளானது .கடற்கரும்புலிகளின் தாக்குதலுக்குள்ளான எந்தவொருகப்பலும் தமிழீழக் கடற்பரப்பில் உலாவக்கூடாது என்ற தலைவர் அவர்களின் சொல்லுக்கு மதிப்பளித்து கடற்கரும்புலிவீரர்கள் இக்கப்பலை மூழ்கடித்து காவியமானார்கள்.


இக்கடற்சமரில் வீரகாவியமானவர்கள் விபரம் .
கடற்கரும்புலி மேஜர் தங்கம் (வீரய்யா மயில்வாகனம் – பதுளை – சிறிலங்கா)
கடற்கரும்புலி மேஜர் செந்தாளன் (நியூட்டன்) (பிரான்சில் டக்ளஸ் – குருநகர், யாழ்ப்பாணம்)
கடற்கரும்புலி கப்டன் தமிழினி (சிவப்பிரகாசம் கனிமொழி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்.கேணல் சந்திரன் (நரேஸ்) (சிவராஜசிங்கம் நவராஜன் – திருகோணமலை)
கடற்புலி லெப்.கேணல் மாதவி (திருநாவுக்கரசு கலைச்செல்வி – இன்பருட்டி, யாழ்ப்பாணம்)
கடற்புலி கப்டன் வில்வன் (ஏரம்பமுர்த்தி ஜீவானந்தன் – பெரியபோரதிவு, மட்டக்களப்பு)
கடற்புலி கப்டன் கமலம் (குழந்தைவேல் சிறரஞ்சினி – காரைநகர், யாழ்ப்பாணம்)
கடற்புலி கப்டன் தாயகி (மகாலிங்கம் ரஞ்சினிதேவி – யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்டினன்ட் பூமதி (கனகரட்ணம் சாந்தனி – வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்டினன்ட் தவமலர் (துரைசிங்கம் கேமாவதி – மானிப்பாய், யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்டினன்ட் சோபிதா (தர்மலிங்கம் மாலதி – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் நித்தியா (மாரிமுத்து மஞ்சுளா – மாங்குளம், முல்லைத்தீவு)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் அருள்மதி (வெற்றிவேலாயுதம் விஜந்திரராணி – யாழ்ப்பாணம்)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் நதியரசி (செல்வராசா சாந்தவதனி – முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு)
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

இராணுவ நடவடிக்கைக்குத் தேவையான விநியோகங்களைச் செய்துகொண்டிருந்த ”எடித்தாரா” என்ற கட்டளைக் கப்பல், காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து, 16.07.1995 அன்று அதிகாலை, கரும்புலித்தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்டது. 2628 தொன் நிறையுடைய இந்தக் கட்டளைக் கப்பலைச் சிங்கள அரசு இழந்ததால், ”முன்னோக்கிப் பாய்தலின்” விநியோக வழியும் மூடப்பட்டுவிட்டது. இவ்விதம், ”முன்னோக்கிப் பாய்தல்” நடவடிக்கைக்காக மூன்று போர் அரங்குகளிலும் பங்குகொண்டிருந்த சிறீலங்காவின் முப்படைகளும், புலிப்பாய்ச்சலுக்கு இலக்காகிப் பாரிய அழிவுகளைச் சந்தித்தன. இதனால், ”முன்னோக்கிப் பாய்தல்” பலத்த பின்னடைவைச் சந்தித்தது.

”புலிப்பாய்ச்சல்”, நடவடிக்கையின் வேகத்தையும் – வீரியத்தையும் – அது சிங்களப் படைகளுக்குக் கொடுத்த இழப்புக்களையும் கணிப்பீடு செய்த சிங்களத் தளபதிகள், தமது ”முன்னோக்கிப் பாய்தல்” நடவடிக்கையை நிறுத்தி, கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து விரைவாகப் பின்வாங்க முடிவெடுத்தனர். புலிகளின் பாரிய சேனை ஒன்றை மிக விரைவாக ஒன்றிணைந்து, தாக்குதல் வியூகங்களையும் – தந்திரோபாயங்களையும் அவர்களுக்கு விளக்கி, மூவகைப் போர் அரங்குகளிலும், ஒழுங்கான முறையில், தலைவர் அவர்கள் படைநகர்த்தலையும் – தாக்குதல்களையும் செய்வித்த விதம், சிங்களத் தளபதிகளை வியப்பிற்குள்ளாக்கியிருக்கும்.

”புலிப்பாய்ச்சலின்” விளைவுகள்
புலிகள் இயக்கம் பெயர்சூட்டி நடாத்திய தாக்குதல்கள் எல்லாவற்றுககுள்ளும் ”புலிப்பாய்ச்சல்” தனித்துவம் மிக்கதாக இருக்கின்றது. அதற்குக் காரணம், மூன்று போர் அரங்குகளிலும் (தரை – கடல் – வான்) ”புலிப்பாய்ச்சல்” நடாத்தப்பட்டதே ஆகும். அத்துடன், பீதியுற்றிருந்த குடாநாட்டு மக்களின் மனங்களில் நம்பிக்கை விதையைத் தூவிய சமராகவும் ”புலிப்பாய்ச்சல்” அமைந்துவிட்டது. அதேவேளை, குடாநாட்டைக் கைப்பற்றும் எண்ணத்துடன் சிங்களப் படைத்துறைத் தலைமை வரைந்த ஒரு போர்த்திட்டத்தை, ”புலிப்பாய்ச்சல்” மறுபரிசீலனை செய்யவைத்து விட்டது. ”புலிப்பாய்ச்சலின்” போது ”புக்காரா” குண்டுவீச்சு விமானம் ஒன்றும் – சக்திவாய்ந்த கட்டளைக்கப்பல் ஒன்றும் அழிக்கப்பட்டுவிட்டன.

தனித்த ஒரு விமானம், தனிய ஒரு கப்பல் என்றில்லாமல் சிங்கள வான்படைக்கும் கடற்படைக்கும் இந்த இழப்புக்கள் பெரிய பாதிப்புக்களைக் கொடுத்துள்ளன. ஏனெனில் புலிகளின் விமான எதிர்ப்பு ஆயுதங்களில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்காகவே, 8,000 அடிக்கு மேலே நின்று விமானங்கள் குண்டுவீசின. அத்துடன் இத்தகைய விமான எதிர்ப்பு ஆயுதங்களை ஆபத்து நிறைந்த போர்முனைக்குப் புலிகள் எடுத்துவரமாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கையும், சிங்களத் தளபதிகளுக்கு இருந்தது. அதனால்தான் சமர்க்களத்துக்கு மேலேயே பறந்து திரிவதில் அக்கறை காட்டின. ஆனால், சிங்கள வான்படையின் அந்த நம்பிக்கையும் – முற்பாதுகாப்பும் பொய்த்துவிட்டன. இதனால், இனிவரும் சமர்களில் எப்படித் தமது பங்கை ஆற்றவது என்று, சிங்கள வான்படை குழம்பியபடி உள்ளது.

இதேபோன்றுதான், சிங்களக் கடற்படையும் திகைத்தபடி உள்ளது. பூரண பாதுகாப்பு நிறைந்த ஒரு துறைமுகத்தில் – அதுவும் சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதியில் – கடற்புலிகளின் துணையுடன் வெற்றிகரமாக உட்புகுந்து கடற்கரும்புலிகள் நடாத்திய தாக்குதலில், வடபுலக் கடலில் நம்பிக்கை நட்சத்திரமான ”எடித்தாரா” மூழ்கிவிட்டது. கரும்புலிகளின் மற்றைய படகு விபத்துக்குள்ளானதால், அதன் இலக்கான தரையிறங்கு கலம் தப்பிப் பிழைத்துவிட்டது. இதேவேளை, காங்கேசன்துறை துறைமுகத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த எட்டு ‘டோறா’ சண்டைப் படகுகளுடன் கடற்புலிகள் நடாத்திய சிலமணிநேரக் கடற்சண்டையும், ஒரு முக்கிய இராணுவ பரிமாணத்தைப் பெற்றுவிட்டது. ஒரு டோறா படகைக் கொண்டு வடபுலக் கடற்பரப்பையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சிங்களக் கடற்படை. இப்போது, எட்டு டோறாப் படகுகளை ஒருங்கே வைத்துக்கொண்டும் ஒரு கட்டளைக் கப்பலைப் பாதுகாக்க முடியாது போய்விட்டது.

”எடித்தாராவின்” இழப்புடன், வடபுலக் கடற்பரப்பு மீதான கண்காணிப்பும் – வடபுலப் படை முகாம்களுக்கான விநியோகமும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. சுருக்கமாகச் சொன்னால், ‘புலிப்பாய்ச்சலின்’ விளைவால், சிங்கள அரசின் முப்படைகளினது நகர்திறனும் கடுமையாகச் சேதப்பட்டு விட்டது.
இதேவேளை, மரபுவழிப் போர்முனையில் புலிகளுடன் போரிட்டால் அரசுப் படைகள் பாரிய வெற்றியைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை, இராணுவத் தலைமைக்கு உண்டு, பெரியதொரு ஆட்பலத்தைக் கொண்ட தங்களது முப்படைப் பலமும் – அதற்கு இருக்கும் பாரிய படைக்கல சக்தியும் அந்த நம்பிக்கைக்குப் பிரதான காரணம் ஆகும்.

”முன்னோக்கிப் பாய்தல்” நடவடிக்கையிலும் பத்தாயிரத்திற்கும் அதிகமான படையின் பங்கு கொண்டிருந்தனர். அதில் பயன்படுத்தப்பட்ட படைக்கல சக்தியின் அளவு (எறிகணைகள் – ரவைகள் – விமானக்குண்டுகள்) உண்மையில் பாரியதாகும். ஆனாலும், படையினரால் சமரை வெல்ல முடியவில்லை. எனவே, மரபுவழிப் போர்முறைமூலம் இடங்களைக் கைப்பற்றுதல் என்பதுபோல, கைப்பற்றப்பட்ட இடங்களைப் பாதுகாத்துக்கொள்வது என்பது மிக முக்கியமானதாகின்றது. புலிவீரர்களின் போர்த்திறனும் – போர்த்தந்திரங்களும் கைப்பற்றப்பட்ட இடங்களில் இருந்து படையினரை விரட்டியடித்துவிட்டன. ஆயினும், சிங்களப் படைகளின் ஆட்தொகைக்குப் புலிப்படையின் ஆட்தொகையும் ஈடுகொடுக்காதுவிட்டால், நிரந்தர வெற்றியைப் புலிப்படை பெறமுடியாது போய்விடும், எனவே, இனிவரும் சமர்களில் புலிகள் இயக்கம் வெற்றிபெற வேண்டுமாயின், அதன் ஆட்பலம் அதிகரிக்கப்பட்டேயாக வேண்டும். புலிகள் இயக்கத்திற்காக ஆட்தொகையின் அவசியத்தைப் பொறுத்தளவில் போரின் வளர்ச்சிக் கட்டத்தை அது சுட்டிக்காட்டுவதுடன், வெற்றியின் இன்றியமையாத தேவையாகவும் அது மாறிவிட்டது.

வளர்ச்சியும் வெற்றியும்
14.07.1991 அன்று, சிங்களப் படையின் ஒரு வெற்றிகரமான கடல்வழித் தரையிறக்கம் வெற்றிலைக்கேணியில் நடந்தது. அந்தத் தரையிறக்கத்துடன், ஆனையிறவுத் தளம் மீது புலிவீரர்கள் நடாத்திய தாக்குதலின் போக்கு திசைமாறி, சிங்களப் படைகளுக்குச் சாதகமாக மாறிவிட்டது. தேபோல, சரியாக 4 ஆண்டுகளுக்குப் பின்னர், 14.07.1995 அன்று சண்டிலிப்பாய் – அளவெட்டிப் பகுதியில் புலிவீரர்கள் செய்த ”புலிப்பாய்ச்சலால்” சிங்களப் படைகளின் ஒரு இராணுவ நடவடிக்கையே சிதறடிக்கப்பட்டுவிட்டது!

மண்டைதீவுத் தாக்குதல், சிறீலங்கா இராணுவ நடவடிக்கைக்கு முன் எச்சரிககியாக நடத்தப்பட்டது. என்று கூறினால், காங்க்கேசந்துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பின்வரக் கூடிய தாக்குதல்களை எச்சரிக்கையாகக் கொண்டு நடத்தப்பட்டது என்று கருதுகிறேன். கடற்புலிகள் என்ற படைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 4 மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்த மிகப்பெரிய கடற்சண்டை இதுவென வர்ணிக்கப்படுகிறது.

அவரது அரசியல் சரித்திரம் மேலும் பலவீனமடைந்துள்ளது. சமாதானத் தூதுவர் என்ற தோற்றம் அகன்று, மரண தேவதை என்ற உண்மைத் தோற்றம் வெளிப்பட்டுள்ளது. தமிழ் மக்களை புலிகளிடமிருந்து பிரித்து, அவர்களின் மனங்களை வென்று, அவர்கள் விரும்பும் தீர்வை வழங்குதல் என்ற என்ற அவரின் வார்த்தைகள் இரத்தக் குளிப்பாள் முழ்கடிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களை விடுதலை செய்தல் என்பது அவர்களைப் பரலோகத்துக்கு அனுப்புதல் என்றும், அமைதி என்பது தமிழ்பகுதிகளில் மயான அமைதியைத் தோற்றுவித்தல் என்றும் அர்த்தங்களை இந்த இராணுவ நடவடிக்கை தந்துள்ளது. இராணுவத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும், அவசரகால பொதுத்தொண்டு நடவடிக்கைகளிலும், தமிழ் மக்களின் செயல்ப்பாடுகள் பூரணமாக இருந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதியே தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமை, மனிதாபிமான அமைப்புக்கள், அரசாங்கங்கள் ஆகியவற்றின் பலத்த கண்டனத்தை சந்திரிக்கா அரசாங்கம் சம்பாதித்துக் கொண்டது. இனப்படுகொலையும், சிங்கள மேலாதிக்கமும் தான் சந்திரிக்கா அரசாங்கத்தினதும் தீர்வு என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொண்டது.

நிலப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் அதேவேளை, கிளர்ச்சிக்காரரையும் அவர்களது தலைவர்களையும், ஆதரவளிக்கும் பொதுமக்களையும் எவ்வளவு கொல்ல முடியுமோ அவ்வளவுக்கு கொல்ல வேண்டும். இதுவே இறுதி வெற்றிக்கு வழி என்றரீதியில் அரச இராணுவம் செயற்பட்டது. மிகப்பெரும் படை எடுப்பை மிகக் குறுகிய நாளில் மிகக்குறைந்த போராளிகளின் (80 போராளிகள்) இழப்புக்களுடன் முறியடித்தது. போர்க்கலை பற்றிய ஆய்வாளர்களின் ஆய்வுக்கு உட்படப் போவது உண்மை. நவீன உலகின் தலை சிறந்த கொரில்லாத் தலைவர் என்ற பெருமையும் எமது தேசியத் தலைவருக்கு இது பெற்றுத்தரும் என்று நிச்சயம் நம்பலாம்.

“முன்னோக்குப் பாய்தல்” நடவடிக்கையின் போது, விடுதலைப் புலிகள் மரபு ரீதியான இராணுவம் போன்று செயல்படவில்லை என்று எதிரான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. விடுதலைப் புலிகள் தன்னளவில், மரபுரீதியான, ஒழுங்கமைந்த இராணுவமாக வளர்ச்சி பெற்று வருகின்ற போதிலும், சிங்கள இராணுவத்துடனான பாரிய சண்டைகளின் போது கொரில்லா உத்தி ரீதியிலேயே சண்டையிட வேண்டும். எப்போதுமே ஆயுதபலம், ஆட்பலம் கூடிய நிலையில் உள்ள சிறீலங்கா இராணுவத்துடன் குறைந்த ஆள், ஆயுத என்னிக்கையுடனான போராளிகள் மரபுரீதியில் மோதுதல் தற்கொலைக்கு ஒப்பாகும். இவ்வாறு சர்ந்தப்பத்துக்கு ஏற்றவாறு உத்திகளை மாற்றும் தன்மை (flexibility) கொரில்லா இராணுவத்தின் சிறப்புத் தன்மையே தவிர குறைபாடு அல்ல. விடுதலைப் புலிகள், சிறீலங்கா இராணுவம் முன்னேறிய பகுதிகளை விட்டு விலகியது உத்தி ரீதியான (tactical) பின் வாங்களே தவிர, தந்திரோபாயத் திட்ட அடிப்படையிலான (strategic) நகர்வே. சிறிலங்கா இராணுவப்படைகள், தமது இராணுவ நடவடிக்கையின் இலக்கை அடையமுடியாது (யாழ் குடாநாட்டைக் கைப்பற்றுதல்) தமது பலாலித் தளத்துக்கு பின் வாங்கியதையே நாம் தந்திரோபாயத் திட்ட அடிப்படையிலான பின்வாங்கல் என்று கூறலாம்.

  20/07/1995 அன்று கொக்குத் தொடுவாய் முகாம் தாக்கியதால்அதில் 180 பெண் போராளிகள் வீரச்சாவு அடைந்தனர்.

28.07.1995  18 தொடக்கம் 20 வரையான இளைஞர் யுவதிகளை அனைத்து மாவட்டங்களிலும் இருந்து எடுத்து தலைவர் சிறுத்தைப் படையணி உருவாக்கினார் எனவும், அதற்குப் பொறுப்பாக ராஜீவ் அண்ணையும் பயிற்சி ஆசிரியராக செல்லக்கிளியும் இருந்தார்கள் என முன்னர் குறிப்பிட்டுயிந்தேன். அவர்கட்டு என்ன நடந்தது என்று இப்பொழுது பார்ப்போம்.

மணலாற்றில்  அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் ஐந்து படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தி அதை முற்றாக அழிக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் திட்டமிட்டார்கள். அதற்கான மாதிரிப் பயிற்சிகளும் நிறைவிற்கு வந்தது. ஆனால் இதன் வேவு நடவடிக்கையில் துணைப் படையினரையும் இணைத்துக்கொண்டார்கள். இந்தத் துணைப்படை வீரன் எந்தப் பக்கத்தால் இராணுவத்தை தாக்கவருவருவார்கள் விடுதலைப் புலிகள்  என்ற தகவலை இராணுவ அதிகாரிகளிற்குத் தெரியப்படுத்தி விட்டான், அதனால் இராணுவமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது,…..

அச்சண்டைக்கான கட்டளைத்தளபதி சொர்ணம் அவர்களும் பெண் போராளிகளின் நேரடிக் கட்டளை அதிகாரியாக லெப்.கேணல் கோமளா அவர்களும் நியமிக்கப்பட்டனர். கொமாண்டோ பயிற்சி எடுத்த 200 றிற்கு மேற்பட்ட போராளிகளே உள்ளே இறங்கி கேம்பைப் பிடிப்பது எனத் திட்டம் தீட்டப்பட்டது. 28.07.1995  அன்று இரவு தளபதி சொர்ணம் கட்டளை வழங்க லெப். கேணல் கோமளா தனது பெண் போராளிகளைக் கூட்டிக்கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தார். எதிர்பார்த்துக் கொண்டிருந்த லெப்ரினன் ஜெனரல் ஐனகப்பேரேரா தலைமையிலான இராணுவ வீரர்கள் செறிவான சூட்டை வழங்கிக்கொண்டிருந்தார்கள். உள்ளே நுழையும் போதே கேணல் கோமளா உட்பட 180 கோமாண்டோ பயிற்சி எடுத்த பெண் போராளிகள் கொல்லப் பட்டனர்.

. எனினும் சில காட்டிக்கொடுப்புக்களால் இத்திட்டம் வெற்றியளிக்காத போதும் படைத்தளத்திற்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா படைகளின் இரு ஆட்டிலறிப் பீரங்கிகள் உட்பட பெருமளவு படைக்கலங்களை அழித்திருந்தனர்.

தொடர்ந்து வீரச்சாவு அடைந்த பெண்போராளிகளின் பெண் உறுப்புக்களில் பெரிய பெரிய கட்டைகள் இறுக்கி செத்தவர் என்றும் ஒரு மனித இரக்கம் அல்லாமல் அவர்களின் உடல்கள் கத்திகளால் வெட்டி துண்டு துண்டாகக் கொடுமைப்படுத்தி பின்னர் ICRC ஊடாக 180 போராளிகளின் உடல்களும் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டது. பின்னர் இவ்வித்துடல்கள் இராணுவ மரியாதையுடன் துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட்டது. அடுத்து காட்டிக் கொடுத்த துனைப்படை வீரனைப்பிடித்து விசாரணை  முடிந்தபின் அவருக்குச் சாவொறுப்பு வழங்கப்பட்டது. இத்துடன் பெண் கொமாண்டோ அணியின் செயல்பாடு நிறைவிற்கு வந்தது. இதில் எஞ்சியிருந்த சில குறிப்பட பெண் போராளிகளிற்கு போராளி ஆரவி பொறுப்பாகயிருந்தார்.

20.09.1995 அன்று காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பில் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

 மாதகல் கடற்பரப்பிலும் வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் அன்பு, மேஜர் கீர்த்தி, கப்டன் செவ்வானம் மற்றும் சிவா ஆகியோர் வீரச்சாவு அடைந்தனர்.  வலிகாமம் பிடிபட்டுக்கொண்டிருந்த காலத்திலே இந்த வீரர்களின் தியாகம் நடந்தது.

கடற்கரும்புலிகள் மேஜர் கீர்த்தி மற்றும் கப்டன் சிவா ஆகியோர் காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதும் கடற்கரும்புலிகள் மேஜர் அன்பு மற்றும் கப்டன் செவ்வானம் ஆகியோர் மாதகல் கடற்பரப்பில் வைத்து கடற்படையின் வழங்கல் கப்பலான “லங்கா முடித” மீதும் தமது வெடிமருத்து நிரப்பப்பட்ட படகுகளை மோதி வெடிக்க வைத்தனர்.

கடற்கரும்புலிகளின் இத்தாக்குதல்களின்போது குறித்த இரு கலங்களும் கடுமையாகச் சேதமடைந்ததுடன் கடற்படையினர் பலர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்துமிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

20.09.1995 அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதான தாக்குதலில்……

கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி

(வல்லிபுரம் நகுலேஸ்வரன் – பளை, யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி கப்டன் சிவன் (சிவா)

(கிருஸ்ணபிள்ளை மோகனதாஸ் – மண்டைதீவு, யாழ்ப்பாணம்)

அடுத்த நடவடிக்கை

மாதகல் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் மீதான தாக்குலில்

கடற்புலிகளின் முல்லை மாவட்டச் சிறப்புத் தளபதி

கடற்கரும்புலி மேஜர் அன்பு (அந்தமான்)

(இராமசாமி இராஜ்பவான் – அல்வாய், யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி கப்டன் செவ்வானம்

(கிருஸ்ணபிள்ளை சுமதி – மூளாய், யாழ்ப்பாணம்)

,

22/09/1995 அன்று அதிபர் சந்திரிகா தலைமையிலான அரசு மீண்டும் ஒரு இனப்படுகொலையை மேற்கொண்டது. அது நாகர் கோவில் பாடசாலைமீது மேற்கொள்ளப் பட்டது. 

1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 06.30 மணியளவில் நான் வீட்டிலிருந்து புறப்பட்டு வருகின்ற போது காலை 07.30 மணியளவில் மணற்காட்டில் ஒரு குண்டுச் சத்தம் கேட்டது.அப்போது “உந்தப் பக்கம் போகாதேயுங்கோ” சேர் எனச் சிலபேர் கூறினார்கள். அப்போது நான் “புக்காரா” போயிடும், பிள்ளைகள் பாடசாலைக்கு வருவார்கள் எனக் கூறிவிட்டுப் பாடசாலைக்கு வந்து சேர்ந்தேன்.

அன்றைய தினம் சரஸ்வதிப் பூஜையை நடாத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்ய வேண்டியிருந்தமையால் காலையில் எமது கூட்டம் இடம்பெற்றது. அதில் உமாதேவி என்ற சிறுமி மிக அழகாக சில நற்சிந்தனைகளைக்   கூறியிருந்தார். அனைவரும் அவரைப் பாராட்டியிருந்தார்கள். பின்னர் முற்பகல்11.15 மணியளவில் பாடசாலையில் இடைவேளை விடப்பட்டது.

மாணவர்கள் வீடு சென்று  மீண்டும் திரும்பி வந்து விட்டார்கள். இதன்பின்னர் எங்களில் சில ஆசிரியர்கள் ஒன்றுசேர்ந்து சரஸ்வதி பூசையை எவ்வாறு நடாத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை நடாத்திக் கொண்டிருந்தோம். அந்தவேளையில் செம்பியன்பற்றுக்கு அண்மையில் ஒரு குண்டுச் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்திலேயே எங்களுடைய பிள்ளைகள் கதிகலங்கி விட்டார்கள்.

பெற்றோர்கள் அழைக்கும் சத்தம் கேட்டுப் பல மாணவர்கள் பாடசாலைக்கு வெளியே போய்விட்டார்கள். இந்தநிலையில் தான் எமது பாடசாலைக்கு நேராக புக்காரா விமானங்களின் ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்றது.  அந்த வேளையில் நானும், எனது ஆசிரியர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் கதி கலங்கி விட்டோம். பாடசாலைக்கு முன்பாக ஓடிய சில சிறுவர்கள் தாக்குதல் காரணமாக அவ்விடத்திலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.

இந்தநிலையில் தான் நாங்கள் பயந்தவாறு பாடசாலைக்கு மேற்குப் பக்கமாக ஓடினோம். காட்டுக்குள் ஒழிந்ததால் விமானத் தாக்குதலிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமென்ற எண்ணத்தில் தான் நாம் இவ்வாறு செயற்பட்டோம். இதன் பின்னர் மீண்டும் அவ்விடத்தைச் சுற்றிவந்த “புக்காரா” தாக்குதல் நடாத்தியது. அப்போது எனக்குப் பக்கத்தில் நின்ற பழனி எனும் மாணவன் சேர் பயப்படாதையுங்கோ என்று கூறினான்.

அவன் அவ்வாறு கூறி ஓரிரு நிமிடங்கள் தான் கடந்திருக்கும். திடீரென அவனுடைய தலையிலிருந்து இரத்தம் வரத் தொடங்கி விட்டது. பின்னர் “புக்காரா” அங்கிருந்து சென்ற பின்னர் மீண்டும் பாடசாலைக்குள் சென்றோம். அங்கு 65 மாணவர்கள் வரையானோர் காயமடைந்திருந்தனர். இதற்கிடையில் இந்தக் கிராமத்திலிருந்த பெரியோர்களும், கிராமத்தைச் சுற்றியிருந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து காயப்பட்ட எமது பிள்ளைகளைத் தமது வாகனங்களில் ஏற்றி மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள்.

19 மாணவர்கள் காயம் காரணமாக உடனடியாகவே இறந்துவிட்டார்கள். இரண்டு மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுச் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும், அவர்கள் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை.

நான் மந்திகை வைத்தியசாலைக்குச் சென்று பார்த்த போது பல மாணவர்களை இரத்தம் ஒழுகிய நிலையில் படுத்தியிருந்தார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் இறந்தநிலையில் தான் காணப்பட்டார்கள். ஆனாலும், என்னுடைய பிள்ளைகள் இறந்து விட்டார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

விமானத் தாக்குதல்கள் காரணமாக கொல்லப்பட்ட மாணவர்கள் தொடர்பாக எந்தவித விசாரணைகளும் நடாத்தப்படாமல் அவர்களது பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும் உடல்கள் கையளிக்கப்பட்டன. இவ்வாறு கையளிக்கப்பட்டவர்களில் ஒரு சிலரின் உடல்கள் அன்றைய தினமே அடக்கம் செய்யப்பட்டன.

இந்தச் சம்பவம் காரணமாக மூன்று நாட்களாக நான் வீடு செல்லாமல் கொல்லப்பட்ட மாணவர்களின் வீடுகளிலேயே நான் தங்கியிருந்தேன். இதன்  பின்னர் மாணவர்களின் வரவின்மையால் இந்தப் பாடசாலை பல நாட்களாக இயங்கவில்லை.

மிகுந்த துயர் மிக்க இந்தச் சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் இந்தப் பாடசாலையின் அதிபராக நான் கடமையாற்றியதை நினைத்து இன்றுவரை நான் வேதனைப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்.

விமானத் தாக்குதல் இடம்பெற்ற போது இந்தப் பாடசாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்றவரும்,  தற்போது பருத்தித்துறைப் பிரதேசசபை உறுப்பினராகவுமுள்ள ஆ. சுரேஸ்குமார் தாம் சந்தித்த நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அக்காலத்தில் இந்தப் பாடசாலை இடநெருக்கடி உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடசாலை மீது விமானக் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்ட போது நான் இங்கு ஐந்தாம் தரத்தில் கல்வி கற்றேன்.

நாகர்கோவில் கிராமத்தைப் பொறுத்தவரை எங்களுடைய பிரதான வாழ்வாதாரத் தொழிலாக கடற்தொழிலே இருந்து வருகிறது. இந்த நிலையில் நாங்கள் இந்தப் பாடசாலையில் படிக்கும் காலத்தில் எமக்கென சில சலுகைகளை எமது ஆசானாகவும், தந்தையாகவும் செயற்பட்ட மகேந்திரம் சேர் வழங்கியிருந்தார்கள். நீங்கள் கடற்தொழிலுக்குச் சென்றாலும் பாடசாலைக்கு வருகை தராமல் நின்றுவிடக் கூடாது. தொழிலுக்குச் சென்றுவிட்டு ஒரு பாடவேளை கடந்த பின்னரும் நீங்கள் பாடசாலைக்கு வரலாம். உங்களுக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.இப்படி கஸ்ற்றப்பட்டு வளர்ந்த நாங்கள் எனக் கூறி தனது ஞாபங்களை நினைத்து அவர் கவலையடைந்தார்.

17/10/1995 “சூரியக் கதிர்” ராணுவ நடவடிக்கை. என்ற பேரில் மக்கள் வாழ்விடர்களை நோக்கிப் பாரிய செல் மற்றும் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டது சிங்களப் படை.

 அதனால் 30/10/1995 விடுதலைப்புலிகளின் கோட்டையாகயிருந்த வலிகாமம் இடம் பெயர்வு அன்றுநடந்தது.

உலக வரலாற்றில் எந்த ஒரு இனமும் சந்தித்திராத பாரிய இடப்பெயர்வை யாழ் மக்கள் சந்தித்தார்கள். 1995-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி இந்த மாபெரும் இடப்பெயர்வு நடந்தது. இதற்கு காரணமாக இருந்தது தான் அன்றைய இலங்கை அதிபர் சந்திரிகாவின் ‘சூரியக் கதிர்’ ராணுவ நடவடிக்கை. இந்த சூரியக்கதிர் நடவடிக்கை 1995 அக்டோபர் 17 ல் தொடங்கப்பட்டது.

இந்த நடவடிக்கையை முறியடிக்க தமிழீழ விடுதலைப்புலிகள் தளபதி சொர்ணம் தலைமையில் இராணுவத்திற்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தினார்கள். ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. அதனால் பின் வாங்குவதைத்தவிர விடுதலைப் புலிகளிற்கு வேறுவழி இருக்க வில்லை.

அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள். யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க வில்லை.

ஷெல் வீச்சுக்கள் அதிகமாகும் போது ஏதாவது ஒரு ஷெல் என் தலையில் விழுந்து யாரேனும் என்னைக் கூட்டி அள்ளிச் செல்லக் கூடும் என நினைத்திருப்பான். ஆனால், ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டுத் தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இன்றைய மாலை அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது?என்ன செய்வது? என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள்.இரவு நெருங்குகிறது. இன்றைக்கும் புத்தூர்ப் பகுதிகளில் சண்டை நடந்தது எனப் பேசிக்கொள்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்து யாழ்ப்பாணம் மிகச் சீக்கிரமாக நித்திரைக்கு சென்று விடும்.

8 மணியிருக்கும். பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் அறிவிப்பு செய்கிறார்கள் புலிகள்.

யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு கோரியது அந்த அறிவிப்பு.

யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல்லோரும் வீதிகளில் இறங்க இறுகிப் போனது வீதி. இப்போது நினைத்துப்பார்த்தால், புலிகள் அந்த வெளியேற்றத்தை திட்டமிட்டு நடாத்தி முடித்திருக்கலாமோ என தோன்றுகிறது. ஏனெனில் அந்த இடப்பெயர்வு முடிந்து அடுத்த இரண்டு மாதங்கள் வரை யாழ்ப்பாணம் புலிகளின் கைகளில் தான் இருந்தது. இடப்பெயர்வின் பின்னர் ஒரு பத்து பதினைந்து நாட்கள் வரை இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று பொருட்கள் எடுத்துவர அனுமதிக்கப் பட்டிருந்தார்கள்.

ஆனால் எந்த விதமான முன் தீர்மானமும் இன்றி நெருக்கடியான நிலையிலேயே புலிகளும் இந்த முடிவினை எடுத்திருந்தார்கள் என்பதற்கு மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்த புலிகளின் படையணிகளும், காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போராளிகளும் சான்று. அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தைச் சுமந்தது. 

அடுத்த காலையே வானுக்கு வந்து விட்ட விமானங்கள், நிலமையை இன்னும் பதற்றப்படுத்தியது. அந்த வீதிக்கு அண்மையாக எங்கு குண்டு வீசினாலும் ஆயிரக்கணக்கில் பலியாக மக்கள் தயாராயிருந்தனர்.

24 மணிநேரங்களிற்கும் மேலாக நடக்க வேண்டியிருந்தது. நடந்தும் தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள், தேவாலயங்கள், பஸ் நிலையங்கள் என கண்ணில் பட்ட இடங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்கிப்போட்டனர்.

காலங்காலமாய் வாழ்ந்த மண்ணை விட்டு ஒரே நாளில் நிர்ப்பந்தங்களால் தூக்கியெறியப்படின் அந்த வலி எப்படியிருக்கும். அதே வலி இன்று ….

 05-11-1995இது இப்படி இருக்கத் தலைவருக்கு என்ன நடந்தது எனவிரிவாகப்பார்ப்போம்பார்ப்போம்

இது இப்படி இருக்க தலைவரின் இடம்பெயர்வு தொடர்பாக தூயாமணி குறிப்பிடுகையில்,தூயாமணி குறிப்பிடுகையில், 

அப்பொழுது சண்டை கடுமையாக நடந்துகொண்டுயிருந்தமையால், அப்பொழுது நான் நந்தாவில் அம்மன் கோயில் அருகாமையில் இருந்த தலைவரின் ரெட்டி முகாமில் இருந்த அனைத்துப் பொருட்களையும் மற்றும் அங்கே நின்ற மான்மரைகளையும் ஏற்றிக்கொண்டு சாவகச்சேரியில் இருந்த எமது முகாமான 7,7 முகாமிற்குக்கொண்டுபோய் அங்கே பறிந்தேன்,

 பின்னர் 10த்து நாட்களால் தலைவரும் அங்கே வந்து விட்டார், அங்கே தலைவர் ஒரு மாதம் நின்று தளபதிசொர்ணத்திற்குக்கட்டளைவழங்கிக்கொண்டுயிருந்தார்,

 பின்னர் வறணிப்பக்கமும் இராணுவம் மூவ்பண்ணி வந்துவிட்டது. அதனால்கடுமையான செல்வந்து வெடித்த வண்ணம் இருந்தது  எமது முகாம் அரிகில்.அதனால் நான்   மிருசிவில்லில் இருந்த எமது முகாமை புணரமைத்தேன் அதையடுத்து7.7. முகாமில் இருந்து அனைத்தும் பொருட்களையும் ஏற்றிக்கொண்டு மிருசிவில்லுக்குச் சென்றேன், தொடர்ந்து ஒரு கிழமைகளித்து தலைவரும் விருசிவில்லுக்கு வந்துசேர்ந்தார். 

அங்கே மூன்றுமாதங்கள் நின்று தளபதி சொர்ணத்திற்குக் கட்டளை வழங்கிக்கொண்டுயிருந்தார், தலைவர், அப்பொழுது யாழ்குடாவில்இருந்துகனிசமான மக்கள் கிழாலியூடாக வன்னிக்குச் சென்றுகொண்டுயிருந்தார்கள், பாதைகள் அனைத்தும் கடுமையான சனநெருடலாகக்காணப்பட்டது,

அடுத்து அங்கேயும் செல்கள் வரத்தொடங்கிவிட்டது, அதனால் அனைத்துப் பொருட்களையும் ஏற்றிக்கொண்டு தலைவரோடு பளைக்குச்சென்றோம், அங்கே தலைவருடைய மனைவி மதி அவர்களும் இரண்டுபிள்ளைகளும்அங்கே இருந்தார்கள், தலைவர் அங்கே சென்றதும் போராளிபாபா தலைமையில் சில குறிப்பட்டபோராளிகளோடு தலைவரின் மனைவி மதிவதனி அவர்களும் அவரின் இரண்டு பிள்ளைகளும் படகு மூலம் கிழாலியில் இருந்து பூனகரிக்குச்சென்று அங்கு இருந்து கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்து இருந்த எமது முகாமில் திருமதி மதி அவர்கள் அங்கே இருந்தார்அவரின் நிர்வாக வேலையை போராளி ஆனந்தபாலன் கவனித்து வந்தார்,, 

திருமதி மதிவதனி அவர்களை சிறிதுபார்ப்பதுபொருத்தமாகயிருக்கும் என நினைக்கின்றேன்

மதிவதனி அவர்களின் அப்பா, அம்மா இவர்கள்தான்முன்னர் வதிவதனி அவர்கள் கல்வி தரப்படுத்தலிற்கு எதிராக யாழ் பல்கலைகலகத்தில் உண்ணாவிரதம் இருந்து அதன் மூலம் இந்திய சென்று தலைவரை திருமணம் செய்தார் என்பதை முன்னர்விரிவாகக் குறிப்பட்டுள்ளேன், 

இரண்டாவது யாழ்பல்கலைக்கலகத்தில் தலைவரைப் பிடிக்க இந்திய இராணுவத்தின் முற்றுகையில் இருந்தும் அவர் எப்படி தப்பினார் என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்.

இப்பொழுது அவர் இயக்கத்தில் முன்னர் இருந்த சில முடிவுகளை மாற்றி அமைத்தார் என்பதைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம்,

யாழ் கந்தர்மடத்தை செர்ந்த தலைவரின் மனைவியன் நெருங்கிய நன்பர் ஆன ஒரு அன்ரி இருந்தார், இவர் இந்திய இராணுவம் எமது மண்ணில் இருந்த காலத்தில் பல போராளிகற்கு உணவு மறைவிடம்கொடுத்துபாதுகார்த்ததீவிர ஆதரவாளர் ஆவார், அதனால் ஈர்க்கப்பட்டு இவரின் மகளும் விடுதலைப் புலிகளோடு இணைந்து அரசியல்துறையில் கடமையாற்றிவந்தார்,

, அடுத்து போராளி கம்பன் அதேதுறையில் கடமையாற்றியவர் அதனால் இருவரும் கடமை ரீதியாகக்கதைத்து க்கதைத்து இருவருக்கும்காதல் ஏற்பட்டது,

, காலப் போக்கில் இளம்பருதி உடாக மாத்தையா அண்ணைகு இத்தகவல் சென்றது, அதை அறிந்தவுடன் ஆண் பெண் போராளிகள் ஒருதர் ஒருதரோடுகதைக்கக்கூடாது எனவும் கதைத்த காரணத்தால்தான் இந்த உறவு ஏற்பட்டது என மாத்ததையா அவர்கள்சொல்லி இருவரையும் அவரே இயக்கத்தில் இருந்து கலைத்து விட்டார். 

இத்தகவலை அறிந்த கந்தர்மட அன்றி என்ர பிள்ளையை ஏன் இயக்கத்தில்  இருந்து கலைத்தநீங்கள் இது  தவறா? என திருமதி மதிவதனியிடம் காரணம் கேட்டார், இத்தகவல் மதிவதனி ஊடாக தலைவருக்குச் சென்றது, ஆனால் மாத்தையா அவ்முடிவை எடுத்த காரணத்தால் தலைவர் அதை அறிந்து வைத்துயிருந்தார், ஆனால் நவடிக்கை எடுக்கவில்லை,

இதில் நிற்பர்கள் தளபதி ஜெயம் .தளபதி வானு. தளபதி சொர்ணம். தளபதி றோவட், லெப் கேணல் ஜோய், தலைவர் .தலைவரின் மனைவி, தலைவரின் மாமா, மாமி இப்படதில் உள்ளனர், 

அடுத்து கறுப்பாக இருப்பவர் செங்கமலம் இவர் மாத்தையாவின் சதிப்புரட்சியில் ஈடுபட்டமையால் அவருக்கு இயக்கம் சாசொறுப்பு வழங்கியது.

அதற்கு மதி அவர்கள் சொன்ன காரணம் களத்தில் நின்று ஆண் போராளிகளோடு சரிசமனாகப்போராடி கால் கைகளை இழந்து முதுமை ஆகி ஒதுக்கப்பட்ட பெண்களாக பெண் போராளிகள்இருப்பார்கள் அதேவேளை ஆண் போராளிகள் பொதுப்பெண்களை திருமணம் செய்துகொண்டு போவார்கள்.

 பொது ஆண்கள் பெண் போராளிகளை திருமணம்செய்ய எல்லோரும்முன்வரமாட்டார்கள் .அதனால் ஆண் பெண் போராளிகள் கதைத்து ஒருதருக்கு ஒருதர் நண்பர்களாகயிருப்பதை தடுக்கக் கூடாது. எனவும் வயது வந்த ஆண் பெண் போராளிகள் விரும்பினால் அவர்களிற்கு சட்டரீதியாக இயக்கம் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் தனது கருத்தை முன்வைத்தார், 

இதுதொடர்வாக வாலா அண்ணைக்கும் ஒருகடிதம்  எழுதி அனுப்பி இருந்தார் மதி அதனால் வாலா அண்ணையும் இது தொடர்பாக பல ஆலோசனைகளை தலைவருக்குச்சொல்லி இருந்தார்,அதனால்தலைவரும் மதிவதனி அவர்களின்கருத்தை ஏற்ருக்கொண்டார்,

தொடர்ந்து இவரின் கருத்தை பின்பற்றிய இயக்கம் கருணா அவர்களின் திருமணத்தைத்தொடர்ந்து இயக்கம் உத்தியோகபூர்வமாக பென் போராளி 24 அகவை ஆண் போராளி 31 அகவைக்கு உட்பட்டவர்கள் ஆண் பெண் போராளிகள் ஒருதர் ஒருவரைக்காதலிப்பது குற்றம் இல்லையெனவும். முதல் பொதுப் பெண்களை காதலித்தவர்களின் விபரம் ஏற்றுக்கொள்ளலாம் எனவும்எதிர்காலத்தில்  எவரும் பொதுப் பெண்களை காதலிக்கக்கூடாது எனவும் இறுக்கமான சுற்றறிக்கைவிடப்பட்டது,

அதே காலம் வாலா அண்ணை திருமதி அக்காச்சி அக்கா தலைமையில் தேசியத் தலைவரால் திருமண ஏற்பாட்டுக்குழுவும் ஆரம்பிக்கப்பட்டது,அக்குழுவில் அரசியல்துறைப்பொறுப்பாள, பா நடேசன், அக்காச்சி அக்கா என  பலர் இருந்தார்கள்.காதலிக்கும் போராளிகள் திருமணக் குழுவூடாக தங்களின்விரும்பத்தைபதிவு செய்துகொள்வார்கள்.

(இதுதான் தேசியத் தலைவரின் வல்வெட்டித்துறை வீடு)

அடுத்துமதிவதனி அவர்களின் சகோதரம் கப்டன் அருன் இய பெயர் ஏகாம்பரம், வாலச்சந்திரன்,அவர்களும் எமது விடுதலைப் போராட்டத்தில் இருந்து பல களங்கள் கண்டவர், பிறப்பு18/10/1960-வீரசாவு09/04/1988 இவர் திருமதி மதிவதனி அவர்களின் சகோதரம் ஆவார் இவர் இந்தியா இராணுவத்துடன் ஏற்பட் சண்டையில் வீரச்சாவு அடைந்தார்,

இவரின் சொந்தப்பேரான பாலச்சந்திரன் என்ற பேரைரையே திருமதி வதிவதனி அவர்கள் தனது இரண்டாவது மகனிற்கு அப்பெயரைவைத்தார்,இவர்  இறுதி சுத்தத்தின்போது18/05/2009 எதிரிகளிடம்பிடிபட்டு அவரிக்கு பிஸ்க்கேட்கொடுத்து சிங்களப்படை வெறியர்கள் சுட்டுக்கொன்றார்கள், 

இவர்தான் பாலச்சந்திரன்

நூற்றுக்காணக்கான பிள்ளைகள் செஞ்சோலையில் இருக்கின்றார்கள், அவர்களைதான் நீங்கள் திருமணம் செய்ய வேண்டும் என தனது ராதாவாண்காப்புப்படையணிப்போராளிகளிற்கு ஆலோசனை வழங்கினார்,, மதி அவர்கள்அதையேற்று அதே படையணியைச்சேர்ந்த போராளிகளான போராளி, நடா- போராளி குகதாஸ்-போராளி நெல்சன்- போராளி பில்லா-  போராளி நிமலன் -போராளிஇந்து -போராளி பூவால் என கனிசமான போராளிககள் செஞ்சோலைப்பிள்ளைகளை திருமணம் செய்தார்கள் 

தானும் வாழ்ந்து தன்னைச் சார்ந்தவர்களும் வாழவேண்டும் என்பதில் மிகவும் உயர்ந்த குணம் உடையவர் மதி அவர்கள்.அவரின் செயல்பாடு பின் தங்கியிருக்கும் மக்களை முன் நேற்றுவதாகவே இருந்துள்ளது, அதனால்தாய் தகப்பனை இழந்தே அனதைப் பிள்ளைகளான செஞ்சோலைப்பிள்ளைகள்250 திற்கு மேல் இயக்கம் படிப்பித்துக்கொண்டுயிருந்தது, இவர்களில் வயது வந்த பெண்கள் கனிசமானவர்கள் இருந்தார்கள், இவர்களை எவரும் கண்டுகொள்ளவில்லை. எவருமேகண்டுகொள்ளாமல் இருந்த செஞ்சோலைப்பிள்ளைகளை முதலில் அறிந்த செயல்பட்டவர் மதிவதனி அவர்களே ஆவார்,

அதனால் அப்பிள்ளைகள் திருமணம் செய்வதற்கான ஏதுவான நிலை ஏற்பட்டது, இல்லையெனில் அவர்களின் வாழ்க்கை தொடர்வாக எவரும் கண்டு கொள்ளாமல் இருந்து இருப்பார்கள்,

எப்பொழுதும் கடுமையான பின் தங்கியமக்களிற்குப்பின்னாலே திருமதி ,மதி- அவர்கள் நிற்பார் என்பதற்குஇதுவொரு உதாரணம்.

 திருதி-மதி அவர்கள் திருமணம் செய்ததை முன்னர் குறிப்பிட்டுள்ளேன் அவருக்கு18/04/1985 அன்று அவருக்கு முதலாவது மகனாக சாழ்ஸ் அன்ரனி பிறந்தார், இவருக்கு லெப்ரினன் சீலன் அவர்களின் சொந்தப் பேர் வைக்கப்பட்டது.

, இவர்13/05/2009 அன்று முள்ளிவாய்க்கால் கடல் கரைப் பக்கம் எதிரிகளின் செல் தாக்குதலில் வீரச்சாவு அடைந்தார்,இவருக்கு கேணல் நிலை போராளிகளால் வழங்கப்பட்டுள்ளது,

 அடுத்து இரண்டாவது மகளான துவாராக02/06/1986 அன்று பிறந்தார் இவருக்குபாதுகாப்பு அணியில் இருந்து இந்திய இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்ட மாவீரன் துவாரகன் என்ற ஆண் போராளியின் பேரை மாற்றி துவாரகாக, என பேர்வைக்கப்பட்டது,இவர் இறுதிக் கட்டத்தில் போராளியாக இனைந்து ஆரம்ப இராணுவப்பயிற்சிபெற்று சோதிய படையணியில் இணைக்கப்பட்டுஇருந்தார், இவர் இரட்டை முள்ளிவாய்க்கால்பகுதியில் எதிரிகளோடு சண்டையிட்டுக்கொண்டுயிருந்தவேளை 12/05 /2009 அன்று எதிரிகளின் செல் தாக்குதலில் வீரச்சாவு அடைந்தார்,,கப்டன் துவாரா என இவருக்குப் போராளிகளால் நிலை வழங்கப்பட்டுள்ளது,

இவர்தான் துவராகா

 அடுத்து இழையமகன் பாலச்சந்திரன்01/10/1997 அன்றுபிறந்தார் இவருக்கு திருமதி-மதி அவர்களின் தம்பி கப்டன் அருன் அவர்களின் சொந்தப் பேரான பாலச்சந்தின் என்ற பேர் வைக்கப்பட்டது, இவர் 18 /05/2009 போராளிகளுடன் ராணுவத்திடம் சலண்டர் அடையச் சென்ற போது அவருக்கு பிஸ்கேட் கொடுத்துவிட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்,இவருக்கு தேசத்தின் குழந்தை என போராளிகளால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்,

அடுத்து படையணி நிர்பாகத்தில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பாகப்பாப்போம்  

இக்காலத்தில் படையணி சிறப்புத் தளபதியாக தளபதி கடாபி அவர்கள் இருந்தார்,அவர் படையணி நிவாகத்தை இரண்டாகப் பிரித்தார். சாவகச்சேரி நிர்வாகப்பொறுப்பாளராக போராளி நிசாந்தன் அவர்களையும் வன்னிநிர்வாகப்பொறுப்பாளராக திரு கீவ்மனையும் நியமணித்தார்

 இரண்டிற்கும் மேலாளராக கேணல் ராஜேஸ் அவர்களை நியமணித்தார், இதில் நிசாந்தன் மேஜர் கமல் அண்ணையின் தம்பி ஆவார், இவர் பாதறோடு120 பேரோடு17/05  2009 எதிரிகளிடம் சலண்டர் அடைந்தார் அவர்கள் அனைவரையும் இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்றது,கீவ்மன் தவறு செய்தமைக்காக இயக்கத்தில் இருந்து கலைக்கப்பட்டார், இரண்டு நிர்பாகமும் 27/11/1995 வரை நடந்துகொண்டுயிருந்தது, மாவீரர் நாள் ஒன்றுகூடலிற்காக சில அரசியல் துறைப் போராளிகளை தலைவர் சாவகச்சேரியில் ,20/11/1995-சந்தித்தார், அந்த ஒன்றுகூடல் அங்கேநடந்தது அதுதான் சாவகச்சேரியில் தலைவரின் கடசி ஒன்றுகூடலாகயிருந்தது.

 அப்பொழுது போராளி ஒருதன்ஏண் அண்ணை மீசை வளித்த நீங்கள் என கேட்க சந்திரிகா என்ற பெண்ணிடம் தோற்றுவிட்டேன் அதனால்தான் வளித்தேன் என்று தலைவர் சொல்ல மேடையில் இருந்த அனைவரும் பெரிதாகச் சிரித்தார்கள், அடுத்து வயசும் போய் விட்டது மீசையும் நரைத்து விட்டது அதனால் வளித்தேன் என போராளிகளை சமாளித்து விட்டுசெசென்றார்.அடிப்பான் என பயப்பிடாமல் மாவீரர் நாளை சிறப்பாக ஒழுக்கு படுத்தி செய்யுமாறு தலைவர் கட்டளை வழங்கினார்,,

இம்ரான் பாண்டியன் படையணிச்சிறப்புத் தளபதி பிரிகேடியர் ஆதவன் / அல்லது கடாபி என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்

பளையும் கிளிநொச்சியுமாக தலைவர் வோட்டில் திருந்த காலம் தான் அது அன்று ஒரு நாள் திடீர்ரென தலைவர் பழைப்பகுதிக்குப்போய்சேர்ந்தார்.

அங்கேஇருந்துயாழ்பாணச்சண்டையின்போது சிதறிய விடுதலைப் புலிகளை மீழேஒருங்கிணைத்து மீண்டும் படையணிகளிற்கான பயிற்சிகளை ஆரம்பித்தார்.

மீழொழுங்கு செய்துசுமார்1500 போராளிகளை  சாவகச்சேரிக்கு அனுப்பினார் அதற்கு புதிய பொறுப்பாளர்ஆன போராளி ரவி என்பவரை  நியமணிமனித்தார்.இவர் தமிழ் செல்வனின் ஒரு விசுவாசமான போராளி ஆவார், தலைவர். சாவகச்சேரியை தக்கவைக்குமாறு இவர்களிற்கு கட்டளை வழங்கிக்கொண்டுயிருந்தார்.

, தொடர்ந்து தானும் அங்கே நின்றுஅவர்கட்டு கட்டளை வழங்கிக்கொண்டு இருந்தார்.தொடர்ந்து அவர்கள் சண்டையிட்டார்கள் ஆனால் இராணுவத்தைத்தடுக்க அவர்களால் முடியவில்லை காரணம் சண்டையிடுவதற்கான போதிய வெடிமருந்துகள் ஆயுதங்கள் இவர்களிற்குக்கிடைப்பது மிகக் குறைவாகவே இருந்தது, இது முன்னரே வன்னிக்கு நகர்த்தபட்டு விட்டது .அதனால் சண்டையிடுவது இவர்கட்டு கடினமாக இருந்தது, காயம் அடைவார்கள் உடனுக்கு உடன் படகு மூலம் பூனகரி ஊடாக கிளாலிக்கு அனுப்பப்பட்டர்கள். இருந்தும் கடுமையான காயப்பட்டவர்கள் போட்டில்கொண்டு செல்லும் வளியிலே வீரச்சாவு அடைந்த சம்பவம் மிக அதிகமாகயிருந்தது,

இது இப்படிதுயிரமாக நடந்துகொண்டு இருக்கத்தலைவர்தான் நேரடியாக வன்னிக்குச் சென்று அங்கேசிலபாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருந்தமையால்.திடீரேன ஒரு நாள் தலைவரோடு பூரிப் ஆகிய நான் தளபதி சொர்ணம் ஈசாக் என 7 போராளிகள் கிழாலிற்குச்சென்றோம் அங்குயிருந்து வோட்டில் ஏறி நாங்கள் பூனகரிக்குச்சென்றுகொண்டுயிருந்தோம், எங்களிற்கு உதவியாகக்கடல் புலிகளின் வோட் ஒன்று வந்தது,அடுத்து எங்களின்பாதுகாப்பு அணியும் இடப்பக்கத்தால் வந்துகொண்டுயிருந்தது, நாங்கள் சென்று பூனகரியல் இறங்கி உருத்துபுரம் சென்றோம் .அங்கே தலைவர் ஒரு தனி வீட்டில் இருந்தார் அவருடைய மனைவியும் அதில் இருந்து05 கிலோமீற்றறில் தனியொரு வீட்டில் இருந்தார்கள்,

அங்கே சென்ற தலைவர் அங்கே இருந்த பொறுப்பு நிலையில் உள்ளவர்களை அவசர அவசரமாக அழைத்துஒன்றுகூடல்நடத்தப்பட்டது அது வன்னியைப்பலப்படுத்துவதற்கானதிட்டமாகவே தலைவர்அவர்களோடு  கதைத்தார்.

அது முடிந்துமூன்று நாட்கள் அங்கே இருந்தோம் மீண்டும் படகு மூலம் சாவகச்சேரிக்குத் தலைவர் சென்றார் .ஆனால் கடுமையான செல்தாக்கதல் இராணுவம் நடத்திக்கொண்டு இருந்தது நாங்கள் சென்றுகொண்டுயிருக்கும்போது இராணுவம் ஏவிய செல் ஒன்று கடலில் வந்து விழுந்தது மயிர் இழையில் தலைவர் சென்ற படகுதப்பியது இருந்தும் அவர்பயணத்தை நிறுத்தவில்லை திட்டமிட்டாப்போல் கிழாலிக்குப்போய் சேர்ந்தோம் அங்கு இருந்துபழைக்குபோய்ச் சேர்ந்தோம்.

அங்கு சென்றதும் குறிப்பட்ட பொறுப்பாளர்களை வரவளைத்து அங்கே ஒரு ஒன்றுகூடல் நடந்தது இறுக்கமாக நின்று சண்டையிடுமாறு தலைவர் அவர்கட்டு கட்டளை வழங்கினார்,ஒன்றுகூடலிற்கு வந்த பொறுப்பாளர்களிற்கு வுறியாணிச்சாப்பாடு வழங்கி அவர்களைத் தலைவர் வளி அனுப்பிவைத்தார், தொடந்து அங்கே 15 நாட்கள் நின்றோம், அடுத்து திடீரேன படகில் ஏறி பூனகிரி சென்றுகொண்டுயிருந்தோதோம். .

அந்த குழப்பமான சூழ்நிலையிலும் பாதுகாவலாளராக இருந்த போராளி ஈசாக் என்பவர் அண்ணெ நான் ஒரு கதையொன்று சொல்லப்போறன் என்று தலைவரிடம் சொல்ல, சொல் என அனுமதி வளங்குகின்றார், அண்ணெ நான் ஒரு பிள்ளையை விரும்பி இருக்கின்றேன் என அவன்தெரிவிக்கின்றான்.  அதிற்குத்தலைவர் அதுக்கன்ன வயது வந்தபின் செய்யலாம் என பதில் அழிக்கின்றார், அந்தகுழப்பமான சூழ்நிலையிலும் தலைவர் அந்தப் போராளி மீது கோபப்படவில்லை, எல்லா மனிதர்களிற்கும் உணர்பு இருக்கும் என்பதை அறிந்து செயல்படும் ஒரு உயர்ந்தமனிதராக எமது தலைவர் இருந்துள்ளார்,

 சாவகச்சேரியை தக்க வைப்பதற்காக சில கட்டளைகளை தலைவர் வழங்கிக்கொண்டுயிருந்தார் அது மட்டும் அல்ல அங்கு இருந்து மூன்று தடவை போட்டில் பழைக்கு வந்துபொறுப்பு நிலையில் உள்ளவர்களோடு கதைத்து சண்டைகளிற்கான தயார்படுத்தல்களை செய்து இருக்கின்றார், இது மிகவும் உயிர் ஆவத்தான பயணமாகயிருந்தது,24-11-1995இது தான் தலைவர் பளையில் இருந்து படகு மூலம் கடசியாக பூனகரியூடாக கிளிநொச்சி சென்றார் இதுதான் அவரின் கடசிப்பயணம் இனி 1995 ஆம் ஆண்டு அவரின் மாவீரர் நாள் உரை பற்றிப் பார்ப்போம்.

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 1995.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே…

இன்று மாவீரர் நாள்.

எமது தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த இலட்சிய வேங்கைகளை நாம் எமது இதயக் கோயிலில் நினைவுகூரும் புனித நாள்.

எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.

எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள். அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள். எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் புனிதப் போரில் எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் மகத்தானவை. அவற்றைச் சொற்களால் செதுக்கிவிட முடியாது. உலக வரலாற்றில் எங்குமே, என்றுமே நிகழாத அற்புதங்கள் இந்த மண்ணில், இந்த மண்ணிற்காக நிகழ்ந்திருக்கிறது. அந்த வீரகாவியத்தைப் படைத்த ஆயிரமாயிரம் மாவீரரின் இலட்சியக்கனவு அவர்களது ஆன்மீக தாகம் என்றோ ஒரு நாள் நிறைவு பெறுவது திண்ணம்.

எமது மண் மீதான எதிரியின் ஆக்கிரமிப்புப் போர் என்றுமில்லாதவாறு இன்று விஸ்வரூப பரிமாணம் பெற்றிருக்கிறது. எதிரியானவன் தனது முழு படைபலத்தையும், ஆயுத பலத்தையும் ஒன்று திரட்டி தனது முழுத் தேசிய வளத்தையும் பயன்படுத்தி யாழ்ப்பாண மண்மீது பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறான். பழமையும் பெருமையும் வாய்ந்த எமது பாரம்பரிய பூமி எதிரியின் படைபல சக்தியால் அழிக்கப்பட்டு வருகிறது. ஓயாத மழையாகப் பொழியும் எதிரியின் எறிகணை வீச்சால் யாழ்ப்பாணத்தின் முகம் சிதைக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணத்தின் பொருள் வளத்தைச் சிதைத்து, பண்பாட்டுச் சின்னங்களை அழித்து, தமிழரின் தேசிய வாழ்வைச் சீர்குலைத்து விடுவதே இந்த ஆக்கிரமிப்புப் போரின் அடிப்படையில் நோக்கமாகும்.

இந்தப் போர், அரசு கூறுவது போல புலிகளுக்கு எதிரான போரல்ல. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழினத்திற்கெதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர். சிங்களப் பேரினவாதத்தின் இந்த இனப்போர் நீண்ட நெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது. புலிகள் இயக்கத்தின் பிறப்பிற்கு முன்பிருந்தே நிகழ்ந்து வருகிறது. இதனைத் தொடக்கி வைத்தவர் சந்திரிகாவின் தந்தையார். இப்பொழுது சந்திரிகாவின் அரசு இந்த இனப்போருக்கு முழு வடிவம் கொடுத்திருக்கிறது. தமிழரின் உயிரையும், உடமையையும், தமிழரின் நிலத்தையும், வளத்தையும், ஒட்டுமொத்தத்தில் தமிழரின் தேசிய அடையாளத்தையே சிதைத்துவிடும் நோக்கத்தைக் கொண்டது இந்தப் போர்.

சமாதான முகமூடி அணிந்து சமாதானத் தீர்வில் நம்பிக்கை கொண்டவர் போல நடித்து சிங்கள மக்களையும் உலக சமூகத்தையும் ஏமாற்றி ஆட்சிபீடம் ஏறினார் சந்திரிகா. அதிகார பீடத்தில் அமர்ந்ததும் சமாதானப் பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை அரங்கேற்றினார். தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வை வேண்டிய நாம் அவருக்கு நேசக்கரம் நீட்டினோம்.

சுமூகமாகப் பேச்சுக்களை நகர்த்தும் நோக்கில் போர்க் கைதிகளை விடுவித்து நல்லெண்ண சமிக்கைகளைக் காட்டினோம். இந்தப் பேச்சுக்களின் போது நாம் எவ்வித கடுமையான நிபந்தனைகளையோ சிக்கலான கோரிக்கைகளையோ விடுக்கவில்லை. தமிழ் மக்கள் மீது அநீதியான முறையில் திணிக்கப்பட்டிருந்த பொருளாதாரப் போக்குவரத்துத் தடைகளை நீக்கி இயல்பான சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கும்படியே நாம் சந்திரிகா அரசிடம் வேண்டினோம். அடிப்படை வசதிகள் இன்றி அத்தியாவசியத் தேவைகள் மறுக்கப்பட்டு பல வருடங்களாக இடர்பட்டு வாழ்ந்த எமது மக்களின் துன்பத்தைத் துடைத்து விடும்படியே நாம் கோரினோம். ஆனால் சந்திரிகா அரசு இந்த அற்ப சலுகைகளைத்தானும் தமிழருக்கு வழங்கத் தயாராக இல்லை. ஆறு மாதங்கள் வரை அர்த்தமின்றிப் பேச்சுக்கள் இழுபட்டபொழுது நாம் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதாவது சந்திரிகா அரசு சமாதானத்தை விரும்பவில்லை என்பதையும் சமாதான வழிமூலம் தீர்வை விரும்பவில்லை என்பதையும் நாம் உணர்ந்து கொண்டோம். சமாதானப் பேச்சுக்களின் போது இராணுவ நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டதைக் கண்டபோது சந்திரிகா அரசு இராணுவத் தீர்விலேயே தீவிர அக்கறை கொண்டிருக்கிறது என்பது எமக்குத் தெளிவுறப் புலனாகியது.

பெரிய எடுப்பில் யாழ்ப்பாணம் மீது நிகழ்த்தப்படும் படையெடுப்பானது சந்திரிகா அரசின் இராணுவ, அரசியல் குறிக்கோளை தெட்டத்தெளிவாகக் காட்டுகிறது. தமிழ் மக்கள் செறிந்து வாழும் தமிழர் தாயகத்தின் மையப்பகுதியைச் சுற்றிவளைத்து மக்களோடு சேர்த்து மண்ணையும் ஆக்கிரமித்து யாழ்ப்பாணச் சமூகத்தை “விடுதலை” செய்துவிட்டதாக உலகுக்குக் காட்டும் கபட நோக்குடன் இப்படையெடுப்பு நிகழ்த்தப்பட்டது. ஆயினும் யாழ் நகரையும் வலிகாமப் பகுதியையும் இராணுவம் முற்றுகையிடுவதற்கு முன்னராக மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இடம்பெயர்ந்து சென்ற வரலாற்று நிகழ்வானது சந்திரிகா அரசின் தந்திரோபாயத்திற்கு சாவு மணி அடித்தது. அரசின் போர் நடவடிக்கைகளையும் அதற்கு அரசு கற்பிக்கும் அபத்தமான காரணத்தையும் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் ஏகமனதாக நிராகரித்து விட்டனர் என்பதையே இந்த இடம்பெயர்வு நிகழ்வு எடுத்துக்காட்டக் கூடியது. சிங்கள அரச நிர்வாகத்தின் கீழ் அடிமைப்பட்டு வாழ தமிழ் மக்கள் இனித் தயாராக இல்லை என்பதையும், மக்களையும் புலிகளையும் வேறுபடுத்த முடியாது என்பதையும் இந்த சனப்பெயர்வானது சிங்கள தேசத்திற்கும் உலகத்தாருக்கும் நன்கு உணர்த்தியது. எனவே யாழ்ப்பாணப் படையெடுப்பின் அரசியற் குறிக்கோளை அடைவதில் சந்திரிகா அரசு தோல்வியையே சந்தித்திருக்கிறது.

இராணுவ முற்றுகையிலிருந்தும் அதன் பின்னணியிலுள்ள அரசியற் பொறியிலிருந்தும் எமது மக்கள் பாதுகாப்பாக தப்பித்துக் கொண்டமை ஒரு புறத்தில் எமக்கு ஆறுதலைத் தந்த போதும், மறுபுறத்தில் இந்தப் பாரிய இடம்பெயர்வால் எமது மக்கள் அனுபவித்த, அனுபவித்து வரும் இடர்களும், துயர்களும், துன்பங்களும் எமக்கு ஆழமான வேதனையைத் தருகிறது.

காலங் காலமாக வசித்த பாரம்பரிய மண்ணைத் துறந்து வீடு, காணி, சொத்துக்களைக் கைவிட்டு ஏதிலிகளாக இடம்பெயர்ந்து எமது மக்கள் எதிர்கொள்ளும் தாங்கொணாத் துன்பங்கள் எமது நெஞ்சத்தைப் பிளக்கின்றது. எனினும் இத் துன்பியல் அனுபவமும் துயரமும் நிறைந்த அவலமும் எமது இனத்தின் விடுதலை எழுச்சிக்கு எமது மக்கள் அளித்த மாபெரும் பங்களிப்பாகவே நாம் கருதுகிறோம். ஆக்கிரமிப்பாளனுக்கு அடிபணிந்து போகாமல் சுதந்திர மனிதர்களாக சுயகௌரவத்துடன் வாழ்வதற்கு எத்தகைய துயரையும் எதிர்கொள்ள எமது மக்கள் துணிந்து நிற்கிறார்கள் என்பதையே இந்த இடம்பெயர்வு உலகத்துக்கு பறைசாற்றி நிற்கிறது.

மக்கள் வெளியேறிய நிலையில் இடிபாடுகளுடன் சுடுகாடாய் கிடக்கும் யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவப் பேய்கள் வெற்றிக் கொடியைப் பறக்க விடலாம். தமிழரின் இராச்சியத்தைக் கைப்பற்றி விட்டதாக நினைத்து தென்னிலங்கையில் சிங்களப் பேரினவாதக் கும்பல்கள் பட்டாசுகள் கொளுத்திக் குதூகலிக்கலாம். இராணுவ மேலாதிக்க நிலையை எட்டி விட்டதாக எண்ணி சந்திரிகா அரசு சமாதானப் பேச்சுக்கான சமிக்கைகளையும் விடலாம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒன்றைத் தெட்டத் தெளிவாக எடுத்தியம்ப விரும்புகிறோம். அதாவது யாழ்ப்பாண மண்ணை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து நிற்கும் வரை சமாதானத்தின் கதவுகள் இறுக்கமாக மூடப்பட்டிருக்கும். இராணுவ அழுத்தத்திற்கு பணிந்து துப்பாக்கி முனையில் திணிக்கப்படும் சமரசப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபொழுதும் பங்குபற்றப் போவதில்லை. இதுதான் சந்திரிகா அரசிற்கு நாம் விடுக்கும் செய்தி. பாரிய இராணுவப் படையெடுப்பை முடுக்கி விட்டு பல லட்சம் மக்களை இடம்பெயரச் செய்து, வரலாற்றுப் பெருமை மிக்க யாழ் மண்ணை ஆக்கிரமிப்பதன் மூலம் சமாதான சூழ்நிலையும் சமரசத் தீர்வும் ஏற்பட்டு விடும் என சந்திரிகா அரசு எண்ணுமானால் அதைப் போல அரசியல் அசட்டுத்தனம் வேறேதும் இருக்க முடியாது.

இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது சந்திரிகாவின் ஆட்சிபீடம் இழைத்த மாபெரும் வரலாற்றுத் தவறாகும். இதன் விளைவாக சமாதானத்திற்கான சகல பாதைகளையும் கொழும்பரசு மூடிவிட்டதுடன் முழுத் தீவையுமே பெரியதொரு யுத்த நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. யாழ்ப்பாணச் சமரில் புலிகள் இயக்கம் பேரிழப்பைச் சந்தித்துவிட்டதென்றும், பலவீனப்பட்டுவிட்டதென்றும் அரச பிரச்சாரச்சாதனங்கள் உரிமை கொண்டாடுவதில் எவ்வித உண்மையும் இல்லை. இந்தச் சமரில் புலிகள் பலவீனப் படவுமில்லை, பெரிய உயிரிழப்பைச் சந்திக்கவுமில்லை. யாழ்ப்பாணச் சமரில் புலிகளை விட இராணுவத்தினருக்கே பெரிய அளவில் உயிரிழப்பும் தளபாட இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. பெரிய அளவிலான ஆட்பலத்துடன் பெரிய அளவிலான ஆயுத சக்தியைப் பிரயோகித்து தனக்குச் சாதகமான நிலப்பரப்பு வழியாக முன்னேற முயன்ற பெரும் படையணிகளை எதிர்த்து எமது சக்திக்கு ஏற்றவகையில் நாம் சாதுரியமாகப் போராடினோம். பெரும் இடர்கள் ஆபத்துக்கள் மத்தியில் போராடிய போதும் பெருமளவில் உயிரிழப்புக்களை நாம் சந்திக்கவில்லை. இதனால் எமது படைபல சக்திக்கும் படையணிக் கட்டமைப்புக்கும் பாதிப்பு நிகழவில்லை. மரபு வழிப் போர்முறைக்கு புலிகளை ஈர்த்து எமது படை பலத்தை அழித்து விடலாம் என எண்ணிய இராணுவத்திற்கு இது ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் யாழ்ப்பாணச் சமர் எமக்கு ஏற்பட்ட பின்னடைவே தவிர தோல்வியல்ல. அதுவும் ஒரு தற்காலிகப் பின்னடைவேதான். இந்திய ஆக்கிரமிப்புக் காலத்திலும் இதைவிட பெரிய பின்னடைவுகளைச் சந்தித்தோம். ஆனால் அந்தப் போரில் நாம் தோற்றுவிடவில்லை. இந்திய இராணுவமே இறுதியில் தோல்வியைச் சந்தித்தது. எனவே இன்றைய பின்னடைவே நாளைய வெற்றியாக மாறுவது திண்ணம்.

சிங்கள இராணுவம் யாழ்ப்பாண மண்ணில் அகலக்கால் பதித்திருக்கிறது. பெரும் படையைத் திரட்டி நிலத்தைக் கைப்பற்றுவது கடினமான காரியமல்ல. ஆனால் கைப்பற்றிய நிலத்தில் காலூன்றி நிற்பதுதான் கஸ்டம். உலகெங்கும் ஆக்கிரமிப்பாளர் எதிர்கொண்ட வரலாற்று உண்மையிது.

இந்த வரலாற்றுப் பாடத்தை சிறிலங்கா இராணுவம் படித்துக் கொள்வதற்கு வெகுகாலம் செல்லாது. படைபலத்தை அடிப்படையாகக் கொண்டே சிறீலங்கா அரசானது தமிழரின் அரசியற் தலைவிதியை நிர்ணயிக்க முனைகிறது. தமிழ்ப் பிதேச ஆக்கிரமிப்பு மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று தான் விரும்பிய குறைந்தபட்ச தீர்வு ஒன்றை தமிழ் மக்கள் மீது திணித்துவிட நினைக்கிறது. சமாதானத்திற்கான யுத்தமென்ற சந்திரிகாவின் கோட்பாடு இத்தகைய இராணுவத் தீர்வையே மூமாகக் கொண்டிருக்கிறது.

இத்தகைய தீர்வை மானமுள்ள தமிழன் எவனும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இந்தத் திட்டத்தை முறியடித்து தன்னாட்சி நோக்கிய எமது விடுதலைப் போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்வதாயின்; எமக்கு ஒரேயொரு வழிதான் உண்டு. நாம் எமது படை பலத்தைப் பெருக்கி போராட்டத்தைத் தீவிரமாக்க வேண்டும். தமிழ் மக்கள் தமது அரசியற் தலைவிதியை தாமே நிர்ணயிப்பதாயின் தமிழரின் படைபலம் பெருக வேண்டும். எமது படையமைப்பைப் பலப்படுத்திக் கொள்வதன் மூலமே நாம் பாதுகாப்பாக வாழ முடியும். நாம் எமது இழந்த மண்ணை மீட்டெடுக்க முடியும். நாம் சொந்த இடங்களுக்கு சுதந்திர மனிதர்களாக திரும்பிச் செல்ல முடியும். தமிழர் தேசம் தமது படைபலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பது இன்றைய தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவையாக எழுந்துள்ளது. தமிழினம் சிதைந்து, அழிந்து போகாமல் பாதுகாப்பாக வாழ்வதற்கு இது அவசியம். போராடித்தான் வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு தமிழ்த் தேசம் தள்ளப்பட்டிருக்கிறது. இந்தத் தேசியப் பணியிலிருந்து, வரலாற்றின் அழைப்பிலிருந்து தமிழ் இளம் பரம்பரை ஒதுங்கிக்கொள்ள முடியாது. இதில் காலம் தாமதிப்பதும் எமது இனத்திற்கு பேராவத்தை விளைவிக்ககூடும். எனவே, காலம் தாழ்த்தாது எமது விடுதலை இயக்கத்தில் இணைந்துகொள்ளுமாறு தமிழ் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். எவ்வளவு சீக்கிரத்தில் தமிழ் இளம் சந்ததி எமது இயக்கத்தில் இணைந்து கொள்கிறதோ அவ்வளவு சீக்கிரத்தில் நாம் எமது போராட்ட இலக்குகளை அடைந்து கொள்ள முடியும்.

மிகவும் நெருக்கடியான இக்கால கட்டத்தில் எவ்வித உதவியுமின்றி ஒரு இன அழிப்பு யுத்தத்தை நாம் தனித்து நின்று முகங்கொடுக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் உலகத் தமிழினத்தின் உதவியையும், ஆதரவையும் நாம் வேண்டி நிற்கிறோம். குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் தமிழீழ மக்கள் எமது உரிமைப் போருக்குக் குரல் கொடுப்பதுடன் தம்மாலான உதவிகளையும் செய்யுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

எமது தேசத்தின் விடுதலைக்காக சாவை அரவணைத்து சரித்திரமாகி விட்ட எமது மாவீரர்களை நாம் நினைவுகூரும் இப்புனித நாளில் எந்த இலட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலை வீரர்கள் களப் பலியானோர்களோ அந்த இலட்சியத்தை அடைந்தே தீருவோமென உறுதி எடுத்துக் கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

அடுத்து திருகோணமலைக்கு அனுப்பப்பட்ட போராளி நிருபன் மீண்டும் அங்கு இருந்து எடுக்கப்பட்டார்150 அண் பெண் சிறுத்தை படையணிப்போராளிகளைக்கொடுத்து மீண்டும் உள் நடவடிக்கைசெய்வதற்காகக்காக மீண்டும் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டார்.நிருபன், தொடர்ந்து அவர் மாதகல் அராலி பக்கம் உள் நடவடிக்கையை செய்துகொண்டுயிருந்தார்,பிறகு இவருக்கு என்ன நடந்து என்பதைப்பார்ப்போம் அப்பொழுது சாவகச்சேரியைப்பிடிப்பதற்காக இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்திக்கொண்டுயிருந்தது, 

05. 12. 1995அன்று தென் தமிழீழத்தில் நடைபெற்ற முதல் கரும்புலித் தாக்குதல்இது வாகும்.வடமாகாணத்தில் பாரிய இடம் பெயர்வும் மனித அவலம் நடந்துகொண்டிருக்க


05. 12. 1995அன்று தென் தமிழீழத்தில் நடைபெற்ற முதல் கரும்புலித் தாக்குதல்இது வாகும் தென் தமிழீழத்தில் கரும்புலித்தாக்குதல் ஆரம்ப காலத்தில் நடைபெறமலே இருந்தது அதனால் அதற்கான காலத்தை புலிகள் எதிர்பார்த்துக் கொண்டுயிருந்தார்கள். அதேவேளை யார் முதலாதுபோவது என போராளிகள் மத்தியில் போட்டி நிலை உருவாகிக்கொண்டுயிருந்து,
மேஜர் ரங்கன் வாகனம் ஒட்டுவதில் மிகவும் திறமையானவன் அதனால் அச்சந்தர்ப்பத்தை அவனுக்கேகொடுப்பது என மாவட்டப் பொறுப்பாளர் முடிவு எடுத்தார், அவ் முடிவை ரங்கன் ஏற்றுக் கொண்டான் .ஆனால் எல்லோரும் கரும்புலியாகச் செல்வதற்குமுன்னர் தலைவரைச் சந்தித்து படம் எடுத்து உணவு அருந்தி அதற்குப்பின்ரே செல்வார்கள் ஆனால் ரங்கனுக்கு எவ்விதமான சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை, அதை எண்ணி அவன் கவலையடையவில்லை மாறாக கடமையே முக்கியம் என கருதினான்,
சிரித்த முகத்துடன் மேஜர் ரங்கன் வாகனத்தில் ஏறி வேகமாகச் சென்றுகொண்டுயிருந்தான் மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் அமைந்து இருந்த சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் முகாம்  05.12.1995 பாரிய வெடி ஓசையுடன் வெடித்து தனது இறுதி வாழ்வை முடித்துக் கொண்டான்,கரும்புலி மேஜர் ரங்கன், 
 இதே காலம்ஏறக்குறைய  . 5 லட்சம் பேரைக் கொண்ட வலிகாமத்தில் ஒட்டுமொத்தமான சனத்தொகையும் முற்றுமுழுதாக வெளியேறிய நிலையில் பெரும் பெரு அவலத்திற்கு மத்தியில்

5. 12. 1995 அன்று சிங்களப்படை அமைச்சர் அனுருத்த  ரத்வத்த  சிங்கக் கொடியை ஏற்றிய ஒரு சில மணி நேரத்தில்  தென்  தமிழீழம் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் சிங்களச் சிறப்பு அதிரடிப் படையின் முகாம் மீது கரும்புலி மேஜர் ரங்கன் கரும்புலித் தாக்குதலை நிகழ்த்தி சிங்களத்தின் ஆக்கிரமிப்பிற்கு பதிலடி கொடுத்த்தான்

1996/02 ஆம் மாதம் சாவகச்சேரியில் இறுதியாக அங்கே நின்ற மாலதி படையணி பொறுப்பாளர்களில் ஒருதரான திருமதி அசோகா குறிப்பிடுகையில் சண்டை கடுமையாக நடந்துகொண்டுயிருந்தது அப்பொழுது காயப்பட்ட போராளிகளையும் தூக்கிக்கொண்டு சிறிது சிறிதாக நாங்கள் பின்வாங்கி கிழாலிக்கு வந்தோம் அங்கு ஒரு பெரும் சண்டை நடந்தது அப்பொழுது நாங்கள் ஒரு சுத்த டாங்கியை தாக்கி அழித்தோம்.

 அதில் பெரும்தொகையான இராணுவம் கொல்லப்பட்டது, அடுத்து நாங்கள் கிழாலி கடலை தக்க வைப்பதற்காக சண்டையிட்டுக்கொண்டுயிருந்தோம், அப்பொழுது கடல்புலிகளின் மகளிர் அணிப் பொறுப்பாளர் லெப்கேணல் ஜெரோமிஅல்லது விடுதலை அவர்கள்பெரிய வோட்டில் வந்து எங்கள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு பூனகரிக்குச்சென்றார், 

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதியும், மாலதி படையணியின் தாக்குதல் தளபதியுமான லெப்.கேணல் ஜெரோமினி/விடுதலை அவர்கள்.15.11.2007 வீரச்சாவு அடைந்தார்

அங்கு இருந்து நாங்கள் கிழி நொச்சிக்குச் சென்று எங்களின் மாலதி  படையணியோடு இணைந்தோம், இவர் அடுத்து என்ன செய்தார் என்பதைபிறகுபார்ப்போம்,இத்தோடு யாழ்பாணக்கதை முடிந்துவிட்டது

  கிழாலியில் இறுதிவரை நின்று போராடிய போராளிகளும் அங்கு இருந்து வெளியேறினார்கள் இப்பொழுது யாழ்பாணத்தை இராணுவம் முழுமைமாகப்பிடித்துவிட்டது, 

இது நடந்து முடிந்தவுடன் இராணுவம் அமைதியாக இருக்கவில்லை அடுத்த நடவடிக்கையை மன்னாரில் ஆரம்பித்தது.

 எடி பல என்ற இராணுவநடவடிக்கைகை மன்னார் மீது ஒரு பாரிய நடவடிக்கையை செய்து நேரியகுழம் முருங்கன் போன்ற பிரதேசத்தை இராணுவம் பிடித்தது அதில் 35 கிலோ மீற்றர்நீழமானபிரதேசத்தை இராணுவம் பிடித்தது.  இது விடுதலைப்புலிகளிற்கு தோல்வி என்பதற்கு அப்பால் பாரிய பின்டைவு என்றே சொல்லலாம், 

அடுத்துதலைவர் உருத்திபுரத்தில் இருந்து முத்து ஐயன் கட்டில் அமைந்து இருந்த விற்றர்01 முகாமிற்குச்செல்கின்றார், அங்கு இருந்துதான் முல்லைதீவு முகாமை தாக்குவதற்கான வேலை திட்டம்ங்களில் தலைவர் ஈடுபடுகின்றார்,

  மாதிரிப்பயிற்ச்சிக்காக பூனகரியை தேர்ந்தடுத்த தலைவர்,

முல்லைத்தீவைத்தாக்குவதற்காக போராளிகளிற்குமாதிரிப்பயிற்சி கொடுப்பதற்கு அவ்விடம் தலைவரால் தேர்ந்து எடுக்கப்பட்டது.திரு பால்ராஜ் அவர்களின் தலைமையிலே முல்லைதீவைப்பிடிப்பதற்காக மாதிரிப்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்துப்படையணியில் இருந்தும் போராளிகள் அங்கே அனுப்பப்பட்டுக்கொண்டுயிருந்தார்கள் .

அந்தவகையில் முதல் திட்டமாக லெப்கேணல் சசிக்குமார் தலைமையில் எமது படையணி ஆசிரியர்களான ஜேசுதன்- நேசன்-வேங்கைமார்பன்- சுடர்- என பத்துப்போராளிகள் அனுப்பப்பட்டனர், இவர்கள் அங்கே சென்று மணலாறு படையணியோடு இணைந்து பயிற்சி எடுத்துக் கொண்டுயிருந்தார்கள்,இதைப்பற்றிப்பிறகு பார்ப்போம்,

,தொடர்ந்து இராணுவம் யாழைப்பிடித்த கைகொடு இராணுவம் வன்னியைப் பிடிக்க படைகளை நர்த்தலாம் என்பதற்காக தலைவர் போட்ட திட்டம்,

ஈஸ்வரன் மற்றும் நிரூபன் தலைமையில் உள் நடவடிக்கைக்குபோராளிகள்யாழ்பாணம்அனுப்பப்பட்டார்கள் என முன்னர்றிப்பிட்டுயிருந்தேன் அது பற்றி அவர்களோடு சென்ற திரு ரவி குறிப்பிடுகையில்.இது இப்படி நடந்துகொண்டுயிருக்க எமது படையணியல் இருந்த இரண்டு பிரதான பொறுப்பாளர்களை தேர்ந்து எடுத்து
 இவர்கள் இருவரின் தலைமையில் சுமார் 500 போராளிகள் யாழ்ப்பாண உள் நடவடிக்கைக்கு தலைவரால்அனுப்பப்பட்டார்கள். அவர்களோடு சென்ற சிறுத்தைப்படையணிப்போராளி ரவி குறிப்பிடுகையில்.
 ஆண் பெண் போராளிகளைக்கொண்ட சிறுத்தைப்படையணியும்  எங்களோடு யாழ்மாவட்டப்படையணியும்வந்தது யாழ்ப்பாணத்திலே நின்று தொடர்ந்து பதிங்கித் தாக்குதல் நடத்துவதின் ஊடாக வன்னிமீதான தாக்குதலை திதைதிருப்புவதின் ஊடாக மீண்டும் யாழைப் பிடிப்பது இலகுவாகயிருக்கும் என தலைவர்கருதினார்.

நாங்கள் சிறு படகுகள் மூலம் யாழ்பாணம் போய்ச் சேர்ந்தோம், அங்கே சென்றதும் அராலி / வட்டுக்கோட்டை / மாதகல் என மக்கள் இல்லாதவீடுகளில் பதிங்கியிருந்தோம்,எங்களை தலைவர் அனுப்பியது கெருலா ரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து செய்வதின் ஊடாக இராணுவத்தை தொல்லைப்படுத்திக்கொண்டுயிருக்கவேண்டும், ஆனால் தலைமை தாங்கி வந்தவர்கள் தலைவர் மீது விசுவசமானவர்களாக தங்களை எங்களிடம் காட்டிக்கொண்டாலும், எதிர்மாறான கருத்துக்களை எங்களிற்கு விதைத்துக்கொண்டியிருந்தார்கள், இங்கே தாக்குதல் நடத்தக்கூடாது எனவும் பதிங்கியிருப்பதுதான் எங்களின் வேலையெனவும், தாக்குதல் நடத்துவதற்கு  தலைவரிடம் இருந்து அனுமிவரவில்லையென எங்களிடம் சொன்னார்கள்,

 பொறுப்பாக வந்தவர்கள் போராளிகளின் உணவு பற்றியோ அல்லது அவர்களின் மறைவிடம் பற்றியோ எவ்விதமான வேலைகளையும் அவர்கள் செய்யவில்லை,

தங்களின் தனிப்பட் உணவு மறைவிடம் பற்றிய அவர்கள் கவனம் எடுத்தார்கள், அதனால் போராளிகளிற்கும் அவர்களிற்குமான உறவில் பாரிய இடைவளிவந்தது, அதனால் நாணயம் இல்லாத குதிரை போன்று தாங்கள் நினைத்தவாறு குழு குழுவாக போராளிகள் மறைந்து வாழ்ந்தார்கள்

இது இப்படி இருக்க அங்கே 12000 ஆயிரம்  தமிழ் மக்கள் அங்கே வாழ்ந்தார்கள் இவர்கள் வன்னிக்குவர விருப்பம் இல்லையென சொல்லி அங்கே நின்றவர்கள் அதனால் ஏதோ ஒரு வகையில் அவர்கள் இராணுவத்திற்கு ஆதரவானவர்கள், அங்கே இருந்த அனைவருக்கும் வாரம் ஒரு தடவை அனைவரையும் அராலிக்கு வரச்சொல்லி இராணுவம் சமைத்த உணவும் சமைக்காத உணவுப் பொருட்களும் கொடுப்பார்கள்.

 அதனால்அவர்கள்நாங்கள் மறைந்து இருப்பதை இராணுவத்திற்குத் தெரியப்படுத்தி விட்டார்கள்,

 பொறுப்பாகயிருந்த மேஐர் ஜெனரல் ஐனகப்பிரரா பாரிய இராணுவநடவடிக்கை ஒன்றைச் செய்தார், குழு குழுவாகயிருந்த 30 /40 மொத்தம் 180 போராளிகள் விரச்சாவு அடைந்தார்கள், இவர்களின் போடி வன்னிக்கு அனுப்பப்பட்டது, இதை அறிந்த தலைவர் கவலையும்கோபமும் அடைந்தார்,

 ஓய்வு கொடுக்காமல் இராணுவம் தாக்குதல் நடத்திக்கொண்டே இருந்தது,அதனால் அங்கே நின்ற ஆண் பெண் போராளிகள் கடுமையான மன உளைச்சலிற்கு உள்ளாகிக்காணப்பட்டார்கள் இவர்களின் பலயீனத்தை அறிந்த இராணுவம். தொடர்ச்சிகாக தேடுதல் வேட்டை செய்து 20/30 என சுட்டு இவர்களின் பொடிகளை வன்னிக்கு அனுப்பிய வண்ணம்

 இருந்தது, தொடர்சியாக இப்படி அனுப்பி அனுப்பி சுமார் 180  போராளிகளின் பொடிகளை இராணுவம் அனுப்பி விட்டது இது தலைவருக்கு மிகவும் கோபமாகவும் ஒருபக்கம் கவலையாகவும் இருந்தது,

 சரியான திட்டமிடல் இல்லாதமையாலும் சரியானகட்டுப்பாட்டிற்குள் போராளிகளை வைத்துயிருக்கவில்லை அதனால் கட்டுப்பாட்டை இளந்த போராளிகள் தங்களுக்குள் சிறுதவறுகள்விட்டதோடுமட்டும் இன்றி திறமையான முறையில் சண்டையிடாமல் . எதிரிகளின் இலக்குகளிற்கு ஆளாகி இறந்தார்கள். பல மூத்த தளபதிகள்இதுபற்றி குற்றம் சாட்டினார்கள் 

பின்னர் எஞ்ஜிஇருந்த சிறு தொகைப் போராளிகளையும் அவர்களிற்குத்தலைமை தாங்கிய பொறுப்பாளர்களையும் தலைவர் மீழவும் வன்னிக்கு எடுத்தார்,  அனைத்து போராளிகளையும் இளந்த நிலையில்10/05 1996 அன்றுஎஞ்சி இருந்த சுமார்160 போராளிகளையும் சிறிய போட்டுக்களில் ஏத்தி தலைவர் வன்னிக்கு எடுத்தார் .அவர்கள் அங்கே சென்றதும் அடுத்த நாள் தலைவர் சந்தித்தார்.

அப்பொழுது தலைவர் சொன்னது உள் நடவடிக்கை செய்ய நான் அவர்களை அனுப்புகின்றேன், தாக்குதல் செய்யப் போகின்றான் நாங்கள் என்ன செய்வது என எனக்கு மெசச்அனுப்புகின்றார்கள் .பயந்தவர்கள் என்பதை விழங்கிக்கொண்ட நான் பாதுகாப்பாக வெளியேறிவாங்கோ என கட்டளை வழங்கியதாகவும்

  இதில் தலைமை தாங்கிக் சென்ற இருபரும் சண்டைக்குப்பயந்தவர்கள் அவர்களை நான் இயக்கத்தில் இருந்து கலைக்கப்போகின்றேன், உங்களில் யாருக்கும் சண்டைக்குப்பயம் என்றால் என்னிடம் சொல்லுகோ உங்களையும் வீட்டிற்கு அனுப்பி வைக்கலாம் என சொல்லி தலைவர் தனது உரையை நிறைவு செய்தார், பின் அங்கே சென்ற அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது,பின் தலைவர் அவர்களிடம் இருந்து விடை பெற்றார்

,

, கலைக் பட்டவர்கள் தொடர்பாக றெஜீத்தன் தலைவருக்கு எழுதிய கடிதம் தொடர்பானது,

இவர்களின் வெளியேற்றம் தொடர்பாக லெப் கேணல் றெஜீத்தன் தலைவருக்கு எழுதிய கடிதம் மன்னார் தொடக்கம் பல இடங்களில் சண்டையிட்டது மட்டும் இன்றி போராளிகள் அனைவரும் இவர்கள் மீது அனுதாபம் இருக்கும் காரணத்தால் ஒரு சந்தர்ப்பம் வழங்குமாறு கடிதம்எழுதி அனுப்பி இருந்தார், இந்தக் கடிதமும் தலைவரால் நிராகரித்தப்பட்டது,

கலைக்கப்பட்ட போராளிகளின் பிரச்சனையை நேரடியாக அறிந்த போராளி குமரதேவன்குறிப்பிடுகையில்அப்பொழுது அவர் கிநொச்சிக்கு கொண்டுவரப்பட்டார். அதையடுத்து அவர் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில்விடப்பட்டார். 1996 நடுப்பகுதியில் நானும் சந்திரமோகனும் அங்கே சென்று அவரைப் பார்வையிட்டோம். மிகவும் மனநிலைபாதிக்கப்பட்டவராக அவர் காணப்பட்டார் அடுத்து தலைவர் தன்னை என்ன செய்யப் போகின்றார் என்ற பெரும் கவலையோடுயிருந்தார்,

ஆனால் நாங்கள் அவரை இயக்கம் என்ன செய்யப்போகுது என்பதை தெரிவிக்கவில்லை.நாங்கள் அவரின் தேவையை நிறைவு செய்வதில் ஆர்வமாக இருந்தோம்,

தான் விரும்பிய காதலியின் தொடர்பை ஏற்படுத்தித்தருமாறுகேட்டுயிருந்தார்,தொடர்ந்து நான் அவர்விரும்பிய பெண் போராளியான பிரபாலினியை சந்தித்து இருவருக்கும் இடைய ஆன தொடர்வை ஏற்படுத்திக்கொடுத்தேன்.

இதையடுத்து தலைவர் இவர்களைப் பற்ரிபின்வருமாறு குறிப்பிட்தாகக் தளபதி கடாபி அண்ணை எனக்குத் தெரியப்படுத்தினார்.என்ற இயக்கத்தில் சண்டைக்கு பயந்தவனை ஒருபோதும் வைத்துயிருக்கமாட்டேன். உடனே அவனை இயக்கத்தில் இருந்து கலைக்குமாறு திரு கடாபியண்ணையிடம்தலைவர்சொன்னதாக நான் அறிந்தேன்

 கடாபி கீவ்மன் என்பவரிடம் அவர் வைத்துயிருந்த டொங்கான் அனைத்து ஆயுதங்களையும் வேண்டிய பின் உடனே அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கட்டளை வழங்கினார், அதன்படிய அவர் செய்தார் இவர்களின் கதை இன்றோடு முடிந்துவிட்டது,,

எஞ்சியிருந்த போராளிகளை முல்லைதீவை மீட்பதற்காகஅலம்பில் பகுதியில் தரையிறங்கிய இராணுவத்துடன் சண்டையிடுவதற்காக அனுப்பப்பட்டனர், .தலைவரைப்பொறுத்தவரை அவர் ஒரு முடிவை எடுத்தால் அதை இலகுவாக மாத்தமாட்டார்,

கலைக்கப்பட்ட இருபோராளிகளும் இப்புத்தகம் எழுதும் காலத்தில் வெளிநாடு ஒன்றில் உயிரோடு இருந்துள்ளார்கள்,

அவர்களின் பேர்கள் குறிப்பிட நான் விரும்பவில்லை,

14/07/1996 மேஜர் சோதியா அவர்களின் பேரில் சோதியா படையணி தமிழீழத் தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்டது, 

தமிழீழவிடுதலைப் புலிகளின் முலாவது மகளீர் படையணித்தளபதியாக மேஜர் சோதியா அவர்களைத்தலைவர் நியமணித்தார் என்பதை முன்னர் குறிப்பட்டேன்

இப்பொழுது அவரின் பேரில் ஒரு படையணி உருவாக்கப்பட்டதுஇது

ஜெயசுக்குறு எதிர்ச் சமரில் கடுமையாகச்சண்டையிட்டது அதனால் அப்படையணியில் இருந்த பல போராளிகள் பிரச்சாவுசாவு அடைந்தார்கள், அதன் பின்னர் அப்படையணின் வீரம் மக்களிற்கும் போராளிகளிற்கும் தெரியவந்தது,

அச்சண்டையில் அப்படையணி சிறப்பத் தளபதி பிரிகேடியர் துர்க்கா உட்பட பல போராளிகள் படுகாயம் அடைந்தார்கள், அது மட்டும் அல்ல இப்டையணிக்கு மேலதிகமான கடமையும் ஒன்று இணைக்கப்பட்டது  அது தலைவரின் வெளிப்பாதுகாப்பிலும் ஈடுபடுத்தப்பட்டது .அதைவிட தலைவர் சந்திப்புக்களிற்குச்செல்லும்வேளைகளில் அப்படையணிப்போராளிகளில் பெண் போராளி மோகனா தலைமையில், தென்னரசி மற்றும் தமிழினி என 5ந்திற்கு மேற்பட்ட போராளிகள்ளும் ஆண் போராளிகளோடு சென்று பெண்களை மட்டும் சோதனையிடுவார்கள்,இப்படி செல்வாக்கு மிக்க படையணியாகஇது எமது இயக்கத்தில் இருந்தது இதின் சிறப்புத்தளபதியாக இறுதி04/04/2009 வீரச்சாவு அடையும்வரை பிரிகேடியர் துர்க்கா அவர்களே அதின் சிறப்புத்தளபதியாக இருந்துள்ளார்,

இனி முல்லைதீவுச்சண்டை எப்படி நடந்தது என்பதைப்பற்றி விரிவாகப்பார்ப்போம்,

சாவகச்சேரிக்கு இராணுவம் முன்னேறிவந்துகொண்டுயிருந்தது 1995 -11 ஆம் மாதம் என நினைக்கின்றேன், உடமைகளை எடுத்துக்கொண்டு கிழாலியூடாக பூனகரிக்குச்சென்று அங்கு இருந்து கிளிநொச்சியூடாக விசுவமடுவிற்குப்போய் படையணி நிர்வாகப்பொறுப்பாளர் கீவ்மனைசந்திக்குமாறு தளபதி கடாபி அண்ணை தகவல் அனுப்பி இருந்தார்.

, தகவல் கிடைத்ததும் நான் சொவர்ணன் குமரதேவன் என 5ந்துக்கு மேற்பட்ட போராளிகள் கிளாலியூடாகச்சென்று விசுவமடு போய் சேர்ந்தோம், அங்கே சென்றதும் விசுவமடு குழத்திற்கு மேற்கே உள்ள காட்டுப்பகுதியில் ஒரு ரெண் கொண்டில் போடப்பட்டு இருந்தது, ஆனால் கடும் குளிராகயிருந்தது, நாங்கள் இரவு 10த்து மணிக்குப்போய் சேர்ந்தோம் போனவுடன் கடுமையான களைப்பாகயிருந்தது, அதனால் இரவு தூங்கினோம்,

காலை விடிந்ததும்விசுவமடு குழத்திற்குச் சென்று குடிநீர் அள்ளக்கூடிய கேன்களை  எடுத்துக்கொண்டுபோனோம்   அங்கே சென்று காலைக்கடன்களையும் முடித்துவிட்டு கேனில் தண்ணீர் எடுத்தக்கொண்டுவந்தோம், வந்தவுடன் தேனீர் வைத்துக்குடித்தோம்,

அங்கே இம்ரான் பாண்டியன் படைய நிர்வாகச் செயலகம் அமைக்கப்பட்டது அதற்காக கொட்டில் அமைப்பது கிணறு வெட்டுவது என கடுமையான வேலைகளில் ஈடுபட்டோம், போதிய களஞ்சியம் இல்லாத காரணத்தால் ஒரு மாதம் மூன்று நேரம் கஞ்சி வைத்துக்குடிப்தோம் , கடுமையான பசிக் கொடுமையாக எங்களின் காலம் கடந்தது,

இது நடந்துகொண்டுயிருக்க தலைவருக்குவங்கர் கட்டுதற்கு கொங்கிறிட் கம்பி தேவைப்பட்டமையால் அன்று ஒரு மதியம்போல தளபதி கடாபி அவர்கள் என்னை வந்து சந்தித்தார்,

அப்பொழுது என்னோடுகதைக்கத்தொடங்கினார், 50வருடத்திற்குமேலேகப் போடப்பட்ட கொங்கிறிட்போஸ் மரங்கள புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் மட்டும் உள்ளது, அது மழைகாலங்களில் விழுவதால் பல பொதுமக்கள் சாவடைவது அவதானிக்கட்டுள்ளது. அதனால் அவைகளை உடைத்தால் உள்ளே ஒன்றில் 4 கொங்றிட் கம்பிகள் இருக்கும் அதை எடுப்பதின் ஊடாக அண்ணையின் வங்கர் கட்டுவதற்கு பயன்படுத்தலாம். எனவும், வீடு செல்லவதற்கு துண்டு குடுத்த நிலையில் 10த்துப்பேர் இருப்பதாகவும். அவர்களை வைத்து பொது மக்களிற்கு ஆவத்து வரத நிலையில் அதை உடைக்குமாறு கடாபி அண்ணை எனக்குக்கட்டளை வழங்கினார்,

சரி என நான் போய் கீவ்மனைச் சந்தித்தேன் அவர் பத்துப்பேரை எனக்குத்தந்தார். அவர்களின் விபரம், முல்லைசெல்வன், நீலவண்ணன உட்பட பத்து பேர்  அடங்கும், அவர்களைக்கூட்டிகொண்டுபோய் ரெட்வானவில் இருந்து எனது கடமையை ஆரம்பித்து பரந்தன் கெமிக்கல் பெற்ரேரி மட்டும் வேகமாக உடைத்துக்கொண்டு 45 நாட்களில் போனோம். அங்கே சென்று கெமிக்கலைப்பார்தபோது அதிலும் கம்பிகள் இருந்தமையால் அதையும் உடைத்துக்கொண்டு இருந்தோம் .அங்கே நின்ற தமிழ்செல்வனின் அரசியல் துறைப்போராளிகளிகள் கெமிக்கலை உடைக்க வேண்டாம் என சொல்ல அதற்குமுல்லைச்செல்வன் நாங்கள் அனுமதியோடுதான் உடைக்கின்றோம் என சொல்ல அவர்கள் தீடீரேன எமது போராளிகளிற்கு அடித்து விட்டார்கள்.

 நிலமைபதட்டமாகயிருந்ததால் அடியை வேண்டிக்கொண்டு என்னிடம் ஓடிவந்தார்கள்.ஆனால் நாங்கள் சொர்ணம் அண்ணையின் வழர்ப்பு அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும் என்பதே அவர் எங்களிற்கு கற்றுத்தந்தபாடம்,அதனால் எனக்கு கடும் போபம் வந்தது.அப்பொழுது ஆயுதம் என்னிடம் மட்டும்தான் இருந்தது அவர்கள் என்னிடம் சொல்ல இவர்கள் பத்துப்பேருக்கும்மீற்றிங்வைத்து நான் ஆயுதத்தோடு முன்னால் சென்று அவர்களிடம் கதைப்பேன். நீங்கள் பின்னால் வந்து அவர்கள் இருவரையும் கட்டிப்பிடித்து ஆயுதங்களை பறித்தவுடன் கையையும்காலையும் காலையும் கட்ட வேண்டும் என சொன்னேன்., திட்டமிட்டதுபோல் அவர்கள் இருவரையும்பிடித்துகையும் காலையும்கட்டி விட்டார்கள்,

ஆனால கடுமையான வீரவசனம் பேசுகின்றார்கள், அதனால் அவர்களின் திமிரை அடக்குவதற்காக மெலியதடி வெட்டு இருவருக்கும் எலும்பு உடையாதவாறு கடுமையாக அடிகொடுத்து இருவரையும்மரத்தில் கட்டிவைத்தேன், நான் வெளியே சென்றதும் அவர்கள் போராளிகளிடம் என்னைப்பற்றிக்கேட்டுள்ளனர், அதற்கு அவர்கள் எமது போராட்டத்தில் கூடுதலான மாற்று இயக்கங்களிற்கு மரண தண்டனை வழங்கியது இவர்தான் .அதுதான் இவரை oscar போடன் என அழைப்பது என சொல்லியுள்ளனர், அதை அவர்கள் கேட்டத்தும் என்னை கையடுத்து கும்பிட்டார்கள், தங்களை மன்னித்துவிடுமாறு கேட்டார்கள், 

ஆனால்நான் அவர்களைவிடவில்லை காரணம். ஆயுதத்தைக்கையில்கொடுத்ததும் கோபத்தில் மாறிச்சுட்டாலும்சுட்டுவிடுவார்கள், அதனால் உங்களின் பொறுப்பாளரரிடம் ஒப்படைப்பேன் என சொல்லி அடுத்த நாள் அரசியல் துறைப்பொறுப்பாளர் ஒருதரிடம் அவர்களையும் நடந்தவிடயத்தையும் எழுத்து மூலம் எழுதி துண்டையும் கொடுத்துஅவர்களையும் ஒப்படைத்தேன்,

ஆனால் இந்த விடயத்தை எமது சிறப்புத் தளபதி கடாபி அண்ணைக்கு நான் தெரிவிக்கவில்லை, அது என்னுடைய தவறு என நினைக்கின்றேன்.எனது கடிதத்தையும் எடுத்துக்கொண்டு பிரிகேடியர் தமிழ் செல்வன் அவர்கள் தலைவரை சந்தித்துள்ளார், கடுமையாகக்கோபம் அடைந்த தலைவர் நான் அவரை தண்டனையிலே போஸ்மரம் உடைக்கவிட அவர் கைதிகள் பரிமாற்றம்செய்துள்ளார், உடனே அவனைச் சண்டைக்குவிடுமாறும் ஆமியைப்பிடித்து  கைதிகள் பரிமாற்றம் செய்யட்டாம். என்று நான் சொன்னதாக அவனிடம் சொல்லு என தலைவர் கடாபி அண்ணையிடம் சொல்லி அனுப்பி இருந்தார்,

 , கடாபி அண்ணை என்னை மட்டும் பரந்தனில் இருந்து உடமைகளுடன் வரச்சொலியிருந்தார், அவரைச்சந்தித்ததும் அவர்களிற்கு, நான்அடிததற்காக கடுமைகாகப்பேசிவிட்டு அண்ணணெ சொன்னதை எனக்குச்சொல்லி கேணல் ராஜேஸ் அவங்களைச்சந்தித்து சண்டைக்குச் செல்லுமாறு கட்டளை வழங்கினார்,

அடுத்து நான்போய் கேணல் ராஜேஸ் அவர்களை  சந்தித்தேன் அப்பொழுது அவர் மூன்று கொம்பணிக்கு வட்டாலியன் தலைவராக இருந்தார், அவரின் மூன்று கொம்பனியும் விசுவமடுகுழத்திற்கு அருகாமையில் நின்று பயிற்சி எடுத்துக்கொண்டுயிருந்தது, அப்பொழுது நான்அங்கே சென்றதும் ஜெகதீசனின் கொம்பணியில் ஒரு பிளோட்டூன் அதாவது 45 போராளிகளிற்குப்பொறுப்பாகஎன்னை விட்டார்.

அங்கே பயிற்சி நிகழ்வு என பொழுதுபோக்காக எமது வாழ்கை போனது, அப்பொழுது பாடகர் மேஜர் மாதன் அண்ணையும் சண்டைப்பயிற்சி ஆசிரியராகநின்றார்,  இரவுநேங்களில் ஒவ்வொரு நாளும் பாட்டுக்கச்சேரி நடக்கும், மாதவன் அண்ணை படிப்பார் நாங்கள் தவிலா அடிப்போம் மிகவும் பொழுதுபோக்காக எமது காலம் நகர்ந்தது,

அன்று காலை அனைத்துப்போராளிகளுடன், நான், வாசன், கப்டன் கெளதமன் -கப்டன் இசையாழன், இளையவன்-  லெப்கேணல் விதுரன்-   விடுதலை- கிரிமாறன் சாரதி–என 300 றிற்கு மேற்பட்ட போராளிகள் குழித்துக்கொண்டுயிருந்தவேளை ஒரு போராளி பட்டமரத்தில் ஏறி தண்ணீரில் குதித்தார். தலையில் ஏதோ அடிபட்டு இருக்கலாம் என நினைக்கின்றேன் அவர் தண்ணீரில்தாண்டுவிட்டார், அனைத்துப்போராளிகளும் தேடியும் அவரைக்கண்டுபிடிக்கமுடியாமல் போய்விட்டது, அப்பொழுது நாங்கள் இருவரைக்காவல் கடமையில் விட்டுத்து நாங்கள் அனைவரும் முகாமிற்குச் சென்றோம், காலையில் வந்து குழக்கரையைத்தேடிப்பார்த்தபோதுஅவரின் பொடி கரையில் ஒதிங்கிக்கிடந்தது.அடுத்த நாள் அஞ்சலி செலுத்தப்பட்டடு இராணுவமரியாதையுடன் அவரின் வித்துடல் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது,

அடுத்த நாள் சிறப்புப்பொறுப்பாளர் கடாபி அண்ணை வந்து அனைவருக்கு ஒரு ஒன்று கூடல் நடந்தது எல்லோருக்கும் புத்தி சொல்லிவிட்டு எவரும் இன்றையில் இருந்து குழத்தில் குளிக்கக்கூடாது என கட்டுப்பாடு விதித்தார், அன்றையில் இருந்து குழக்கரைகளில் கிடங்கு வெட்டி வாளியால் தண்ணீர்  அள்ளி அனைவரும் குழிப்போம்,

06ஆம் மாதம்1996 ஆண்டுமுல்லைத்தீவைபிடிப்பதற்காக அதற்கான மாதிரிப் பயிற்சி தளபதி பால்ராஜ் தலைமையில்நடந்துகொண்டுயிருந்ததுபூனகரியில் நடதுகொண்டுயிருந்தது,,

 அச்சண்டைக்காக  சசிக்குமாரின்

தலையில் ஒரு அணி முன்னர் சென்று விட்டது அந்த அணியில் ஆசிரியர்களான, முல்லைச்செல்வன்- நேசன்- வாசன்- விடுதலை- சுடர்- மணி நெத்தினம்,வேங்கைமார்பன்பவள்ராஜ் இவர்கள் லெப் கேணல் சசிக்குமார் அவர்களின் தலையில் அங்கே நின்றார்கள். இரண்டாம் கட்டமாக  நான் உட்பட, வாசன்- கிரிமாறன்- சாரதி- என10த்துப்பேரை  முல்லைத்தீவுப்பயிற்சிக்காக கேணல் ராஜேஸ் அவர்கள் பூனகரிக்கு அனுப்பினார், அப்பொழுது நாங்கள் அங்கே சென்று தளபதி குமரனைச்சந்தித்தோம்,

அவரைச்சந்தித்ததும் என்னைக்கண்டதும் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்யாகயிருந்தது, அதனால் என்னையும் சசிக்குமாரையும் கூட்டிக்கொண்டு பால்ராஜ் அண்ணையைச்சந்தித்தார். அவர் இருந்த இடத்தில் கறுத்தக்கொழும்பான் மாமரம் காய்த்துப்பழுத்துக் இடந்தன, எங்களைக் கண்டதும் சிரித்த முகத்துடன் பால்ராஜ் அண்ணை வரவேற்றார், ஒரு பாய் போட்டுயிருந்து எங்களோடு கதைக்கத்தொடங்கினார், அவர் இருக்க முதல் ரீ, மாம்பளம், பாலைப்பழம், பிஸ்க்கேட் கொண்டு வந்து எங்களிற்கு வைக்குமாறு கட்டளை வழங்கினார்,

 பின் எங்களோடு கதைக்கத்தொடங்கினார், தலைவர் அவர்களின் இடத்தில் இருந்து ஒரு பிளோட்டுன் அதாவது 45 பேர் வந்துயிருக்கின்றீர்கள் உங்களிற்கு தனிப்பகுதி தருவதற்கு ஆழணி கானது என நினைக்கின்றேன். அதனால் குமரனின் மணலாறு மாவட்ட படையணியோடு இணைந்து பயிற்சியை எடுக்குமாறு அவர் கட்டளை வழங்கினார், அடுத்து நான் ரெட்டி முகாமில் விமானத்திற்கு 200 ரவை அடித்தது இவர் தான் என குமரன்சொல்ல அதைக் கேட்டு அவர் சிரிக்கின்றார், அனைத்துப் போராளிகளிற்கு அவர்களின் வேலையை வைத்து ஒரு பட்டப்பேர் அல்லது ஒரு கேலி செய்வது அது ஒரு வழமையான செயல்ப்பாடாகபோராளிகள் மத்தியில் இருந்தது.

அடுத்து மூன்றாவது ஆக எமது படையணியில் இருந்து  அமலனோடு சில குறிப்பட்ட போராளிகள் வந்தார்கள் .அவர்களோடு எமது படையணிப்போராளிகளின் எண்ணிக்கை 45ந்தாக அதிகரித்தது, அப்பயிற்ச்சியில் கலந்துகொண்ட அனைத்தும் படையணிகளின் விபரம் -ஜேயந்தன் படையணி இரண்டுகொம்பணி -சாழ்ஸ் அன்ரணி இரண்டு கொம்பணி- அரசியல்துறை ஒரு கொம்பணி-மாலதி படையணி ஒரு கொம்பணி-நிதித்துறை ஒரு கொம்பணி,-புலநாய்வுத்துறை ஒரு கொம்பணி கடல்புலிகள் ஒரு கொம்பணி- மணலாறுமாவட்டம் ஒரு கொம்பணி- மொத்தம் 10 த்துக்கொம்பணிகளிற்கு பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது,  பொறுப்பாளராகத்தளபதி பால்ராஜ் அவர்களும்

.

பயிற்சிப்பொறுப்பாளராக மூத்த போராளி தினேஸ்மாஸ்ட்டர்அவர்களும் நியமிக்கப்பட்டு இருந்தார்கள்.

தொடர்ச்சியாகபயிற்சி நடந்துகொண்டு இருந்தது பொராளிகளை சந்தேசம்படுத்துவதற்காக பிரிகேடியர் தமிழேந்தி அண்ணை மாம்பழம் வெண்டிக்கொண்டுவந்து அனைத்துப் போராளிகளிற்கும்கொடுத்து அன்று அனைவரோடும் கலந்து உரையாடல் ஒன்றை நடத்தி விட்டும்ச்சென்றார், அது ஒரு மறக்க முடியாதநாளாகயிருந்தது, அவரின் போராட்டவரலாறு பற்றி ஒரு நீன்ற கதையுள்ளது அதை முதலில் குறிப்பட்டுள்ளேன்,

தொடர்ந்து அடுத்த நாள் தலைவரைச்சந்திப்பதற்காக கொம்பணித் தலைவர்கள் மற்றும் கொம்பனி உதவித் தலைவர்கள தேர்ந்து எடுக்கப்பட்டு தளபதி பாராஜ் அவர்களின் தலையில் சுமார் 50 தலைவர்கள் சென்றோம் அதில் நானும் போனேன், கிழி நொச்சியிலே அது நடந்தது, ஒன்றுகூடல் ஆரம்பித்ததும் பின் இருக்கையில் இருந்த என்னையும் சசிக்குமாரையும் தலைவர் கண்டு விட்டார்,

என்ற ஆட்களும் வந்துயிருக்கிறார்கள்என்று தலைவர்சொல்ல எல்லோரும் எங்கள் இருவரையும் திரும்பிப்பார்த்தார்கள், தலைவர் எங்களை மறக்கவில்லையென நினைத்தபோது அது எங்களிற்குப் பெருமையாகயிருந்தது, அடுத்துதலைவர்பேசத்தொடந்தினார், பூனைத்தொடுவாய்யில் நடந்த சண்டை பற்றி கதைக்கத்தொடங்கினார், அங்கே சண்டை நடந்துகொண்டுயிருக்கும் போது ஒரு கெலிக்கொப்ட்டர் வந்து தரையிறங்கியதாகவும் அப்பொழுது 100 மீற்றர் தூரத்தில் எமது இரு போராளிகள் ஒருவங்களுக்குள் RPG உந்துகணை செலுத்தியோடுயிருந்ததாகவும் ஆனால் பயத்தில் அவ் உலங்குநூர்தியைதாக்கவில்லையெனவும், அதைதான் அறிந்ததும் சரியான கவலை அடைந்ததாகவும் இரண்டு நாட்கள் தனக்கு சரியாக நித்திரைகூடவரவில்லையெனவும்,

உடனே அவர்கள் இருவரையும் போராட்டத்தில் இருந்து வீட்டிற்கு அனுப்பியதாகவும் அப்படியாராவது இருந்தால் வேளைக்கு அவர்கள் எனக்குத் தெரியப்படுத்தினால் அவர்களை நான் மகிழ்ச்சியோடு வீட்டிற்கு அனுப்பி வைப்பேன் என தலைவர் தெரியப்படுத்தினார், தொடர்ந்து பேசிய தலைவர் அனைவரும, வீரமாக சண்டையிட வேண்டும் என குறி றிப்பிட்ட தலைவர் துணிந்தவன் வெல்வான் பயந்தவன் தோற்பான் இதுதான் போர் வீரர்களின் வெற்றியின் இரகசியம் என தலைவர் குறிப்பிட்டார்,

 இக்காலத்தில் தலைவரின்பாதுகாப்புப் பொறுப்பாளராகவும் இம்பிரான் பாண்டியன் படையணிச் சிறப்புத் தளபதியாகவும் தளபதி கடாபி அவர்களே இருந்தார்,அடுத்து அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது வுறியாணிச்சாட்டாடு ஐஸ் கிறிம் என மிகவும் சுவையான உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டதும் .சிறு ஓய்வுக்குப் பின்னர்  தலைவருக்கும் பொறுப்பாளர்களிற்கு இடையே கலந்து உரையாடல் நடைபெற்றது,

முதலாவது கேழ்வியை ஜேந்தன் படையணிப்போராளி முன்வைத்தார் சண்டை நடந்துகொண்டுயிருக்கும் போது எதிரி பரா லையிற் அடித்தால் விழுந்துபடுத்து கவர் எடுப்பதா? அல்லது அடித்துக்கொண்டு உள்ளே நுளைவதா இதுதான்அந்தக்கேழ்வி விழுந்து படுக்க வேணும் என தினேஸ்மாஸ்ட்டர் சொல்ல, அதுதவறு அடித்துக்கொண்டே உள்ளே செல்ல வேண்டும் என தலைவர் பதில்அழித்தார்.

அடுத்து தினேஸ்மாஸ்ட்டறிடம் தலைவர் ஒரு கேழ்விகேட்டார்? வேகமாகமுன்னேறிவரும் இராணுவத்தை எப்படி நிறுத்துவது என்பதே அவரின் கேழ்வி, அதற்கு மாஸ்ட்டர் இரண்டு  LMG களைபோட்டு அடித்துக்கொண்டு RPG ஆலும் அடித்துக்கொண்டு நாங்களும் முன்னேறி தாக்குதல் நடத்த வேண்டும் என குறிப்பிட்டார்.

அடுத்த கேழ்வி பிரிகேடியர் விதுசா அவர்களைப்பார்த்து தலைவர் ஒரு கேழ்வி கேட்டார், யாழ்பாணத்தை ஏன்விட்ட நீங்கள் என்பதே அதின் கேழ்வி,திடீரென தானே முந்தி அது தந்திர ஊபாய பின்வாங்கல் என தினேஸ் மாஸ்ட்டர் பதில் அழித்தார், யார் பின் வாங்கச் சொன்னது என தலைவர் கேட்டார். அதைக் கேட்டதும் மாஸ்ட்டர் சிரித்தார் .தொடர்ந்து எல்லோரும் சிரித்தார்கள், அவ்விடம் பெரும் சத்தமாகயிருந்தது, இதை கேட்டுக்கொண்டுயிருந்த தலைவர் வெடியரின் தவறான பயிற்சிதான் யாழ்பாணப்பின்னடைவிற்கான காரணம் என்றார். மீண்டும் எல்லோரும் சிரிக்கத் தொடங்கினார்கள், அடுத்து தலைவர் எதிரியின் நகர்வை நிறுத்த முடியாமல் தான் பின்வாங்கும் நிலை ஏற்பட்டது என தலைவர் சொல்ல அனைவரும் அமைதியாக யிருந்தார்கள்,அடுத்து கூட்டம் நிறைவு அடைந்தது தலைவர் எங்களிடம் இருந்து விடை பெற்றார், நாங்கள் மீண்டும் பூனகரிக்குச்சென்றோம்,

அங்கே சென்று கடுமையான பயிற்சியில் ஈடுபட்டோம் இரவு விடிய விடிய பயிற்சி பகல் நித்திரை இப்படிதான் எங்களின் காலம் நகர்ந்தது சில நாட்களில் பகலையிலும் பயிற்சி நடக்கும் ஆனால் ஓய்வு நேரங்களில் தளபதி குமரன் என்னையும் சசியையும் கூட்டிக்கொண்டு பால்ராஜ் அண்ணையை சந்திக்கக்கூட்டிக்கொண்டு செல்வான் அங்கே சென்று தனிப்பட்டரீதியாக அவரோடு கதைத்து பன்பல் அடித்து விட்டு மீண்டும் எங்களின் கொட்டிலிக்குவருவோம், அவரை சந்திக்கும் போதல்லாம் பால்ரீ சோட்டீற்என தந்து எங்களை நல்லாக உவசரிப்பார், நாங்களும் சாப்பிட்டுவிட்டு பசி ஆறிய பின்னர்தான்வருவோம்,

மேலே திருத்தம் செய்யப்பட்டது

அடுத்து மீண்டும் தலைவரைச்சந்திக்க வேண்டும் என தளபதி பால்ராஜ் அண்ணை எங்களிடம் சொன்னார் தொடர்ந்து அவரின் தலைமையில் .மகளீர் தளபதிகளான தளபதி ரெட்ணா மற்றும் அசோக உட்பட மொத்தம் 50 அணித் தலைவர்கள் கிளிநொச்சி சென்றோம், அங்கே பிரத்தியேகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் எங்களிற்குச்சாப்பாடு ஒழுங்குபடுத்தப்பட்டது, நாங்கள் அங்கே சென்றதும் சாப்பிட்டோம், ஆனால் அங்கே தலைவரும் நின்றார் எங்களோடு கதைக்கவில்லை, பால்ராஜ் அண்ணை தளபதி குமரனோடு மட்டும் கதைத்துக்கொண்டுயிருந்தார், உணவு சாப்பிட்டு முடிந்ததும், நாங்கள் அங்கு இருந்து எங்கள் 50 பேரையும் ஏற்றிய பெரிய வாகனம் நகரத் தொடங்கியது ஆனால் எங்கே செல்கின்றோம் என்பது தெரியாது வேகமாகச் சென்று வன்னிவிழான் குழத்திற்குச்சென்றோம் அது பெரிய புல்வெளியாகயிருந்தது, தண்ணீர் குழத்தில் குறைந்த காரணத்தால் அது பெரிய வெட்டையாகயிருந்தது,

நாங்கள் சென்று அரை மணித்தியாலத்தால் தேசியத்தலைவரும் அங்கே வந்தார்,

 வந்தவுடன் எல்லாப் போராளிகளையும் கூப்பிட்டு தலைவர் கதைத்தார் முன்னோரு காலத்தில் எதிரிகாவல் அரனுக்குள் இருந்து சுட்டுக்கொண்டுயிருந்தால் அதை நாங்கள் 300 மீற்றறில் இருந்து பார்த்துக் கொண்டுயிருப்போம், இனி அப்படி நாங்கள் இருக்க வேண்டிய தேவையில்லை, SPG 9 னால் துல்லியமாக சுட்டு அழிக்க முடியும், என சொல்லிவிட்டு 300 மீற்றர் தூரத்தில் காவல் அரண்போல் அமைக்கப்பட்ட பொய்சனிக்கு தளபதி கடாபி அவர்கள் அடித்துக்காட்டினார், தொடர்ந்து தலைவர் உட்பட அனைவரும் அடித்த இடத்தைப்பார்வையிட்டோம், அது முடிந்ததும்

120 மில்லிமீற்றர் எறிகனை அடித்துக்காண்பிக்கப்பட்டதுஇந்த மோட்டார்களைஇயக்குவதில் எமது விடுதலைப் போராட்டத்தில் பெரும்பாலும் பெண் போராளிகளே கடமையாற்றினார்கள், துல்லியமாக எதிரியின் இலக்கைத்தாக்குவதில் இவர்கள் ஆண் போராளிகளை விட மிகவும் திறமையாகச் செயல்பட்டார்கள், அதனால், இவர்களின் திறமையைக்கண்ட தலைவர் இவர்களிற்கே அக்கடமையை வழங்கியிருந்தார், அதையும் பார்வையிட்டோம் அனைத்தும் முடிந்ததும் அனைவருக்கும் ஐஸ் கிறிம் மற்றும் றோள் என்பன வழங்கப்பட்டது. அனைத்தும் முடிந்ததும் தலைவர் எங்களிடம் இருந்து விடை பெற்றார், அப்பொழுது நேரம் பிற்பகல் ஆறுமணி ஆகிவிட்டதுதொடர்ந்து நாங்கள் அனைவரும் பால்ராஜ் அண்ணையின் தலையில் மீண்டும் பூனகரிக்குப்போய்சேர்ந்தோம். 

18/07/1996 அன்று நடந்த முல்லைதீவு சண்டை பற்றி இனிப் பார்ப்போம்

முல்லைச்சமர் நாளைக்கு என்று பெரும் மகிழ்ச்சியில் இருந்தபோது திடீரேன எங்களிற்கு ஒரு அதிர்ச்சி தகவல் வந்தது, பால்ராஜ் அண்ணை வரட்டாம், உடனே நானும் சிசிக்குமாரும் அங்கே சென்றோம், தளபதி குமரன் தளபதி பால்ராத், தினேஸ் மாஸ்ட்டர், அசோக, தூயவள், கயல்விளி என பூககரி வயல் பிரதேசமான தண்ணீர் ஓடும் வாய்க்கால் கரையோரத்தில் நிக்கின்றார்கள்,

நாங்கள் சென்றதும், வணக்கம் சொல்லிவிட்டு தளபதி பால்ராஜ் அண்ணன கதையை ஆரம்பித்தார், நீங்கள் தாக்குதலிக்கான மாதிரிப் பயிற்சியை தளபதி குமரன் தலைமையிலான மணலாறு மாவட்டப் போராளிகளோடுதான் எடுத்தீர்கள், அவர்கள் அனைவரும் உங்களிற்கு நன்கு தெரிந்த முகப் பழக்கமாகயிருக்கும் என நினைக்கின்றேன்

,

ஆனால் இப்பொழுது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது,

அது நான் எடுக்கவில்லை அதைதலைவரே எடுத்துள்ளார், பெண் போராளிள், தாங்களும் ஒரு தடை உடைக்க சந்தர்ப்பம் தருமாறு தலைவரிடம் கேட்டுள்ளனர், அவர்களிற்கு உதவியாகச் செல்வதற்கு வேறு படையணிகளைக் கேட்ட போதும் அவர்கள் அதை விரும்பவில்லை அதனால் தலைவர் தனது பொடியளையே பெண் போராளிகளோடு அனுப்புமாறு தலைவர் என்னிடம் சொல்லியுள்ளார் , அதனால் அசோக தலைமையில் 20 பெண் போராகளும் உங்களில் 20 ஆண் போராளிகளும் , சண்டை தொடங்கிய பின் கடல்கரை யோராமாக 600  மீற்றர் வேகமாக ஓடி விக்டர் 02 தடையை உடைக்க வேண்டும் என கூறி முடித்தார், தலைவர் சொன்ன என்ற காரணத்தால் நாங்கள் எதுகும் பேசவில்லை அமைதியாக நின்றோம்,

தொடர்ந்து பெண் போராளிகளின் தலைவர்களை தினேஸ் மாஸ்ட்டர் எங்களிற்கு அறிமுகப்படுத்தினார், சிகப்பாகயிருப்பவள் அசோகா, அவள் தான் பிரதான பொறுப்பாராகவருகின்றாள், இரண்டாவது கட்டையாகயிருப்பவள் தூயவள், நெடுவலாகயிருப்பவள் கயல்விளி என எங்களிற்குதெரியப்படுத்தினார்,

18/07 1996 அன்று இரவு எங்கள் அனைவரையும் முல்லைதீவு கேம் அலம்பில் பக்கமாக ஏற்றிக்கொண்டுவிட்டார்கள், நாங்கள் ஆண் பெண் போராளிகள் இரு அணிகளும் நகர்ந்து முகாமில் இருந்து 600 மீற்றறில் சண்டைக்கு உரியவாறு தாயாறாகயிருந்தோம்

சரியக நடு இரவுச ண்டை தொடங்கியது நாங்கள் 600 மீற்றரில்இருந்து அசோக தனது பிள்ளைகளைக் கூட்டிக்கொட்டு கடல்கரைதண்ணீருக்குள்ளால் ஓடிக்கொண்டுயிருக்க நாங்களும் அவர்களோடு சேர்ந்து வேகமாக ஓடிக்கொண்டுயிருக்கின்றோம்,

அப்பொழுது இராணுவமும் பரலையிற் அடித்துக்கொண்டு எங்களை நோக்கிச் சுட்டுக்கொண்டுயிருக்கின்றான், அவ்வேளை கயல்விளிக்குக்பலமான காயம் ஏற்பட்டது, கடுமையான இரத்தம் ஓடிக்கொண்டுயிருந்தமையால் அவருக்கு உதவியாக ஒரு பெண் போராளியை விட்டுத்து நாங்கள் எல்லோரும் வேகமாக கேம்பை நோக்கி ஓடிக்கொண்டுயிருக்கின்றோம்,

 அறிகில் சென்றதும் நாங்கள் அனைவரும் கடல் கரைப்பார்த்தவாறு தயார் ஆக நின்றோம்.

பின் அச்சண்டை தொடர்பாக அசோக குறிப்பிடுகையில்,

 அங்கே சென்றதும்.நான் வேக மாகச் செயல்பட ஆரம்மானேன். முதலில் ரோப்பிற்ரோவைகொண்டுபோய் கப்பி றோளிக்குக் கீழே வைத்து வெடிக்க வைத்தேன். அடுத்து வேகமாக எனது டொங்கானால் எதிரியின் காவல் அரனை நோக்கி இரண்டு செல்கள் அடித்தேன்,

அடுத்து வேகமாக அடித்துக்கொண்டுஉள்ளே இறங்கிங்கோ என கட்டளை வழங்கினேன் அனைவரும் வேகமாக உள்ளே நுளைந்து தாக்குதல் நடத்திக்கொண்டுசென்றார்கள், அடுத்து 4 காவல் அரனையும் ஒரு மினி முகாமையும் பிடித்தபின், எங்களை பெண் போராளிகளோடு வந்து இணையுமாறு கட்டளை வந்தது, நான் அனைத்துப் பெண் போராளிகளையும் கூட்டிக்கொண்டுபோய் அவர்களோடு இணைந்தேன்,

அடுத்த நாள்19 திகதி காலை பத்து மணிக்கு எதிரியின் சினைப்பர் தாக்குதலில் நான் நெஞ்சில்காயம் அடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டேன், என அசோகா குறிப்பிட்டார், இப் புத்தகம் எழுதும் காலத்தில் அசோக வெளிநாடு ஒன்றில் உயிரோடு இருந்துள்ளார். இதில் வரும் சசிக்குமார் லெப்கேணல் கயல்விளி அக்காலப்பகுதியில் நடைபெற்ற சண்டையில் வீரச்சாவு அடைந்துள்ளனர்,

இனி நான் என்ன செய்தேன் என்பதை விரிவாகக் குறிப்பிடுகின்றேன்,

அசோக சென்றதும் பின்னர் நான் நாலு காவல் அரனையும் அங்கே இருந்த மினி முகாமையும் செக்பண்ணி அங்கே இருந்த ஆயுத வெடி பொருட்களைபின்னால் அனுப்பினேன், தொடர்ந்து தளபதி குமரன்தானும் என்ர பக்கம் வரப்போவதாக தொலைக்தொடர்பு மூலம் தெரிவித்தார், சரி என்று சொல்லி அவர்களைவரச்சொன்னேன் அவர்களும் பச்சை சிக்னல் ரோச் அடித்துக்கொண்டு வந்தார்கள், நானும் அதே ரோச்சை அடித்து அவர்களை உள்ளே எடுத்தேன்

., அடுத்து அவர்களைக் கடல் கரைப் பக்கம் அனுப்பிவிட்டேன்,, தொடர்ந்து காலை ஆறு மணி ஆனதும் நாங்களும் அவர்களின் கடல் கரைப்பாக்கமாக சென்று ஆண் பெண் போராளிகள் 500 பேர்வரை முல்லை முகாமைப் பார்த்தவாறு லையன் பொய் சனில் இருந்தோம், இரு இராணுவ வீரர்கள் எங்களை நோக்கி சலண்டர் அடைய வந்தார்கள் அவர்களைப் பார்த்து பயந்து பெண்போராளிகள் அனுமதி இல்லாமல் சுட்டு விட்டார்கள் அவர்கள் இருவரும் செத்து விட்டார்கள் அது எமக்கு பெரும் கவலையாகயிருந்தது ஏனெனில் அவர்களை சுடமல்வைத்துயிருந்தால் ஏனையவர்களும் வந்துயிருப்பார்கள் என பல போராளிகள் குழம்பியவாறு இருந்தார்கள்,

தொடர்ந்து 11மணிக்கு எங்களின் அணி சசி, வாசன், கிரிமாறன், சாரதி, அமலன் என 20 போராளிகள் முல்லைத்தீவு சேச் பக்கமாகஉள்ளே இறங்கினோம், அப்பொழுது சாரதியிடம் 8ட்டு குண்டைக்கொடுத்து முன் வயல் வெட்டையில் இருக்கும் ஆமிக்கு குண்டுஅடிக்குமாறு சசி கட்டளை வழங்கினான், ஆனால் அவனின் கைகள் நடுங்குவதை நான் அவதானித்தேன், பயந்த ஒரு போராளியை அனுப்பி அவ் நடவடிக்கை தோல்வி அடைவதை விட நானே போய் அதைச் செய்யலாம் என நினைத்து அவனிடம் இருந்தஅனைத்துக்குண்டுகளையும் வேண்டிக்கொண்டு நானே சென்றேன்,

அங்கே சென்றதும் 25 பேருக்கு மேலே ஆமி படுத்துக் கிடந்து அடுத்தடக்கம் பார்த்துஅடித்துக்கொண்டுகிடக்கின்றார்கள் ஆனால் அவர்கள் என்னைக் காணவில்லை நான் குறிபார்த்து 8ட்டு இராணுவத்தை சுட்டேன், தொடர்ந்து 8ட்டுக்குண்டுகளையும் களட்டி அவர்கள் மீதி எறிந்தேன், ஒரு மாமி மரத்திற்கு மேலே ஏறி என்னை நோக்கி சரமாரியாகச் சுட்டான், எனது போக்கியில் வெடி றைபுளில் வெடி வகுத்தில் இரண்டு வெடி அனைத்தக் குடல்களும் வெளியே வந்துவிட்டது, நான் மெது மெதுவாக தவண்டு ஒருமரத்திற்கு பின்னால்பாதுகாப்பாகயிருந்து கொண்டு குடலை எடுத்து சாரத்திற்குள் வைத்து இடுப்பில் கட்டினேன், சிறிது நேரத்தால் பின்னால் மெது மெதுவாகச் சென்று பழய இடத்திற்குச் சென்று அதில் இருந்தேன், கிரிமாறன், சாரதி வாசன் இவர்கள் வந்து என்னத்துக்கிக்கொண்டு கடல் கரையில் போட்டார்கள் ஒரு பெண் மருத்துவப் போராளி என்னை பார்த்துக்கொண்டுயிருந்தார், அடுத்த நான்மயங்கி விட்டேன் மூன்று நாளையால் கண் முளித்துப் பார்த்தேன் ஒட்டிசுட்டான் மருத்துவமனையில் இருந்தேன்,19/07/1996அன்று பிற்பகல் ஐந்துமணியமவில் முல்லைதீவுப் படையிரை பாதுகாற்கவன சுமார் 700 படையினரைக்காவிக்கொண்டு முல்லைதீவு அண்மித்த அலம்பில்பகுதியில் ஒரு பாரிய தரையிறக்கம் ஒன்றைச் செய்தது சிங்களப்படை.

இச்சாவாலை எப்படி முறியடிக்காலம் என தலைவர் சிந்தித்தார். அதேகாலம் தலைவரின் நேரடிக்கட்டளையில் செயல்படும் படையாணியான இம்ரான் பாண்டியன் படையணியைச் சார்ந்த மூன்று கொம்பணி போராளிகள் கேணல் ராஜேஸ் அவர்களின் தலைமையில் விசுவமடு குழக்கரையில் பயிற்சி எடுத்துக்கொண்டுயிருந்தார்கள்.

 அதின் கொம்பனி தலைவர்களான அம்மா மற்றும் ஜெகதீசன் தலைமையில் சுமார் 450 போராளிகள் அச்சண்டையை முறியடிப்பதற்காக தலைவரால் களம் இறக்கப்பட்டார்கள். போனவுடன் போராளிகள் தரையிறங்கிய இராணுவத்துடன் மூர்க்கத்தனமானச்சண்டையிட்டார்கள், அன்று நடந்த சண்டையில்  கப்டன் கௌதமன், கப்டன் இசையழகன் கட்டன் ஆனந்தபாவு கப்டன் கலைவாணன் என சுமார 50 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்.

 நூற்றுக்கு மேற்பட்ட போராளிகள் காயம் அடைந்தனர், படையனரைப்பாதுகாற்க வந்தவர்கள் தங்களைப்பாது காற்கக் வேண்டியதேவை அவர்களிற்கு ஏற்பட்டது, அதனால் இறந்த சகாக்களையும் காயப்பட்டவர்களாயும் விட்டுத்து வந்த போட்டில் ஏறி ஓடித்தப்பியது. இராணுவம் ஆனால் இரண்டு கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது அத்தாக்குதலில் இருந்து மயிர் இழையில் தம்பிச் சென்றது இராணுவம்,கெளதமன் எமது தலைவரின்பாதுகப்புப்படையணிப் புலநாய்வுப் பொறுப்பாளராவார்,

கெளதமனின் வீரச்சாவிற்குப்பிறகு படையணிப் புலனாய்வுப்பொறுப்பாராக தளபதி இரட்ணம் அவர்களை பிரிகேடியர் கடாபி  அவர்கள் நியமனித்தர்,

,தை மாதம்1998 ஆம் ஆண்டு வரை அவரே புலநாய்வுப் பொறுப்பாளராகயிருந்தார், தொடர்ந்து அவரின் திறமையான செயல்பாட்டைபார்த்த பிரிகேடியர் கடாபி அவர்கள் தளபதி ரெட்ணம் அவர்களை இம்ரான் பாண்டியின் படையணித்தளபதியாக நியமனித்தார், அவரின் இடத்திற்கு திரு அறிவுமணி அவர்கள் நியமணிக்கப்பட்டார்,  

சங்கறண்ணையின் விரச்சாவிற்குமுதல் வாரம் படையணிப்புலநாய்வுப்பொறுப்பாளராக இசையாழன் பிரிகேடியர் கடாபி அவர்களால் நியமணிக்கப்பட்டார் அறிவுமணி இப்புத்தகம் எழுதும் காலத்தில் வெளிநாடு ஒன்றில்உயிரோடுயிருந்துள்ளார்

26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அன்றைய தினம் துக்குடியிருப்புக்காட்டுப்பகுதியில் தலைவர் இருந்த முகாமிற்குத் தளபதி சங்கர் அவர்கள் சென்று இருவரும் தியாகி திலீபனின் நினைநாளை முன்னிட்டு உணவு இன்றி உண்ணாவிரதம் இருந்துள்ளனர், தொடர்ந்து அவ்விரதத்தை நிறைவு செய்த தளபதி சங்கர் அவர்கள் தனது வீட்டிற்குச்சென்றுகொண்டுயிருக்கும்போது எதிரிகளின் தாக்குதலிற்கு உள்ளாகி வீரப்சாவு அடைந்தார்,

அக்காலப்பகுதியில் தமிழீழ மக்களும், போராளிகளும் உணர்வுபூர்வமாகதிலீபன் அவர்களின் நினைவுநாளை கொண்டாடிக்கொண்டாடிகொண்டுயிருந்த காலம்  அது

சங்கமித்திருந்த வேளையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட அரசகச்செயலானது சிறீலங்கா அரசின் போர்மீது உள்ள விருப்பைக் காட்டுவதுடன், தமிழீழ மக்களினதும், போராளிகளினதும் நெஞ்சங்களில் அனலை மூட்டிவிட்டிருக்கின்றது இதைப் பின்னர் பார்ப்போம்

அலம்பில் சண் சண்டை நடந்துகொண்டுயிருக்க முல்லைத்தீவு முழுமையாகப்பிடிபட்டுள்ளது இப்பொழுது அதின்கடத்தைப் பார்ப்போம்,

அதின் இடம் பற்றிய விபரம்  சுமார் 2900 மீற்றர் நீளமும், 1500 மீற்றர் அகலமும், 8500 மீற்றர் சுற்றளவும் உடையதும் முல்லை மாவட்டத்தின் பிரதான செயற்பாட்டு மற்றும் நிர்வாக மையமுமான முல்லைத்தீவு நகரையும், அதனோடு சேர்ந்த பெரும் கடற்பரப்பையும் ஆக்கிரமித்திருந்ததும் சிறிலங்கா படை.

அது ஒரு இராணுவ முகாமாக அமைக்கப்பட்டு, பத்தாண்டு காலத்தில் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, குடியிருந்த மக்களை விரட்டியடித்துவிட்டு சுற்றியிருந்த கிராமங்களையும் உள்ளெடுத்த பெரும் படைத்தளமாக மாற்றமடைந்திருந்ததுமான முல்லைத்தீவு சிங்களப் படைத்தளம், கடந்த 18/07/1996 அன்று இரவு  அதிகாலை ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின் மூலம் முழுமையாகவும், நிரந்தரமாகவும் கைப்பற்றப்பட்டதுடன்

, முல்லைத்தீவு நகரமும் விடுவிக்கப்பட்டது. என உண்மையிலேயே உலகம் நம்பியிருந்த வேளையில் நிகழ்த்தப்படுகின்ற தாக்குதல் என்பதால் சமர்க்கள நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, முழுமையான போர்த்திட்டத்தையும் நேரடியாகவே நெறிப்படுத்தி வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த தலைவர் பிரபாகரன் அவர்கள், நடவடிக்கைக்கு ‘ஓயாத அலைகள்’ என்று பெயர் சூட்டினார். தாக்குதல் ஆரம்பித்த ஒரு மணி நேரத்திற்குள் முதலில் வெற்றிலைக்கேணியிலிருந்தும், பின்பு திருமலையிலிருந்தும் சிங்களக் கடற்படை களத்துக்கு விரைந்தது.  ஆனால் உதவ வந்தவர்களை பாது காற்க முடியாத களச் சூழல் அரச படையினரிக்கு ஏற்ப்பட்டது,

உள்ளே இறங்கியிருந்த புலிகளின் படையணிகளைக் கடல்வழியாகத் தாக்கவும் முயற்சித்தபோது, அது கடற்புலிகளின் கடும் எதிர்ப்பைச் சந்திக்கவேண்டியிருந்தது. 18ஆம் திகதி காலை 8.30 மணியளவில் 8மணி நேரக் கடுஞ்சண்டைகளின் பின் வெளிப்புறக் காப்பு வியூகத்தை உடைத்தெறிந்து, கடல்வழியாகவும் தரைவழியாகவும் பல முனைகளினூடு நுழைந்த புலிகளின் போரணிகள், உப முகாம்களையும்  வீழ்த்தி பிரதான முகாம் பகுதியைத் தாக்கி தளத்தின் கட்டளைப் பணிமனை, ‘ஆட்டிலறி’ மற்றும் மோட்டர் ஏவுதளம், தொலைத்தொடர்பு நிலையம், போர்த் தளபாடக்களஞ்சியம் முதலியவற்றைக் கைப்பற்றி, எஞ்சிய துருப்புக்களை – பிரதான முகாமின் ஒரு பகுதியான விஜயபாகு ரெஜிமெண்டின் 6 ஆவது படையணிச் செயற்பாட்டுத் தலைமையகப் பகுதிக்குள் முடக்கி வளைத்துக்கொண்டதுடன், தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சேதப்பட்டும் களைப்படைந்துமிருந்த தாக்குதலணிகளை மீள ஒழுங்கமைத்து, இரவானதும் முகாமின் எஞ்சிய பகுதியைத் தாக்கிக் கைப்பற்றுவதற்கான தயாரிப்புக்களில் தளபதிகள் பாடுபட்டுக்கொண்டிருந்த வேளை மாலை, 2.30 மணியளவில், முகாமிற்குத் தென்புறமாக 3 கிலோ மீற்றர் தூரத்தில் மீட்புப் படையினரைத் தரையிறக்கி – இன்னொரு சண்டை முனையைத் திறந்தான் எதிரி; மீட்பு நடவடிக்கைக்கு ‘திரிவிட பகர’ எனப்பெயரும் சூட்டினான். தளத் தாக்குதல் பூர்த்தியடையாத நிலையிலும், இன்னொரு முனையில் எதிரியை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்ட நிலையிலும், சிக்கலடைந்த இந்தக் களநிலைமையிலும் .துரிதமாகத் திட்டமிட்ட தலைவர் அவர்கள், தரையிறங்கியவர்களை முற்றுகையிட்டு – இறுக்கமான சுற்றிவளைப்புக்குள் வைத்துக்கொண்டு, முதலில், உடனடியாகத் தளத் தாக்குதலைப் பூர்த்திசெய்ய முடிவெடுத்தார்; அதனை முடித்துக்கொண்ட பின்பு, ஆறுதலாகவும் முழுமையாகவும், தரையிறங்கியவர்களைக் கவனிக்க முடியும்.எனத் தீர்மானித்தார். அவரது திட்டத்தினைத் தளபதிகள் விரைவுடன் செயற்படுத்தியபோது, அன்றிரவு முல்லைத்தீவுப் படைத்தளம் புலிகளின் படையணிகளிடம் முழுமையாக வீழ்ச்சிகண்டது; அதே சமநேரத்தில்இ தரையிறக்கப்பட்ட படை மரணப்பொறிக்குள் சிக்கிக்கொண்டது.

 கடுமையான சுற்றிவளைப்புத் தாக்குதலுக்கு உள்ளாhகியிருந்த நிலையில் – உதவிக்கு அனுப்பிய –‘கொமாண்டோக்களுக்கு உதவி தேவைப்பட்டது 19 ஆம் திகதி காலை, அடுத்த தொகுதி கொமாண்டோக்கள் வான்வழி மூலமே தரையிறக்கப்பட்டனர்; கடல்வழி உதவி வழங்கல் சாத்தியப்படவில்லை. அன்று மாலை 4.30 மணிக்கு, ‘திரிவிட பகர’ வில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ‘ரணவிரு’ பீரங்கிக் கடலூர்தி மூழ்கடிக்கப்பட்டது. 20 ஆம் திகதி வான்வழிமூலமான இன்னுமொரு உதவி வழங்கலுக்கு எதிரி எத்தனித்தான். புலிகளின் கடுமையான மோட்டர் எறிகணைத் தாக்குதலில், எம்.ஐ.17 துருப்புக்காவி உலங்குவானூர்தி சேதப்பட்டது,

 முயற்சி பலிக்கவில்லை, வானூர்திகள் திரும்பின. 21 ஆம் திகதி ‘கிபிர்’ மற்றும் ‘புக்காரா’ வானூர்திகள் மூலமும் கடற்புலிகளின் படகுகள் மீது கடுமையான தாக்குதலை நிகழ்த்தியவண்ணம், தரையிறங்கும் கலம்மூலம் ஒருதொகைக் கொமாண்டோக்கள் தரையிறக்கப்பட்டனர். எனினும், எவ்வித அசைவையும் செய்ய முடியாத இறுக்கமுற்றுகைக்குள் அவர்கள், தொடர்ச்சியான இழப்புக்களையே சந்தித்தனர். 22ஆம் திகதி எவ்வித வழங்கலும் சாத்தியப்படவில்லை; 23ஆம் திகதி, கரைக்கு வந்த தரையிறக்கும் கலம் மீது புலிகள் மோட்டர் எறிகணை வீசித் தாக்கியதில், அது பலத்த சேதப்பட்டு பின்னுக்கு எடுக்கப்பட்டது. 24 ஆம் திகதி இன்னொரு தரையிறக்கும்கலம், கரும்புலித் தாக்குதலுக்கு அதிர்ஷ்டவசமாகத் தப்பித்துக் கொண்டது. 25 ஆம் திகதியும் கடல்வழியாக மேலும் துருப்புக்களைத் தரையிறக்க முடிந்தபோதும் அவர்கள் தமது நோக்கத்தில் எதுவும் செய்ய முடியாத நிர்க்கதி நிலைக்குள் சிக்குண்டிருப்பதை, 

எதிரித் தலைமை உணர்ந்தது; அத்தோடு, பெரும் பொறிக்குள் அகப்பட்டுக்கொண்டகொமாண்டோக்கள் பெரும் உயிரிழப்புக்களைச் சந்திப்பது மட்டுமன்றி, அவர்களை நிரந்தரமாகவே மீட்டெடுக்க முடியாத பேரழிவு நிகழ்ந்து விடுமோ எனவும் அச்சப்பட்டது. அரசாங்கம்,

 தப்பியோடும் மனநிலையிலேயே இருந்த தன் “மீட்புப்படை” யை, 26ஆம் திகதி, சிங்களத் தலைமை அவதி அவதியாக மீட்டெடுத்தது. தளம் மீதான தாக்கி அழிக்கும் சண்டைகளிலும், மீட்புப் படைகள் மீதான தடுத்து நிறுத்தும் மற்றும் தாக்கி அழிக்கும் சண்டைகளிலும் – தரையிலும், கடலிலும் 332 புலி வீரர்கள் களப்பலியாகினர். தளத்திலிருந்தவர்களில் குறைந்தது 1200 படையினரும், உதவிப் படையினரில் குறைந்தது 100 படையினரும் கொல்லப்பட்டனர். தமது படைகளால் புலிகளிடம் இழக்கப்பட்ட சுடுகருவிகள், மற்றும் போர்த் தளபாடங்களின் பெறுமதி 200 கோடி ரூபாக்களுக்கு அதிகம் என்று, சிங்களத் தரப்பிலேயே சொல்லப்படுகின்றது. 24 வயதுடைய தனது போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் இயக்கம் பெற்ற தீரம்மிகு  பெரும் இராணுவ வெற்றிகளாக, முல்லைத்தீவுச் சமரும் ‘சத்ஜய’ படையெடுப்பை எதிர்கொண்ட சண்டைகளும் திகழ்கின்றன

10/081996 அன்று களிநொச்சியைப்பிடித்தது அரசபடை,

 முல்லைத்தீவைப்பிடித்து சரியாக 20 நாட்களில் சச்சயே என்ற பேரில் 11 டாங்கிகளைக்கொண்டு உமயாழ்புரத்த்தில் இருந்து பாரிய ஒரு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது இராணுவம், அதை எதிர்த்து தளபதி பால்ராஜ் தலைமையில், இம்ரான் பாண்டியன் படையணி, மாலதிபடையணி ,சாழ்ஸ் அன்ரனிபடையணி மற்றும் அரசியல்துறை என நாலு பிரிவுகளும் அதை எதிர்த்து கடுமையாகப் சண்டையிட்டனர்,
 ஒவ்வொரு நடவடிக்கையிலும் சுமார் 50 தொடக்கம் 60 என தொடர்ந்து இராணுவ பொடிகளை விடுதலைப்புலிகள் கைப்பற்றிக்கொண்டே இருந்தார்கள் இந்நடவடிக்கையில் சுமார் 500 வரையான இராணுவவொடிமடிகள்IC,R,Cயிடம்கொடுக்கப்பட்டபோதிலும் .
இராணுவ நடவடிக்கையை அவர்கள் நிருத்தவில்லை தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருந்தார்கள், விடுதலைபுலிகளிக்கும் பாரிய இழப்பு ஏற்பட்டது கப்டன் சொர்ணன் உட்டபட 15 போராளிகள் இம்ரான்பாண்டியன் படையணியில் மட்டும் வீரச்சாவு அடைந்தார்கள் மற்றப்படையணிகளிலும் நூற்றுக்கு மேற்பட்ட போராளிகள்.வீரச்சாவு அடைந்தார்கள். இராணும் கிளிநொச்சியைக்கைப்பற்றியது மாங்குழப்பக்கம்டிப்போ சந்திவரை முல்லைதீவுப்பக்கம் பரந்தன் வரை பூனகரிப்பக்கம் ஒருகிலோ மீற்றர்வரைமுன்நேறிப்பிடித்தது, ராணுவம் கிளி உருத்திரபுரம் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் இருந்தது,சுற்றிவர காவல் அரண்களை அமைத்து பலப்படுத்தியது இராணும் இவர்களிற்கு என்ன நடந்தது எனபிறகுபார்ப்போம்,

ஜெயசுக்குறு என்ற பேரில் ஏ9 பாதையை பிடிப்பதற்கு சிங்கள இராணுவம் பாரிய ஒரு நடவடிக்கை ஆரம்பித்தது.


 அது பல முனைகளில் இரானுவம் முன்னேறி கிளிநொச்சி அம்பகாமம் மட்டும் வந்தது .ஆனால் அப்பொழுது விடுதலைப் புலிகள் பலமாகயிருந்த காலம் அது. அப்பொழுது ரஜீவன் நாலில் பயிற்சி எடுத்த புதிய போராளிகள் 150 மற்றும் அவர்களின் ஆசிரியர்களான ஜெயசுதன், விடுதலை .வேங்கைமார்பன் என அனைவரையும் கொண்டிக்கொண்டு அவசரமாக அக்பறை சந்திக்குமாறு தளபதி கடாபி அண்ணை எனக்குக் கட்டளை வழங்கினார், 

நான் உடனே போய் அவரைச் சந்தித்தேன் அவர் உடனே இரண்டாவது லைனயை பொறுப்படுக்குமாறு எங்களிற்குக்கட்டளை வழங்கினார். உடனே அவ்விடத்தைப் பொறுப்படுத்ததும் அனைத்துப்போராளிகளையும் பிரித்து காவல் அரண் அமைபதற்கு விட்டேன்,  ஒரு மணித்தியாலத்தால் சண்டை தொடங்கிய விட்டது,

 அப்பொழுது கடுமையான செல்விழுந்தவண்ணம் இருந்தது அப்பொழுது நாம் கொண்டு சென்ற புதிய போராளி அருவி வீரசாவு அடைந்தார். அடுத்து மணிவண்ணன் இரண்டு கால்களும் தூண்டிக்கப்பட்டு காயம் அடைந்தார்அவர் மருத்துவமனை, கொன்று செல்லும்வளியில் அவரும் வீரச்சாவுஅடைந்தார், அடுத்து கப்டன் சிறை வீடுச்சாவு அடைந்தார்,

ஐயசிக்குறுய் படைக்கு விழுந்த முதலாவது மரண அடியாக தாண்டிக்குளம் தாக்குதல் அமைந்துவிட்டது. ” புலிகள் காட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றனர் ” என்ற அரசின் பிரச்சாரத்தின் மத்தியில் , தப்பிப்பிழைத்த தாண்டிக்குளம் படையினர் சிலர் தங்களை உருமாற்றி – சிவிலியன் உடையணிந்து – வவுனியாவுக்குள் ஓடினர் என்று செய்திகள் வெளிவந்தன. இப்பெரும் தாக்குதலின் போது மூன்று கரும்புலிகள் உட்பட 80 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள் 

லெப் கேணல் அக்பர் இது நடந்து கொண்டுயிருக்க இதை முறியடிப்பதற்காக தேசியத் தலைவரால் தளபதி கருணா தலைமையில் 600 போராளிகள் மட்டக்களப்பில் இருந்து எடுக்கப்பட்டனர், அனைவரும் அனைவரும் வந்ததும் இரண்டு வருடமாக இராணுவம் பிடித்த இடங்களை தளபதி சொர்ணம் தலையையில் கட்டளை அதிகாரிகளான கருணா, பால்ராஜ் அனைவரும் கட்டளை வழக்கிக்கொண்டு இராணுவத்தைக் கலைத்துக் கொண்டு சென்றனர்,

அப்படி சென்று கொண்டு இருக்கும் போது தாண்டிக் குழ முகாம் பலமாகயிருந்தது அதனால்

கரும்புலி மேஜர் யாழினிமுதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி

உட்பட நாலு கரும்புலிகள் தங்களை அற்பணித்தனர்

முதற் பெண் தரைக்கரும்புலி ” மேஜர் யாழினி  எந்த விடயத்திலும் கண்டபடி அலட்டிக்கொள்ளாத அமைதியான போராளி.

அவளுக்குள்ளே கனன்று கொண்டிருந்த எரிமலையைப் பற்றியோ, உள்மனப் போராட்டங்களையோ, ஆழ்ந்து ஊறுகின்ற மென்மையைப் பற்றியோ நாங்கள் உணர்ந்ததில்லை. எல்லாவற்றையும் தனக்குள் பூட்டிவைத்தது போன்ற அமைதி. தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கின்ற பண்பு. தான் நெருங்கிப் பழகுகின்ற ஒரு சில போராளிகளுக்கும் மட்டுமே தன்னைப்பற்றி வெளிப்படுத்திய சில தருணங்கள்.

இரண்டுவருடங்களில் பிடித்த இடங்களை மூன்று நாட்களில் விடுதலைப் புலிகள்பிடித்தார்கள்இந்த வெற்றிக்குகரும்புலிகளின் நடவடிக்கை மெகமுக்கியமாக கருதப்பட்டது,

/27/09/1998 வான்புலிகளின் முதலாவதுபடை உருவாக்கப்பட்டது

தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படைப்பலத்தில் தரைப்படை, கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக வான்படை என்ற மூன்றாவது படையை உருவாக்க வேண்டும் என நினைத்தார்.அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக முதலில் ஒரு சிறந்த தலைவரைத் தேர்வு செய்தார் அவர் தான் தளபதி சங்கர் அவர்கள் . மிகவும் ஒரு விசுவாசமான போராளியும் எந்த நேரமும் தன்னை அன்பணிக்கத் துணித்தவர்.
அதை விட வெளிநாடுகளில் சென்று உயர்படிப்புப்படித்தவர் விமானங்களைப் பற்றியோ அல்லது அதன் உதிரிப் பாகங்களைப் பற்றியோ மிகவும் தெளிவாகத் தெரிந்தவர் விடுதலைப்புலிகளில் அவர் ஒரு ஆரம்ப கால உறுப்பினர். விடுதலை போராட்டத்திற்கு தலைவரரோடு தோள்ளோடுதோள் நின்று உளைத்த ஒரு போர்வீரன். இவரின் தலைமையிலே விமானப்படை உருவாக்கப்பட்டது.
உதிரிப்பாகங்கள் வெளிநாடுகளில் வேண்டப்பட்டு சிறிய ரக கிளைடர் விமானங்கள் விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டது அதற்கான பொறுப்பாளராகவும் விமானப்படைப் போராளிகளிற்கான ஆசிரியராகவும் தளபதி சங்கர் அவர்களே செயல்பட்டார். கடுமையான உளைப்பில் விமானங்களை உருவாக்கி அதை வெள்ளோட்டம் விடுவதற்காக தளபதி சங்கர் அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டுயிருந்தார். அதற்கு தலைவர் 26/03 2007 வளியமைத்துக்கொடுத்தார் அதிகாலை1.45 மணியளவில் தனது முதலாவது தாக்குதலை கட்டுநாயக்காவிமான நிலையம் மீது எமது விமானம் தாக்கியது அதுவே அவர்களின் முதலாவது தாக்குதல் தொடர்ந்து அவர்களின் வேலை நடந்து கொண்டுயிருந்தது

106368678_165444421653626_5746217963794702925_n

20/06/1997 கடற்கரும்புலி மேஜர் பாலன் அவர்களின் தியாகம் விடுதலைப்புலகளின் போராட்ட வரலாற்றில் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உன்னத பதிவாகக் கருதப்படுகின்றது,

மறைந்தும் மறையாத ஈழத்துக் காவியம் இவன் கரும்புலி உயிரோடு பிடிபட்டு விட்டது இதுதான் போராளிகளின் மனங்களில் ஓடிக்கொண்டுயிருந்த காலம் அது அதை அவன் எப்படி எதிர்கொண்டான்,

யப்பான் அடிப்படை பயிற்சிமுகாமில் பயிற்சி நிறைவில் சிறப்புத்தளபதி சூசை அண்ணையின் மெய்ப்பாதுகாப்பு அணிக்காக தெரிவுசெய்யப்பட்ட ஐவரில் பாலனும் ஒருவன்.

இயக்கத்தில் இணையும்போதே கரும்புலியாக தன்னை இந்தப்போராட்டத்தில் அர்ப்பணிக்க வேண்டும் எனும் குறிக்கோளுடனேயே இணைந்தவன்.

சூசையண்ணையின் மெய்ப்பாதுகாவலனாக அவரோடு கூடவே இருந்தபோதும்,தனது விருப்பத்தை சூசையண்ணைக்கு அவன் கடிதம் எழுதியே வெளிப்படுத்தினான்.

சூசையண்ணை அதனை மறுத்தபோது பாலன் அழுதேவிட்டான்.

சூசையண்ணை எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதம் அவரது மிக நெருக்கமான நண்பரான மேஜர் றஞ்சன் சித்தப்பா அவர்கள் ஏந்திக் களமாடியிருந்த M16 துப்பாக்கி பாலனுக்கே வழங்கப்பட்டிருந்தது.

மிகத்துடிப்புள்ள இளைஞனாக சூசையண்ணையின் நம்பிக்கையைப் பெற்ற போராளியாக அவன் விளங்கினான்.சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவினரின் பயிற்சி விடயங்கள் மற்றும் அதுசார்ந்த அனைத்து விடயங்களும் பாலன் ஊடாகவே சூசையண்ணை பேணியிருந்தார். இரகசிய நடவடிக்கைப் பயிற்சிகளை பார்வையிடுவதற்கு செல்லும்போது அதிகம் பாலனையே சூசையண்ணை கூட்டிச்செல்வார்.

ஒரு மெய்ப்பாதுகாவலர் போதும் நீங்கள் ஏனைய பணிகளைச் செய்யுங்கள் எனக்கூறிவிட்டு பாலனை மட்டும் அழைப்பார்.

பாலன் வந்தபின்னர் நாம் அவனிடம் பயிற்சிகள்பற்றி விசாரிப்போம்.ஆனால் சூசையண்ணையைவிட அவன் இரகசியம் பாதுகாப்பான் எம்மிடம்.

சூசையண்ணை கோபமாக இருக்கும் நேரங்களில் மெய்ப்பாதுகாவலனாக பாலனையே மாட்டி விடுவோம்.அவரிடம் பேச்சு வாங்குவதிலிருந்து சிலவேளை அடியும் விழும் தருணங்களிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள அதனை பாலன் அனுபவிப்பான்.

வோக்கிக்கு பற்றரி மாற்றவில்லையாயினும்,கோட்சீற்றை மறந்துவிட்டிற்று வந்தாலும்சரி,வல்லைவெளியால போகும்போது கண்ணாடி திறந்து ஹெலியை அவதானிக்கிறதென்டாலும்சரி ஏன் அதிகம்,வாகனத்துக்கு கோன் வேலை செய்யவில்லையெண்டாலும் முன்னுக்கு இருப்பவருக்குத்தான் மூக்குடையும்.

அதனால முன்சீற்றில பாலன் ஏறும்படியாக மிக கவனத்துடன் நடந்துகொள்வோம்.சிலவேளை நான் முன்னால் ஏறிவிட்டால் பின்னுக்கிருந்து வேண்டுமென்றே சூசையண்ணைக்கு கோபம்வரும்படி நடந்துகொள்வார்கள்.

முகாம் வந்ததும் இவற்றைச் சொல்லிச்சொல்லி சிரித்து மகிழ்வோம்.ஆனாலும் திரும்பவும் சூசையண்ணை தயாராகி பஜிரோவுக்கு கிட்டவாக வரும்போது முதல் ஆளாக M16 துப்பாக்கியுடன் பாலன் தயாராக நிற்பான்.

ஒரு மெய்ப்பாதுகாவலனாக களமுனைகளில் எதிரியின் தாக்குதல்களிலிருந்து சூசையண்ணையை பாதுகாக்க உரிமையுடன் அவர் கையைப்பிடித்து இழுத்து பங்கருக்குள் விடுவான்.அதற்காக அவரிடம் அடியும் வாங்குவான்.சூசையண்ணைக்கு மெய்ப்பாதுகாவலனாக மட்டுமல்ல ஒரு தாதியாகவிருந்து பாதுகாத்து பராமரித்தவன் அவன்.

கிளாலிக்கடல்கடந்து வன்னிக்கு செல்லும் நாட்களில் சூசையண்ணையை தூக்கிச்சுமந்து படகேற்றுவான் அவருடைய முழங்கால் காயத்தின் தன்மையையும் வலியையும் உணர்ந்தவன் பாலன்.

பாலனின் இரகசியக் காப்புக்கான தியாகத்துடன் கூடிய வீரமரணமென்பது எமது விடுதலை இயக்கத்தில் புதிய எடுத்துக்காட்டாக போராளிகளுக்கு படிப்பிக்கப்பட்டது.

1992 காலப்பகுதியில் கடற்புலிகளின் புதிய போராளிகளாக மட்டு-அம்பாறையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 30 பேர் கொண்ட அணியில் பாலனும் இணைக்கப்பட்டிருந்தான்.

அன்றிலிருந்து அவன் தனது உறவுகளுடனான தொடர்புகள் எதுவுமின்றி தேசப் பணியைத் தொடர்ந்தவன் சூசையண்ணையின் மெய்ப்பாதுகாப்பிலும் கடற்கரும்புலிகளுக்கான பயற்சிகளிலும் அதிகம் ஈடுபட்டு வந்திருந்தான்.

கிழக்கு வினியோக நடவடிக்கைப் பணியில் சிறிதுகாலம் செயற்பட்ட பாலன் செம்மலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி விரைந்த படகில் அனுப்பப்பட்டிருந்தான் 

அங்கிருந்து திரும்புகையில் கடலில் ஏற்பட்ட திடீர்மோதலில் பாலன் வந்த படகு ஏற்கனவே சேதமடைந்த காரணத்தால் கடலில் மூழ்கியபோது அவன் நீந்திக் கரையேறினான்.கரையேறியவன் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தான்.

தன் வாய்மூலம் எந்தவித இரகசியமும் வெளிப்படக்கூடாதென்பதை முடிவெடுத்தவன் தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான்” . நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான் அவன்.

மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். இன்னும் தனக்கான ஆபத்து விட்டுவிடவில்லை என்பதும் எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான்.

ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். பலவாறு முயற்சித்து முயற்சித்து இறுதியில்தான் அவன் அந்த முடிவையெடுத்தான்.

நினைத்தும் பார்க்க முடியாத முடிவு அது. “தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி, தன்னுடைய மண்டையுடைத்து தனக்கான தற்கொடை மரணத்தை அவன் அங்கு தேடிக்கொண்டான்.”

அவனுடைய வீரமரணத்தின் பின்னர் சூசையண்ணை சொல்வார் இந்த M16 ஐ பார்க்கிறபோது றஞ்சன் சித்தப்பாவுக்கு பிறகு கப்டன் கற்பகன்,கப்டன் எல்லாளன்,மேஜர் சீனு இப்ப மேஜர் பாலன் ஆகியோருடைய நினைவுகள்தான் எனக்கு அடிக்கடி வந்துபோகிறது என்று.

அவருடைய மனதில் இடம்பிடித்த பாலன் வரலாற்றிலும் தனக்கானதொரு தடத்தைப் பதித்து தமிழர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்துக் கொண்டான்.
அறிமுகப்படுத்திய நாள் இந்த நாள்.இந் நாள் அதிகாலை 1.45 மணியளவில் சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான ஒரு மரபுவழி குண்டு வீச்சு தாக்குதலுடன் தமது முதலாவது வான் தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டியது.
வான்புலிகள் (Tamileelam Air Force – TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு.

வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், ‘வானோடி’ என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர். வான்புலிகள் வரலாறு 85, 86 காலப் பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்கதொடங்கி விட்டார்கள்.

செப்டம்பர் 27, 1998 – 1998ம் ஆண்டு மாவீரர்தின உரையின்போது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் வான்புலிப் படைப்பிரிவு தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அந்நிகழ்வின்போது வான்புலிகளுக்கு சொந்தமான வான்கலத்திலிருந்து பூக்கள் தூவப்பட்டதாக நேரில்பார்த்தவர்களுடைய அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“2000 ம் ஆண்டு‘வான்புலிகள் ஆண்டு’ என தமிழீழ விடுதலைப்புலிகளால் அறிவிக்கப்பட்டது
கேணல் சங்கர் என்று அழைக்கப்பட்ட வித்தியாலிங்கம் சொர்னலிங்கம் தலைமையில் வான்புலிகள் பிரிவுதொடங்கப்பட்டது. டிசம்பர் 2001 அவர் கொல்லப்படும் வரை வான்புலிகள் பிரிவின் தலைவராக செயற்பட்டார். சங்கர் பற்றி சில குறிப்பு சங்கர் அவர்களிற்கு திருமணவயது வந்ததும் திருமணம் பார்க்க போராளிகள் தேடிக்கொண்டுயிடுந்தார்கள். அதற்கு தளபதி சங்கர் சொன்ன பதில் மணம் முடிக்காத பெண்ணை திருமணம் செய்வதை விட எனது அண்ணன் கப்டன் கரன் அவர்களின் மனைவியை திருமணம் செய்யப்போவதாகத்தெரிவித்து இரண்டு பிள்ளைகளோடு இருந்த அந்தப் பெண்ணை திருமணம் செய்து இறுதிவரை வாழ்ந்த ஒரு போர்வீரனாவார்.
திலிபன் நினைவு நாளிற்கு தலைவரோடு சேர்ந்து உண்ணாவிரதம் இருந்து அதை நிறைவுசெய்துவிட்டு வெறும்வகுத்தோடு தனது வீட்டிற்கு சென்றுகொண்டுயிருந்தவேளை11/ 2001 புதுக்குடியிருப்பு இரணைப்பாலை றோட்டில் வைத்து சிங்கள இராணுவத்தின் கிளைமர்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஜனவரி 26, 2005 – இரணைமடு விமான ஓடுதளம் பற்றிய இலங்கை இராணுவ அறிக்கைஆகஸ்டு 11, 2006 – யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி வான்படைத்தளம் (இலங்கை இராணுவத்தினருக்கு சொந்தமானது) வான்புலிகளால் வான்கலங்களை பயன்படுத்தித் தாக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற ஊகங்களை உருவாக்கும்படியான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

26 ஏப்ரல்  2007: பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தின.

ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ளகொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய்குதங்களையும் குண்டு வீசி தாக்கின.
ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய்குதங்களையும் குண்டு வீசி தாக்கின.

அக்டோபர் 22, 2007 – எல்லாளன் நடவடிக்கை 2007: அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது அதிகாலை வான், மற்றும் தரை என நடத்திய இரு முனைத் தாக்குதலில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டு 13 படையினர்கொல்லப்பட்டனர்.

24/07/2001கட்டுநாயக்கா விமான நிலையம் மீதான கரும்புலிகளின் ஊழித்தாண்டம்.!!

தமிழின விடுதலைப் போராட்ட வரலாற்றில் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பின் (1990 இல்) எம் மக்கள் மீதான தாக்குதலில் இராணுவத்தின் நேரடி தாக்குதல் எதுவும் ஏற்படாது, புலிகள் கவசமாக இருந்து மக்களை பாதுகாத்தனர். ஆன போதும் சிங்கள விமான குண்டுவீச்சுக்கு அடிக்கடி மக்கள் இலக்காகி பெருமளவில் கொல்லப்பட்டனர்.

இதில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், குடியிருப்புகள் எதுவும் விதிவிலக்கில்லாமல் சிங்களத்தால் பல நூறு கிலோ குண்டுகளைப் போட்டு வகை தொகை இன்றி வயதோ அல்லது பால் வேறுபாடோ இன்றி மக்களை கொன்றனர். இந்தக் குண்டு வீச்சு விமானங்களை அவ்வப்போது புலிகள் சுட்டு வீழ்த்திய போதும் தொடர்ந்து அதன் கோரத்தாண்டவம் குறைவில்லாது அரங்கேறியது.

அதனால் அவர்களில் தங்குமிடத்திலேயே வைத்து ஒட்டு மொத்தமாக அழிக்க புலிகள் முடிவெடுத்தனர். பலசுற்றுப் பாதுகாப்பு அடுக்குகளைக் கொண்ட கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தையும், பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தையும் ஒரே நேரத்தில் தாக்க புலிகள் முடிவெடுத்தனர்.

அந்த நேரத்தில் இதற்கான வேவுப் பணியில் புலிகளின் உளவுத்துறையினரும் ஈடுபட்டிருந்தனர். உளவுப் போராளிகளின் கடும் முயற்சியால் விமானத் தளத்தினுள் நுழைந்து வேவு பார்ப்பதற்கான இடம் ஒன்று இனம் காணப்பட்டது. சிங்களத்தின் உயர் பாதுகாப்பு வளையத்தை கொண்ட பெரும் இலக்கை புலிகள் அழிக்க தெரிவு செய்திருந்தனர்.

பல தடவை வேவுப் புலிகள் தளத்தினுள் நுழைந்து தகவலை திரட்டியபின் பத்திரமாக தளம் திரும்பிய பின் 15 பேர் கொண்ட கரும்புலிகள் அணியொன்று தெரிவு செய்யப்பட்டு பல விவாதங்களுக்கு பின் துல்லியமான திட்டமிடலின் இறுதியில், அதற்கான மாதிரி ஒன்றை உருவாக்கி போராளிகளுக்கு கடும் பயிற்சியின் பின் தாக்குதலுக்கான நாளும் குறிக்கப் பட்டு கரும்புலிகள் இலக்கு நோக்கி நகர்த்தப்பட்டனர்.

இலக்கை அடைந்த பின் போராளிகளுக்கு மேலதிக கனரக ஆயுதங்கள் வழங்கப்பட்ட பின் ஒரு அணி ரோசா (ROSA) பஸ் ஒன்றில் வந்து இறங்கியது இன்னொரு அணி ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடினர். அந்த நேரத்தில் அந்த மைதானத்தில் சிங்கள இசைநிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. இதை புலிகள் அந்த நேரத்தில் எதிர் பாக்கவில்லை.

அணிகளும் இலக்கு நோக்கி நகர்த்தப்பட்ட வேளை, மீண்டும் தளம் திரும்ப முடியாத நிலை.! அதனால் நிகழ்ச்சி முடியும் வரை காத்திருந்த புலிகள் 24/07/2001 அதிகாலை 3.00 மணிக்கு கழிவு நீர் செல்லும் மதகு ஒன்றின் ஊடாக உள் நுழைந்தது ஒரு அணி விமானப் படைத்தளத்தினுள்ளும், இன்னொரு அணி சர்வதேச விமானத் தளத்தினுள்ளும் நுழைந்து தயாரானது.

புலிகள் தலைமையால் போட்ட திட்டத்துக்கு அமைய முதலாவது தாக்குதல் மின்சாரத்தை தடை செய்யும் நோக்கில் அங்கிருந்த ரான்ஸ்போமர் மீது தாக்குதல் மேற்கொண்டு அந்த பிரதேசத்தை இருட்டில் மூழ்கடித்தபின் கரும்புலிகளின் ஊழித்தாண்டவம் ஆரம்பமானது. மின்னல் வேக தாக்குதல், ஆனால், மிகவும் நிதானமாக தமது இலக்கை அழித்தனர் கரும்புலிகள்.

இதில் சிங்கள விமானப் படைத்தளத்தில் நின்று சண்டை இட்ட போராளிகளுக்கு பார்ப்பதெல்லாம் இலக்கே. காரணம் அவைகள் படைத்துறை சார்ந்தவை. ஆனால் சர்வதேச விமான நிலையத்துக்குள் நுழைந்த போராளிகளுக்கு இறுக்கமான இரண்டு உத்தரவுகள் தலைவரால் போடப்பட்டிருந்தது. ஒன்று அங்கு வந்து போகும் எந்த சாதாரண பயணிக்கும் சிறு காயம் கூட ஏற்படக்கூடாது. இரண்டு சிங்கள அரசின் விமானங்களைத் தவிர வேறு எந்த நாட்டு விமானங்கள் மீதும் ஒரு துப்பாக்கிச் சூடும் பட்டுவிடக்கூடாது என்பதே தலைவரின் இறுக்கமான கட்டளை.

அது போலவே எந்த பயணிக்கோ அல்லது விமானங்களுக்கோ எதுவும் நடவாதும் தலைவரின் கட்டளையை சிறிதளவும் பிசகாது நிறைவேற்றி இருந்தனர் எம் வீரர்கள். ஒரு படை கட்டமைப்பில் பிரதானமானது கட்டளைக்கு கீழ் படிதலும், அதை நிறைவேற்றுவதும். உலகின் எல்லா இராணுவ வரலாறுகளையும் ஆராய்ந்தால் புலிகளைப் போல ஒழுக்கமானவர்களும், கட்டளைகளுக்கு கீழ்படிபவர்களும் இல்லை என்பதே என் வாதம்.

சண்டை தொடங்கியதும் சிங்களத்தின் 500 பேர் கொண்ட அதி சிறப்பு பயிற்சி பெற்ற இராணுவத்தினர் கொண்டு வந்து களத்தில் இறக்கப்பட்டனர். இவர்களை எதிர்த்து 15 கரும்புலிகள் சண்டையிட்டபடி தமது இலக்குகளையும் அழித்தனர். தம்மிடம் இருந்த ரவைகள், எறிகணைகள் தீரும் வரை காலை 8.30 வரை சண்டையிட்டனர்.

அதன் பின் எஞ்சியோர் தம்முடலில் கட்டியிருந்த வெடி குண்டுகளை வெடிக்க வைத்து அதன் மூலமும் பெரும் சேதங்களை விளைவித்தனர். இந்த தாக்குதலில் 1 எம்ஐ-17 உலங்குவானூர்தி, 2 எம்ஐ-24 உலங்குவானூர்தி, 3 கே-8 பயிற்சி விமானங்கள், 2 கிபிர் சண்டை விமானங்கள், 1 மிக்-27 சண்டை விமானம், 3 ஏர் பஸ், சேதமாக்கப்பட்ட வானூர்திகள்: 5 கே-8 பயிற்சி விமானங்கள், 5 கிபிர் சண்டை விமானங்கள், 1 மிக்-27 கிபிர் சண்டை விமானம், 2 ஏர்பஸ், 1 இராணுவ வானூர்திகள் போன்றன அழிக்கப்பட்டன..

இதில் குறித்த நேரத்தில் சண்டை ஆரம்பமாகி இருந்தால் இன்னும் அதிகமான சேதத்தை உண்டு பண்ணியிருப்பார்கள் புலிகள். அதிகாலையின் பின்னும் சண்டை நீடித்தமையால் வெளிச்சம் காரணமாக எதிரிக்கு சாதகமான நிலை இருந்த போதும் புலிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்டத்தை விட கூடுதல் சேதத்தை உண்டு பண்ணியபின் தாக்குதலை நிறைவு செய்தனர்.

பெரும் வெற்றியை பெற்று தந்து எம் மக்களின் மனங்களில் நிரந்தரமாக குடிகொண்டார். இந்த தாக்குதலில் சிங்களம் மட்டுமல்ல உலகமே உறைந்து போனது. தமிழர் வீரம் கண்டு உலகம் வியக்க, தமிழர் தலை நிமிர்ந்தனர். இந்தத் தாக்குதலில் புலிகளின் இராணுவ வல்லமையை பறைசாற்றி

26/03/2005 தமிழீழ தேசிய தொலைக்காட்சி உருவாக்கம்

2005 மார்ச் 26 ம் திகதி துவங்கப்பட்ட இத் தொலைக்காட்சிச் சேவையின் தலைமை நிலையம் கிளிநொச்சியில் அமைந்திருந்தது. இச்சேவையே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது செய்மதித் தொலைக்காட்சிச் சேவையாகும்.
தினமும் இரண்டு மணிநேரம் ஓளிபரப்பான இந்த தொலைக்காட்சி சேவையை. இலங்கை, இந்தியா, மாலைதீவு, பாக்கிஸ்தான், ஐரோப்பா போன்ற நாடுகளில் செய்மதித் தொடர்பு மூலம் இதனைப் பார்க்க முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 கலைகளில் மட்டுமல்ல தமிழுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஊடகத்துறைக்கும் தமிழீழ தேசம் எந்த ஒரு தேசத்திற்கும் பின் நிற்காமல் முன் நின்ற பொற்காலம் தமிழர் நாம் எம்மை ஆண்ட விடுதலை புலிகள் காலம்.

போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவது மட்டும் போதாது ,தமது நோக்கங்கள்,கொள்கைகள்,அக்கால சமாதான காலசெயற்பாடுகள்,தமது நிர்வாக கட்டமைப்புகள்,மற்றும் மக்களின் வாழ்வியல் ,இப்படி பலவற்றை உலகெங்கும் கொண்டு செல்வதும் உலகெங்கினும் அறியச்செய்வதும் அப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் என்பதனையும் புரிந்து கொண்டு உலகில் ஊடகங்களின் வலிமை உணர்ந்து எமக்கான ஊடகம் மட்டுமே எம் தரப்பு உண்மைகளை சொல்லும் என உருவாக்கப்பட்டது.
ஊடகங்கள் என்னதான் நடுநிலமை வேடம் போட்டாலும் தாம் சார்ந்த நாடுகளின் நலன்களையே அவை முன்னிலைப்படுத்தும்.அவற்றுக்கு எதிரானசெய்திகளை அல்லது கருத்துக்களை எத்துணை உண்மையாக இருந்தாலும் அவை வெளிப்படுத்த மறுப்பதுடன் சில வேளைகளில் தமக்கு சார்பாக செய்திகளை திரிப்பதும் உண்டு. இதில் உலகின் புகழ்பூத்த சில ஊடகங்களும் விதிவிலக்கில்லை.

 . இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைப்பெற்ற பல சம்பவங்கள் இலங்கை ஊடகங்களால் மறைக்கப்பட்டன அத்துடன் சிலவற்றை திரித்தும் வெளியிட்டனர்.இதில் அரச ,தனியார் ஊடகங்களென்ற பேதங்கள் இருக்கவில்லை.அப்படியும் சில செய்திகள் வெளிவந்தநிலையில் போட்டதுதான் பத்திரிகைதணிக்கை என்ற பெரியதொரு பூட்டு.

ஆரம்ப நாட்களில் புலிகளின் கையில் இருந்தது பத்திரிகை ஒன்றுதான்.அதுகூட யாழப்பாணம் மற்றும் வன்னியின் சில பகுதிகளுடன் முடங்கவேண்டிய நிலை. இப்படியான நிலையில் பரந்து பட்ட அளவில் செய்திகளை கொண்டு போகவேண்டிய தேவை ஏற்பட்ட போது வந்துதான்”புலிகளின் குரல்” வானொலி.ஆரம்பத்தில் யாழப்பாணத்தில் மட்டும் கேட்க முடிந்த புலிகளின் குரல் வானொலி பின்பு வன்னியில் இருந்து ஒலிபரப்பாகிறது.
அத்துடன் 2000ம் ஆண்டிலிருந்து “தேதுன்ன” என்ற பெயரில் புலிகளின் குரல் வானொலி தனது சிங்கள மொழி ஒலிபரப்பினையும் ஆரம்பித்து சிங்கள மக்களுக்கு தமது நோக்கங்கள்,கொள்கைகள்,செய்திகள் போன்றவற்றை அறிந்து கொள்ள வசதிசெய்ததுடன் இலங்கையின் அரச,சிங்களஆங்கில ஊடகங்களின் முகத்திரையினை கிழிக்க ஆரம்பித்தது.பல சிங்கள மக்கள் மட்டும் அல்ல இராணுவத்தினர் கூட இதன் மூலம் சரியான களநிலவரங்களை அறிந்து கொண்டனர்.

 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் “நிதர்சனம்”என்ற பெயரில் சிலமணிநேர தொலைக்காட்சி ஒலிபரப்பினை புலிகள்நடத்தியதும் பின்னர் இலங்கைக்கு வந்த இந்திய ஆக்கிரமிப்பு படையினரால் அவை அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பல தடைகளை வென்று போராட்டத்தோடு ஊடக போராட்டத்தையும் வெற்றிகரமாக முன்னகர்த்திய பெருமை தமிழீழ விடுதலை புலிகளுக்கே உரித்தானது.
இன்று ஈழ மண்ணில் எங்கள் ஆயுத போராட்டமும் ஊடக சேவைகளும் முடக்கப்பட்டு இருக்கலாம். இணையதளங்கள் வாயிலாக ஒவ்வொரு தமிழனும் ஊடகவியலாளனாக மாறி இருக்கும் எழுச்சியும் உலகெங்கும் தமிழ் ஊடகங்கள் பல்கி வருகின்ற பேராற்றலும் எங்கள் தாய் மண்ணின் ஊடக எழுச்சி விதைத்த விதைப்புகளில் இருந்து முளைத்தவையே என்றால் மிகை இல்லை.

 களத்தில் ஆயுதம் ஏந்திய போராளிகள் போல் இன்று எழுத்தோடு ஆயுதம் ஏந்தும் போராளிகளால் எங்கள் போராட்டம் முன்னகர்ந்தே செல்கிறது

பாகம் 05

  01/01/1996 2ம் லெப். மாலதி படையணிஉருவாக்கம்

மாலதி,

தாய் நிலம் விடியும்

எனும் கனவோடு

மண்ணிலே நீ விழுந்தாய்.

உன் பெயர் சொல்லி

எம் படையணி தன்னை

அண்ணன் வளர்த்தெடுத்தான்.

(நன்றி – கவிதை அம்புலி)

01/01/1996  மகளீர் படையணியாக செயல்பட்ட பெண்கள் அணி மாலதி படையணியாக தலைவரால் உருவாக்கப்பட்டது,சூரியக் கதிர் – 01 எதிர் நடவடிக்கையை இப்படையணி எதிர்கொண்டதுஇதுவே இப்படையணிக்கு கன்னி சமராக இருந்தது.

, விடுதலைப்புலிகள் மகளிர் படையணி, தன்னை 2ஆம் லெப். மாலதி படையணியாக உருமாற்றியிருந்தஅந்த நாள் பெண் போராளிகள்பத்தியில் பெரும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.

சூரியக் கதிர் 02 நடவடிக்கைக்கு சிங்களப் படைத்தலைமை தயாரானது. 2ஆம் லெப். மாலதி படையணி வடமராட்சியின் வாதரவத்தை, கப்புதூ, மண்டான், வல்வை வெளி, தொண்டமனாற்றுச்சந்திப் பகுதிகளில் நிலைகொண்டது.

சிங்களப் படையினரின் நடவடிக்கையில் தெரிந்த வேறுபாடு, அவர்களின் வரவு வாதரவத்தைப் பக்கமாக இருக்கலாம் என்ற ஊகத்தை ஏற்படுத்தியது. எமது வேவு நடவடிக்கை தொடங்கியது.

வாதரவத்தையின் வெளிப்புறக் காப்பரண்களைக் கடந்து எம்மவர்கள் உள்நுழைய, இரவைப் பகலாக்கும் மின் விளக்குகள் ஒப்பவில்லை. கப்டன் கோபியின் அணி மறுபடி மறுபடி முயன்றது. காப்பரண்களுக்கு முன்னால் நாட்டப்பட்டுள்ள கம்பங்களில் சில மின்விளக்குகள் எமது புறமாகவும், சில படையினரைப் பார்த்தபடியும் கட்டப்பட்டிருந்தன. எமக்கு எதிர்த்திசையில் கட்டப்பட்ட மின் விளக்கு ஒளிரும்போது எம் திசையிலிருக்கும் கம்பம் சிறுகோடாக நிழலை விழுத்தும். அந்த நிழலைப் பயன்படுத்திக்கூட பகையரணை நெருங்க பலமுறை முயன்றும் ……

படையினர் நடவடிக்கையைத் தொடங்கப்போகின்றனர் என்று உள்ளுணர்வு சொன்னது. இன்று நான்காவது நாள் எப்படியாவது போயாக வேண்டும்.

இப்போது முன்னிலவு. பின்னிருட்டு நள்ளிரவில் மின் பிறப்பாக்கி ஓய்வெடுக்கும் 10 – 15 நிமிட இடைவெளியைப் பயன்படுத்தி உள்நுழைந்து, நிலைமையை அவதானித்து திரும்பிவரும் முடிவை கோபி எடுத்தார்.

இது சரிவருமா, இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்க நேரமுமில்லை. இதை விட்டால் படைத் தளத்தினுட் புக வேறு வழியுமில்லை.

1996 ஏப்பிரல் 02 கோபியின் அணி நகர்ந்தது. முன்னணி அவதானிப்பு நிலையை அடைந்தது. சற்று நிதானித்து, மேலும் முன்னகர்ந்து தடைக் கம்பியை நெருங்க முன்பே வழியில் இராணுவம் எதிர்ப்பட்டது.

முயற்சியைக் கைவிடமுடியாது. போகத்தான் வேண்டும். மெல்லப் பக்கவாட்டாக விலகி, மீண்டும் முன்னேற, மறுபடியும் இராணுவம் எதிர்ப்பட்டது. மீண்டும் பக்கவாட்டாக விலகி, முன்னோக்கி நகர முயல, மின்பிறப்பாக்கி ஓய்ந்தது.

இனித் தாமதிக்க முடியாது. பத்து நிமிடங்களுள் உள்நுழைந்து வெளித்திரும்ப வேண்டும் ஓட்டத்தில் போய் முதலாவது தடைக் கம்பியை உள்நுழைவதற்காக உயர்த்திப் பிடிக்க, ஒருவர் உள்நுழைய முயல, தடைக் கம்பியிலிருந்து ஐந்து மீற்றர் முன்னே இராணுவம் நிற்பதைக் கண்ட கோபி, சைகை காட்டி, நகர்வை நிறுத்தினார்.

அதற்குள் மின் விளக்குகள் உயிர் பெற்றன.

இனி ஒரு கணம் அங்கே நிற்பதும் தற்கொலைக்கு ஒப்பானது. இவர்கள்

விலகத்தொடங்க சிறிலங்கா இராணுவம்

சுடத்தொடங்க, இவர்களும் கைக்குண்டுகளை வீசியபடி சுட்டுச் சுட்டுப் பின்னகர, அந்த வெட்டை வெளிச்சண்டையில் கப்டன் கோபி 2ம் லெப்.மாலதி படையணியின் முதல் மாவீரராகி, இப்போது பத்தாண்டுகள்.ஆகி விட்டது

2ம் லெப்.மாலதியின் பெயரைச் சுமக்கும் படையணி, முதல் மாவீரர் கப்டன் கோபியைப் போலவே முடியாதென்று எதையும் விடாது, எங்கும் எப்போதும் முயன்றபடி.

உண்மை வெற்றி – 01 எதிர் நடவடிக்கையின் ஆரம்ப நாட்களிலேயே கொம்பனிக்குரிய வேவு அணியில் ஒருவராக லெப்.தமிழ்பிரியா பயிற்றுவிக்கப்பட்டார். நிதானமும் அமைதியுமான இயல்பைக்கொண்ட அவருக்கு வேவு மிகவும் பொருத்தமான பணிதான்.

தாக்குதலணிகளின் காப்பரண்களைக் கடந்து முன்புறம் போய் இரவெல்லாம் சிங்களப் படைக்கு மிக அருகேயும், பகலில் சற்றுப் பின்னே வந்து உயரமான மரங்களில் ஏறி நின்று படையினரைக் கண்காணிப்பதுமான கடின வேவுப்பணியில் தமிழ்பிரியா ஈடுபட்டார்.

உருத்திரபுரம் புனித பற்றிமா கல்லூரியில் நிலைகொண்டிருந்த சிங்களப் படையினரை 1996.09.26 அன்று நாம் உட்புகுந்து தாக்கியழித்த நடவடிக்கையில் காயமடைந்த போராளிகளுக்கு வழிகாட்டிப் பின்னே நகர்த்திவிட்டு, மறுபடி முன்னேவந்து காயக்காரர்களைப் பின்னே கூட்டிப்போய் என்று, நடவடிக்கை முடியும் வரை இடைவிடாத நடைதான்.

மாபெரும் படை நகர்வொன்று சிங்களப் படைகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. எப்படி, எப்போது எங்கே என்பது தெரியவில்லை. 2ம் லெப்.மாலதி படையணியின் கொம்பனி ஒன்று உடங்காவில் நிலைகொண்டிருந்தது. பரந்துபட்ட நிலப்பரப்பைக் கண்காணிப்பில் வைத்திருக்கப் போதிய ஆளணியில்லாததால் 2ஆம் லெப் மாலதி படையணியின் வேவு அணிகள் சம்பளங்குளம், ஒதியமலை, உடங்கா, தண்ணீர் முறிப்புப் பகுதிகளில் உலாவிக்கொண்டிருந்தன.

உடங்காப் பகுதியில் இரு தடவைகள் சிறிலங்காப் படையினரின் வேவு அணிகளைச் சந்தித்து, எமது அணிகள் தாக்கியிருந்தன. இந்தா, அந்தா என்றிருந்தது சண்டை தொடங்கும் நாள்.

1997.05.13 அன்று தொடங்கியது “வெற்றி நிச்சயம்” என்று பெயர் சூட்டப்பட்ட, சிங்களத்தின் தோல்வி நடவடிக்கை. உடங்கா வெட்டையில் நின்ற 2ஆம் லெப். மாலதி படையணியின் வேவு அணியையே வெற்றி நிச்சயம் நடவடிக்கைப் படைகள் முதலில் சந்தித்தன.

வெற்றி நிச்சயம் எதிர் நடவடிக்கையின் முதல் மாவீரராக லெப்.தமிழ்பிரியா வரலாற்றில் பொறிக்கப்பட்டார்.

“புளியங்குளச் சந்திப் பகுதியை வேறு படையணிகள் பாதுகாக்கும். சந்திக்கருகே இராணுவம் வந்து நிலைகொண்டு சண்டை பிடிக்குமானால், தளத்தைத் தக்கவைப்பது கடினம். நீண்டகாலம் புளியங்குளச் சந்தியை எமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால் நீங்கள் அவர்களுக்கு வெளிப்புறமாகத் தடுப்பரண்களை அமைத்து நின்று, சண்டையிட்டு எதிரிக்குச் சேதத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். அதை நீங்கள் போய் செய்யுங்கள்”

என்றார் தமிழீழத் தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள். வீரர்களின் வாழ்வில் முடியாது என்று ஒன்று இருக்கின்றதா? புறப்பட்டது 2ஆம் லெப். மாலதி படையணி. நெடுங்கேணியிலிருந்து புளியங்குளத்துக்குக் கால் நடையாகவே வந்து சேர்ந்தது.

தலைவர் சொன்னபடி தளத்துக்கு வெளிப்புறமாகத் தடுப்பரண்களை அமைத்தது. வவுனியா – கிளிநொச்சி நெடுஞ்சாலையின் இருபுறமும் சிறகுகள் வடிவில் விரிந்து நின்று, புளியங்குளத் தளத்துக்குக் காப்பு வழங்கியது. தனக்கு முன்னே படையணியின் வேவு அணியினரை உலாவவிட்டது.

1997.06.23 அன்று அதிகாலை பெருமெடுப்பில் ராங்கிகள் இரைய, குண்டுவீச்சு விமானங்கள் கூவ, எறிகணைகளை மழையாக வீசியபடி முன்னேறி வந்த படையினரோடு முதலில் மோதியது மேஜர் அரசியின் தலைமையிலான ஐந்து வேவுப் போராளிகளே.

பழைய காயங்கள், நோய் காரணமாக களமுனை மருத்துவ வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர்களை முன்னரங்குக்கு நகர்த்தி, முன்னரங்கில் நின்றவர்கள் தம்மைத் தயார்ப்படுத்தும் வரை வேவு அணி சண்டையிட, எல்லோரும் தயாரானதும் அவர்கள் பின்னகர, முன்னரங்கப் போராகளிகள் சண்டையிட்டனர்.

எறிகணைகளால் தூக்கி விசிறப்பட்டு மண்குவியல்களான காப்பரண்களைக் கைகளால் விறாண்டி விட்டுப் படுத்திருந்து அடித்தவர்களும், இயங்கு நிலைத்தடையேற்பட்ட கனரக ஆயுதங்களை சீர் செய்து, சீர் செய்து அடித்தவர்களும், காயங்களைக் கட்டிவிட்டுத் தொடர்ந்து நின்று சண்டையிட்டவர்களும் வெற்றியை எமக்கே உரித்தாக்கியிருந்தனர்.

காலை 5.00 மணியளவிலிருந்து மாலை 5.00 மணியளவு வரை தொடர்ந்த அந்தப் பெருஞ்சண்டையில் படையணி 2ம் லெப்.மாலதியின் பெயரையும் கப்டன் கோபியின் பெயரையும் நிலைநிறுத்தியிருந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலுப்பிய இரு பெரும் சமர்களான இந்திய இராணுவப் போரையும், வெற்றி நிச்சயம் நடவடிக்கையையும் எதிர்கொண்டு, முதல் மாவீரர்களை ஈகம் செய்த நிமிர்வில், இனிவரும் சமர்களையும் வெற்றிகொள்ளும் துணிவில், களமெங்கும் காத்திருக்கின்றது படையணி.

“ஆயிரத்து நூற்று இருபத்தைந்து மாவீரர்களை மண்ணுக்கு ஈர்ந்து பெருமையோடு நிமிர்ந்துகொள்கின்றது படையணி”

புரியவில்லை.மூதூர் படுகொலையின் நினைவு நாள் – 04.08.2006

திருமலை மூதூரில் 17 தன்னார்வ தொண்டு நிறுவனபணியாளர்களின் படுகொலையின் 14ம் ஆண்டு நினைவு நாள் – 04.08.2020

(04.08.2006 அன்று மூதூரில் பிரான்ஸை மையமாக கொண்டு இயங்கும் “”எக்ய்ன்ட் ஹங்கர் -action faim தொண்டு நிறுவன பணியாளர்கள் 4பெண்கள் உட்பட்ட 17 தமிழர்கள் சிங்களப் படையினராலும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களாலும் படுகொலைசெய்யப்பட்ட 14 ம்ஆண்டு நினைவு நாள் .!))

விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு

 முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் மூலம் முல்லைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது.

இத்தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின் மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்தில், புலிகளில் 80 சதவீதம் பேர் அழிந்து விட்டார்கள், இன்னும் 20 சதவீதம் பேரே மிஞ்சியிருக்கிறார்களென்று ஜெனரல் ரத்வத்த (இவர் அதுவரை கேணலாயிருந்து யாழ் கைப்பற்றலோடு திடீரென ஜெனரல் பதவி வரை தாவினவர். பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என்பவற்றுக்குப் போகாமல் நேரடியாக நாலாம் கட்டத்துக்குத் தாவினார். நல்லவேளை பீல்ட் மார்ஷல் பதவி கொடுக்கப்படவில்லை.)

சொன்ன நேரத்தில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல். தமிழ்மக்களே போராட்டத்தின் பால் அவநம்பிக்கை கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என்று வெறுத்துப்போயிருந்த நேரம். ஓயாத அலைகள் ஏறத்தாள இரண்டாயிரம் வரையான துருப்பினரையும் இரு ஆட்லறிகளுட்பட வலுமிக்க படைத்தள பாடங்களையும் கொண்டிருந்த படைத்தளம் தான் முல்லைத்தீவுப் படைத்தளம்.

நேரடியாக மற்றப் பிரதேசங்களோடு தரைவழித்தொடர்பு ஏதும் இல்லாவிட்டாலும் கடல்வழி மற்றும் வான்வழித் தொடர்புகளைச் சீராகப் பேணிவந்த படைத்தளம். முல்லைத்தீவின் ஆழ்கடற்பகுதிக் கரையோரத்தின் குறிப்பிட்டளவைக் கொண்டிருந்த இப்படைத்தளம் சீரான கடல்வழித்தொடர்பைக் கொண்டிருந்தது. ஏதும் அவசரமென்றால் திருகோணமலைத் துறைமுகம் ஒரு மணிநேரக் கடற் பயணத்தூரத்தில் இருந்தது.

இப்படைத்தளம் மீதான தாக்குதல் ஒத்திகைகள் யாவும் பூநகரிப் படைத்தளத்தை அண்மித்த பகுதிகளில் நடத்தப்பட்டன. பூநகரி மீதுதான் தாக்குதல் நடத்தப்படப் போகிறதென்று மக்களிடையேகூட இலேசாகக் கதை பரவியிருந்தது. போராளிகளுக்குக்கூட பூநகரிதான் இலக்கென்ற அனுமானமேயிருந்தது. திடீரென இரவோடிரவாக அணிகள் மாற்றப்ப்பட்டு திட்டம் விளங்கப்படுத்தப்பட்து. மக்களுக்குத் தெரியாமல் அணிகள் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன.

திட்டமிட்டபடி பதினெட்டாம் திகதி அதிகாலை படைத்தளம் மீது பலமுனைகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தி அரைமணிநேரத்தில் கடல்வழி உதவி கிடைக்கும் என்ற அனுமானத்துக்கேற்ப ‘டோறா’ விசைப்படகுகள் திருமலைத் துறைமுகத்திலிருந்து வந்திருந்தன. அவற்றை வழிமறித்துத் தாக்கும் பணியைக் கடற்புலிகளின் படகுகள் பார்த்துக்கொண்டன. எப்பாடுபட்டும் முலலைத்தீவில் தரையிறக்கியே தீருவதென்று சிங்களப்படைகளும் அதை விடுவதில்லையென்ற நோக்கத்துடன் கடற்புலிகளும் நிற்க, கடலிற் கடுமையான சண்டை நடந்தது. தரையிலும் கடும் சண்டை நடந்தது.

கடலில் ரணவிறு என்ற போர்க்கப்பல் கரும்புலிப்படகுகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. 600 துருப்பினரைக் காவிய துருப்பிக்காவிக் கலமொன்றின் மீதான கரும்புலித்தாக்குதல் மயிரிழையில் பிசகியது. அதனால் அக்கலமும் துருப்பினரும் தப்பினர். இதேவேளை வான்வழியில் துருப்பினரைத் தரையிறக்கும் முயற்சியும் நடந்தது. இதில் ஒரு உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது.

3 நாள் கடும் சண்டையின் பின் முல்லைத்தீவுக்கு அப்பாலுள்ள அளம்பில் என்ற கிராமத்தில் வான்வழியாயும் கடல்வழியாயும் ஆயிரத்துக்குமதிகமான துருப்பினர் தரையிறக்கப்பட்டனர். அவர்களின் முல்லைத்தீவை நோக்கிய நகர்வை மூர்க்கமாக எதிர்கொண்டனர் புலிகள். வெட்ட வெளியில் கடும் சண்டை நடந்தது. வான் படையும் கடற்படையும் தம் வலு முழுவதையும் பாவித்தது. மறிப்புச் சமர் அளம்பிலில் நடந்துகொண்டிருக்க, முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டுவிட்டது. இரு ஆட்லறிகளும் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இப்போது புலிகளின் முழுக்கவனமும் தரையிறங்கிய படையினரை எதிர்கொள்வதில் திரும்பியது. கடின எதிர்த்தாக்குதலைத் தாங்க முடியாமலும், காப்பாற்ற வந்த படைமுகாம் முற்றாக வீழ்ந்துவிட்டதாலும் தரையிறங்கிய படையணி ஓட்டமெடுக்கத் தொடங்கியது.

எங்கே ஓடுவது?

திரும்பவும் கடல்வழியால் தான் ஓட வேண்டும். மீண்டும் துருப்புக்காவியொன்று கரைக்கு வந்தது. தங்களது ஆயுதங்களைக்கூட போட்டுவிட்டு அத்துருப்புக்காவில் ஏறி ஓடினர் படையினர். எஞ்சிய படையினர் முழுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போகக்கூட அவர்களுக்கு அவகாசமில்லாமல் ஓடினர் படையினர்.

தப்பிய சிலர் காடுகளில் திரிந்து ஒருவாறு கொக்குத்தொடுவாப் படைமுகாமுக்குச் சென்று சேர்ந்தனர். அவர்கள் மூலம் தான் சிங்களத்தின் பல பொய்கள் முறியடிக்கப்பட்டன. ரத்வத்தை சொல்லியிருந்தார்: இரு ஆட்லறிகளும் இராணுவத்தால் தகர்க்கப்பட்டிருந்ததாக. ஆனால் தப்பிப்போனவர்கள், புலிகள் ஆட்லறிகளை முழுதாக இழுத்துச் செல்வதை தாம் நேரே பார்த்ததாகச் சொன்னார்கள். மேலும் இறந்த படையினரின் தொகை பற்றியும் சொன்னார்கள்.

அத்தாக்குதலில் 1300 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தார்கள். 800 வரையான சடலங்களைப் புலிகள் கையளித்தபோதும் சிங்கள அரசு அவற்றைக் கையேற்கவில்லை. ஏராளமான சடலங்கள் தொகுதி தொகுதியாக எரிக்கப்பட்டன. இப்போதும் அந்த இடங்களை வன்னிக்குச் செல்பவர்கள் காணலாம். இன்றுவரை காணாமற்போனோர் பட்டியலில் சிங்கள அரசு அறிவித்திருக்கும் படையினரிற் பலர் இப்படி எரியுட்டப்பட்டவர்கள் தாம். (பின் ஓயாத அலைகள் இரண்டு, மூன்று என்று பின்வந்த தாக்குதல்களிலும் பல சடலங்கள் இப்படி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்டன.)

இத்தாக்குதல் போராட்டத்தின் மறுக்க முடியாத பாய்ச்சல். முதன்முதல் இரு ஆட்லறிப் பீரங்கிகளைத் தமிழர் படைக்குப் பெற்றுத் தந்தது. அதன் படிப்படியான வளர்ச்சிதான் இன்று ஆட்லறிச்சூட்டில் எதிரி வியக்கும் வண்ணம் இருக்கிறது. வன்னியில் துருத்திக்கொண்டிருந்த ஒரு படைத்தளம் அழிக்கப்பட்டு மிக முக்கிய நகரமான முல்லைத்தீவு மீட்கப்பட்டது. அதன் பின்தான் கடற்புலிகளின் அபார வளர்ச்சி தொடங்கியது. போராட்டத்துக்கான சீரான வழங்கலும் தொடங்கியது. நவீனத் தொழிநுட்பங்களும் ஆயுதங்களும் அதன்பிறகுதான் இயக்கத்துக்கு சீராக கிடைக்கத்தொடங்கின. எந்தச் சமரையும் முறியடிக்கும் வல்லமையும், எந்தப் படைமுகாமையும் தாக்கிக் கைப்பற்றும் திறனும் அதன்பிறகுதான் மெருகேறியது. ஜெயசிக்குறு வெற்றியிலிருந்து, ஆனையிறவுக் கைப்பற்றல் வரை எல்லாமே முல்லைத்தீவுக்குள்ளால் கிடைத்தவைதாம். போர்க்காலத்தின் இராஜதந்திரப் பயணங்களும் முல்லைத்தீவுக்குள்ளால் தான். பாலசிங்கத்தின் வெளியேற்றமும் அதற்குள்ளால் தான்.

இன்று “கிளிநொச்சி” போராட்டத்தின் மையமாகப் பார்க்கப்படுகிறது. அது வெறும் சந்திப்புக்களின் மையமேயொழிய போராட்டத்தின் மையமன்று. பொதுவாகவே வன்னி என்ற பதத்தால் அழைத்தாலும் குறிப்பிட்டுச் சொன்னால் அது முலலைத்தீவுதான்.

முல்லைத்தீவுப் பட்டினம் கடந்த பத்துவருடகாலத்துள் இரு தடவை பிணங்களால் நிறைந்தது. முதலாவது சந்தர்ப்பம் ‘ஓயாத அலைகள்” தாக்குதலின்போது. மற்றையது கடந்த வருட சுனாமி அனர்த்தத்தின்போது.

இதே முல்லைத்தீவில் ஆங்கிலேயப் படைமுகாமைத் தாக்கியழித்ததோடு அங்கிருந்த பீரங்கிகளையும் கைப்பற்றிய வரலாறு பண்டாரவன்னியனுக்குண்டு. அதன் தொடர்ச்சி ஓயாத அலைகள். முல்லைத்தீவு வீழ்த்தப்படக்கூடாத நகரம். அதன் இருப்புத்தான் தமிழர் படையின் இருப்பும். மற்ற எந்த நகரமும் பறிபோகலாம். ஆனால் முல்லைத்தீவு பறிபோகக்கூடாத நகரம்.

ஓயாத அலைகள் என்ற பெயரில் தொடர் நடவடிக்கைகள் நடந்தன. புலிகள் ஒரே பெயரில் தொடர் நடவடிக்கைகள் செய்தது ஓயாத அலைகள் என்ற பெயரை வைத்துத்தான். இறுதியாக யாழ் நகரைக் கைப்பற்றும் சமராக ‘ஓயாத அலைகள்-4’ அமைந்தது.

முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆட்லறியொன்றைப் புதுக்குடியிருப்பு நோக்கி இழுத்து வந்தனர் புலிகள். இடையில் இழுத்து வந்த வாகனம் பழுதோ என்னவோ, மந்துக் காட்டுப்பகுதியில் ஆட்லறி நிற்பதைக் கண்டுவிட்டனர் சிலர். அதிகாலை நேரம். ஓரிருவர் எனக் கூடியகூட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆட்லறியைக் கட்டிப்பிடித்துக் கூத்தாடியபடி சிலர், பார்த்ததை மற்றவர்களுக்குச் சொல்லவென சைக்கிளிற் பறக்கும் சிலர், ஆட்லறிச் சில்லைக் கட்டிப்பிடித்தபடி ஒப்பாரி வைக்கும் ஓரிருவர் என்று அந்த இடம் களைகட்டத்தொடங்குகிறது. அங்கு நின்ற ஓரிரு போராளிகளாற் கட்டுப்படுத்த முடியவில்லை, கட்டுப்படுத்தவுமில்லை. (நிலத்தில் பிரதட்டை கூட அடித்தனர் சிலர்).

கைப்பற்றப்பட்ட ஆட்லறியுடன் போராளிகள்

கொஞ்ச நேரத்தில் மாலைகளுடன் வந்த சிலர் ஆட்லறிக்குழலுக்கு மாலைசூட்டினதோடு ஆட்டம் போட்டனர். அதன்பிறகுதான் தாம் தமிழர் என்று உறைத்திருக்குமோ என்னவோ, இரு சைக்கிள்களில் தேங்காய் மூட்டைகள் வந்தன. ஆட்லறியின்முன் தேங்காய் உடைக்கத்தொடங்கியதோடு அங்கு ஒரு திருவிழா ஆரம்பமாகத் தொடங்கியது. (அதற்குள்ளும் தேங்காய் உடைப்பதில் அடிபிடி) இன்னும் மாலைகளோடு சிலர் வந்துகொண்டிருந்தார்கள். ஐயர் சகிதம் பூசை தொடங்கமுதல் வேறொரு பவள் வாகனத்தைக் கொண்டுவந்து ஆட்லறியை இழுத்துக்கொண்டு மறைந்துவிட்டார்கள்.

“தாக்குதல்”

1996 ஜூலை 17ம் நாள் இரவு முடிந்து 18ம் நாள் அதிகாலை இப்படைத்தளம் மீதான தாக்குதலை பலமுனைகளில் இருந்து விடுதலைப்புலிகள் தொடுத்தனர். தரைவழியாக ஏனைய படைமுகாம்களோடு தொடர்பற்ற இத்தளத்திலிருந்து படையினரால் உதவிகள் பெற முடியவில்லை. மூன்றுநாட்களுக்குள் படைமுகாம் முற்றாக புலிகளிடம் வீழ்ச்சியுற்றது. அங்கிருந்த ஆயுத தளபாடங்கள் அனைத்தையும் புலிகள் கைப்பற்றினர். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஆட்லறிப் பீரங்கிகள் புலிகளின் கைகளுக்கு வந்ததும் இச்சமரில்தான். முல்லைத்தீவுப் படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த 122மிமீ ஆட்லறிப் பீரங்கிகள் இரண்டும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

“தரையிறக்கமும் எதிர்ப்புச்சமரும்”

முல்லைத்தீவுப் படைத்தளம் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானபோது படையினரையும் தளத்தையும் காப்பாற்றவென சிறிலங்கா அரசபடையால் தரையிறக்கம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்குள்ளான தளத்திலிருந்து தெற்குப் பக்கமாக மூன்று மைல்கள் தொலைவில் அளம்பில் என்ற கிராமத்தில் கடல்வழியாக மிகப்பெரிய தரையிறக்கமொன்றை இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து மேற்கொண்டன. இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து நடத்திய இத்தரையிறக்கத்துக்கு ”திரிவிட பகர” என்று அரசபடையால் பெயர் சூட்டப்பட்டது.

தரையிறக்கப்பட்ட படையினரை எதிர்த்து புலிகளின் அணிகள் சமர் புரிந்தன. சிலநாட்களாக, தரையிறங்கிய படையிரை முன்னேறவிடாது மறித்துவைத்திருந்த புலிகள், இறுதியில் முற்றாக அச்சமரை வென்றனர். அரசபடை, தரையிறங்கியவர்களில் மிகுதிப்படையினரை மீளப்பெற்றுக்கொண்டதோடு ‘ஓயாத அலைகள் – ஒன்று’ நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

தரையிறக்கத்தின் போது கடலில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமி்டையில் நடைபெற்ற சமரில் ‘ரணவிறு’ என்ற தாக்குதல் கலமொன்று கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. இக்கலத்தை மூழ்கடித்த தாக்குதலில்

மேஜர் கண்ணபிரான்

மேஜர் செல்லப்பிள்ள

மேஜர் பார்த்தீபன்

மேஜர் மிதுபாலன்

மேஜர் பதுமன்

மேஜர் சுடரொளி

கப்டன் சயந்தன்

ஆகியோருட்பட ஏழு கடற்கரும்புலிகள் வீரசாவடைந்தனர்.

இப்படை முகாம் கைப்பற்றப்பட்டதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டுள் கொண்டுவந்தனர்.

“இழப்பு விவரங்களும் ஊடகத் தணிக்கையும்”

இத்தாக்குதலில் 1200 இற்கும் அதிகமான இராணுவத்தினர் பலியானதாக புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவித்தன.

ஆனால் அரசதரப்பு அதை மறுத்ததோடு மிகக் குறைந்தளவு படையினரே கொல்லப்பட்டதாகச் சொன்னது. அத்தோடு ஆட்லறிகள் எவையும் புலிகளால் கைப்பற்றப்படவில்லையென அப்போதையை பிரதிப் பாதுகாப்பமைச்சரும், யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதால் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டவருமான ஜெனரல் அனுருத்த ரத்வத்த தெரிவித்திருந்தார்.

புலிகள் பலநூறு சடலங்களை அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக அரசதரப்புக்குக் கையளித்தபோதும் அரசு அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக சிலவற்றை மட்டும் பெற்றுக்கொண்டு, ஏனையவை தமது இராணுவத்தினருடையவையல்ல என்று மறுப்புத் தெரிவித்தது.

பலநூறு சடலங்களை வன்னியில் பொதுமக்களும் புலிகளும் சேர்ந்து தீமூட்டினர். கொக்காவில் என்னுமிடத்தில் 600 வரையான படையினரின் சடலங்கள் ஒன்றாக தீமூட்டப்பட்டன.

”முல்லைத்தீவை மீட்க “ஓயாத அலைகள்” படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 400 வரையான மாவீரர்களுக்கு எமது வீரவணக்கம் “

“ஓயாத அலைகள் – 01 முல்லை வெற்றிச் சமர்”

யாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசு மேற்கொண்ட பரப்புரை, 18.07.1996 அன்று அதிகாலை வேளையில் முல்லைப் படைத்தளத்தின் தடையமைப்பினுள் வெடித்த டோப்பிட்டோவின் வெடியோசையோடு முடிவுக்கு வந்தது.

“ஓயாத அலைகள்” என்று பெயரிடப்பட்டு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், இதன் பெயரிற்கேற்ப பிற்பட்ட காலத்தில் “ஓயாத அலைகள்” என்ற பெயரில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வெற்றிகர வலிந்த தாக்குதல்களிற்கான முதற்படியாக அமைந்து “ஓயாத அலைகள் – 01” எனக் குறித்துக் காட்டவேண்டிய தாக்குதலுமானது.

முதற்றரப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டதும் முழுமையான கடல்வழி ஆதரவைக் கொண்டதும் தன்னகத்தே பலமான மோட்டார், ஆட்டிலறிச் சூட்டாதரவைக் கொண்டதுமான முல்லைப் படைத்தளம் விடுதலைப் புலிகளின் 30 மணிநேரத் தாக்குதலின் பின் அவர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இத்தாக்குதல் விடுதலைப் புலிகளின் மற்றுமொரு வளர்ச்சியைக் காட்டும் தாக்குதலாகவும் அமைந்தது.

சிங்களக் கடற்படையின் கடல்வழி ஆதரவைத் தடுக்கும் வலிமையை விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பெற்றுவிட்டார்கள் என்ற செய்தியை வெளிக்காட்டும் வகையில் முல்லைத்தளத்தினுள் கடல் வழித் தரையிறக்கம் மேற்கொள்ளப்படா வண்ணம் தடுத்த கடற்புலிகள் முல்லைத் தளத்திற்கு தெற்கே மூன்று கிலோமீற்றர் தொலைவில் அளம்பில் பகுதியில் வான்வழியால் தரையிறக்கப்பட்ட படைகள் கடல்வழியால் வலுவூட்டப்படுவதையும் தடுத்து நின்றனர்.

இவ்வாறு சிங்களக் கடற்படைக்குச் சவால்விடும் வகையில் கடலில் புலிகள் பலம் பெற்றமையையும் இத்தாக்குதலால் உலகம் கண்டுகொண்டது.

“முல்லைப் படைத்தளம்”

வன்னிப்பிரதேசத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் கடற்கரைப் பட்டினமான முல்லைத்தீவுப் பட்டினத்தை வன்கவர்ந்து அதில் அமைக்கப்பட்டிருந்ததுதான் முல்லைப் படைத்தளம். ஆரம்பத்தில் கடல்வழிக் கடத்தலைத் தடுப்பதற்காக முல்லைப்பட்டினத்தின் ஒதுக்குப்புறமாக சிறு கூடாரமொன்றில் பத்திற்கும் குறைவான சிங்களப் படையினர் தங்கியிருந்தனர்.

காலப்போக்கில் அத்தங்ககம் விரிவாக்கப்பட்டு வந்தது. 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அத்தங்ககத்தைத் தமது முற்றுகையின்கீழ் கொண்டு வந்ததையடுத்து “கடற்காற்று” – “Operation SEA BREEZE” – எனும் படை நடவடிக்கை மூலம் தமது படையினரை முற்றுகையில் இருந்து மீட்ட சிங்களப் படைகள் அங்கு பலமான படைத்தளத்தை அமைத்துக் கொண்டன.

அத்துடன் 1992 ஆம் ஆண்டு சத்பல – “Operation SATHBALA” – என்ற பெயரில்; மணலாற்றை நோக்கிய படை நகர்வை மேற்கொண்டு அளம்பில் வரையான பிரதேசத்தை வன்கவர்ந்த சிங்களப் படைகள் அதற்கு அப்பால் நகர முடியாது திணறியதுடன், முன்னகர்ந்த படைகளும் சிறிது காலத்தில் முல்லைத் தளத்திற்கே பின்னகர்ந்தன. இவ்வாறு தொடர்ந்து விரிவாக்கப்பட்டு வந்த முல்லைப் படைத்தளம் ”ஓயாத அலைகள் – 01” தாக்குதல் நடைபெற்றபோது ஒரு கூட்டுப்படைத்தளமாக விளங்கியது.

“ஓயாத அலைகள் – 01” தாக்குதல் நடைபெற்றபோது 25 ஆவது பிரிகேட் கூட்டுப்படைத்தளமாக விளங்கிய முல்லைப் படைத்தளம் 1407 படையினரைக் கொண்டிருந்தது. வெளிச்சுற்று, உட்சுற்று என இரு காப்புநிலை வரிசைகளைக் கொண்டிருந்த இத்தளம் 2900 மீ. நீளமும் 1500 மீ. அகலமும் கொண்டிருந்தது. இதன் வெளிச்சுற்றுக் காப்பு வரிசை 8500 மீற்றர் சுற்றளவைக் கொண்டதாக இருந்தது.

முல்லைப்பட்டினத்தை மையமாகக் கொண்டு படைத்தளத்தின் உட்சுற்றுக் காப்பு வரிசை அமைக்கப்பட்டு அதனுள் ஆட்டிலறி, மோட்டார் ஏவுதளம், பிரிகேட் தலைமையகம், பட்டாலியன் தலைமையகங்கள், தொலைத்தொடர்புக் கோபுரம், உலங்கூர்தி இறங்குதளம் போன்ற தளத்தின் முதன்மை அமைப்புக்கள் காணப்பட்டன.

வெளிச்சுற்றுக் காப்பு வரிசையானது கிழக்கில் இந்து சமுத்திரத்தையும் தெற்கில் இறால் குளம் மற்றும் பரந்த வெளிகளையும் மேற்கில் நந்திக் கடல் நீரேரியையும் வடக்கில் வெட்டு வாய்க்கால் தொடுவாயையும் எல்லைகளாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்தத் தரையமைப்பானது காப்பு வரிசையமைப்பிற்கு மிகவும் சாதகமானதாக விளங்கியது.

இந்தக் காப்பு வரிசையிலே உயர்ந்த மண்ணணை அமைக்கப்பட்டு அதிலே அண்ணளவாக 40 மீற்றரிற்கு ஒரு காப்பரண், தேவைப்படும் இடங்களில் உயரமாக அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கோபுரங்கள் என இடையறாத கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், தளத்தின் உட்புறத்தை கண்காணிக்க முடியாதவாறு மண்ணணையின் மேல் மறைப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இந்த மண்ணணையின் வெளிப்புறத்தே பல நிரைகளில் அமைக்கப்பட்டிருந்த தடையமைப்புகள், கண்ணி வயல்கள், இரவுக் கண்காணிப்பு ஏற்பாடாக ஒலி அவதானிப்பு நிலைகள் என உயர்காப்பு ஏற்பாடுகளை இத்தளம் கொண்டிருந்தது.

“வேவு”

இத்தளம் விடுதலைப் புலிகளின் பொதுவான வேவு நடவடிக்கைக்கு உட்பட்டு இருந்தது ஆயினும் விடுதலைப் புலிகளின் இயங்குதளம் வன்னிக்கு நகர்ந்தபின் தேசியத் தலைவர் அவர்கள் இத்தளத்தைத் தாக்குவதற்கான சிறப்பு வேவு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பணித்தமைக்கு இணங்கச் சிறப்புத் தளபதி ஒருவரின் ஒருங்கிணைப்பின்கீழ் முன்னர் பொதுவான வேவில் ஈடுபட்ட போராளிகளையும் இணைத்துக் கொண்டு முனைப்பான வேவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. கடல் வழியாலும் தரைவழியாலும் மிகவும் விரிவான வேவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மிகுந்த இடர்களின் மத்தியில் வேவு வீரர்கள் இரவைப் பகலாக்கி முல்லைப் படைத்தளத்தின் அமைப்பை அறிந்தார்கள்.

“தாக்குதல் திட்டம்”

ஓயாத அலைகள் – 01 தாக்குதல் திட்டமானது அனைத்துச் செயற்பாடுகளும் நடைமுறையில் ஒத்திகை பார்க்கப்பட்டு மிகவும் துல்லியமாகத் தீட்டப்பட்டது. எடுத்துக்காட்டாக எதிரித்தளத்தின் வெளிச்சுற்றுக் காப்பு வரிசையின் கொலை வலயத்தினுள் அணிகள் நகர்த்தப்பட்டே நகர்விற்கான நேரங்கள் பெறப்பட்டு நேரத்திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது.

“தாக்குதல் திட்டமானது பின்வரும் படிமுறைகளைக் கொண்டிருந்தது”

எதிரியின் வெளிச்சுற்றுக் காப்புவரிசையில் ஊடுருவல் பாதைகளை உருவாக்குதல்.

அப்பாதையினூடாக ஊடுருவும் அணிகள் வெளிச்சுற்றுக் காப்பு வரிசையிலுள்ள காப்பரண்களைக் கைப்பற்றுதல்.

ஊடுருவல் பாதைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட காப்பு வரிசையிலுள்ள சாதகமான பாதைகளால் உள்நுழையும் அணிகள் பிரதேசத் தேடியழிப்பை மேற்கொண்டு வெளிச்சுற்றுக்காப்பு வரிசைக்கும் தளத்தின் மையப் பகுதிக்கும் இடையேயான பிரதேசத்தைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருதல்.

தாக்குதல் ஆரம்பித்த உடனேயே தளத்தின் மையப்பகுதி நோக்கி நகரும் அணிகள் தளத்தின் மையப்பகுதியைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருதல்.

கடலூடாகவும் கடற்கரையில் அதற்குச் சமாந்தரமாகவும் ஊடுருவும் அணிகள் கடற்கரையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து தளத்திற்கான கடல்வழி ஆதரவைத் துண்டித்தல்.

“இதனைத் தவிரப் பின்வரும் பணிகளும் திட்டமிடப்பட்டன”

தளத்திற்கு மணலாற்றுப் பிரதேசத்தி லிருந்து தரைவழி ஆதரவு வழங்கப்படுதலைத் தடுத்தல்.

தளத்திலிருந்து மணலாற்றுப் பிரதேசத்தை நோக்கிப் படையினர் பின்னகர் வதைத் தடுத்தல்.

தளத்தை அண்டிய பிரதேசங்களில் தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டுத் தளம் வலுவட்டப்படுவதைத் தடுத்தல்.

ஒட்டுமொத்தத்தில் முழுமையான வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக

துல்லியமானதும் விரிவானதுமான வேவு நடவடிக்கை.

விரிவானதும் நுணுக்கமானதுமான தாக்குதல் திட்டம்.

துணிவுமிக்கதும் புதுமையானதுமான அரை மரபுவழி (Semi-conventional) தாக்குதல் உத்திகள்.

விரிவான பின்னணி ஏற்பாடுகள்

துல்லியமான தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட விரிவான தொடர் ஒத்திகைப் பயிற்சிகள்.

இரகசியக் காப்பு.

ஏமாற்று நடவடிக்கைகள்.

எதிரி எதிர்பார்க்காத வகையிலான மறைமுகச் சூட்டுப் படைக்கலங்களின் வினைத் திறனான பயன்பாடு.

போதியளவான ஆளணி, படைக்கல ஒதுக்கீடு.

என்பவற்றுடன் ஓயாத அலைகள் – 01 தாக்குதல் திட்டமிடப்பட்டது.

“தாக்குதல்”

திட்டத்திற்கமைய தமது குறியிலக்குப் பிரதேசங்களினுள் ஊடுருவிய தாக்குதல் அணிகள் 18 ஆம் நாளன்று காலையில் தளத்தின் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தன. குறிப்பாகக் கடற்கரை முழுமையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது. படையினர் 6 ஆவது விஜயபாகு படையணியின் தலைமையகம் அமைந்திருந்த பகுதிக்குள் முடக்கப்பட்டனர். இவ்வாறு முடக்கப்பட்ட படையினர் தமக்கு அண்மையிலுள்ள கடற்கரையைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான தாக்குதல்களை மேற்கொண்ட போதும் அவை அனைத்தும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன.

“கடற்புலிகளின் பெரும் எதிர்ச்சமர்”

இதேசமயம் சிறிலங்காக் கடற்படை தனது உச்சத்திறனைப் பயன்படுத்தி முல்லைப் படைத்தளத்தின் கடற்கரையைச் சென்றடைய மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் கடற்புலிகளால் முறியடிக்கப்பட்டன. 15 மணித்தியாலங்களாகச் சிங்களக் கடற்படையின் உச்சப் பலத்தையும் சிங்கள வான்படையின் வான்கலங்களையும் எதிர்கொண்ட வண்ணம் கடற்புலிகள் வீரத்துடன் எதிர்ச்சமர் புரிந்தனர்.

“வலுவூட்டலிற்கான தரையிறக்கம்”

முல்லைத் தளத்தின் கடற்கரையில் ஒரு கடல்வழித் தரையிறக்கம் சாத்தியமற்றுப் போகவே முல்லைத் தளத்திற்குத் தெற்கே 3 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சிலாவத்தைப் பிரதேசத்தில் 18 ஆம் நாளன்று மாலையில் ஒரு வான்வழித் தரையிறக்கத்தைச் சிங்களப் படைகள் மேற்கொண்டன. திரிவிட பகர – என்று பெயர் சூட்டி மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் கிபிர் மற்றும் புக்காரா குண்டுவீச்சு வானூர்திகள், MI-24 தாக்குதல் உலங்கூர்திகளின் தாக்குதல் ஆதரவுடன் முதற்கட்டமாக MI-17 உலங்கூர்திகளில் கொண்டுவரப்பட்ட கொமாண்டோக்கள் தரையிறக்கப்பட்டனர்.

இவ்வாறு தரையிறக்கப்பட்ட கொமாண்டோக்களைக் கொண்டு பாதுகாப்பான தரையிறக்க வலயம் ஒன்றை உருவாக்கியபின் கடல்வழித் தரையிறக்கத்தை மேற்கொள்வதே படையினர் நோக்கமாக இருந்தது. 18 ஆம் நாளன்று அவர்களின் அந்த நோக்கம் ஈடேறக் கடற்புலிகள் அனுமதிக்கவில்லை. அத்துடன் இவ்வாறான தரையிறக்கம் ஒன்றை எதிர்பார்த்திருந்த விடுதலைப் புலிகளின் படையணிகள் தரையிறங்கிய கொமாண்டோக்களை 18 ஆம் நாள் இரவே வளைத்துக்கொண்டன.

“தளம் முழுமையான கட்டுப்பாட்டில் வந்தது”

இதேசமயம் 18 ஆம் நாள் மாலையில் முல்லைத் தளத்தினுள் முடங்கிப் போயிருந்த படையினர் மீது செறிவான நேரடி வன்கலச் சூட்டாதரவுடன் நெருங்கித் தாக்கிய விடுதலைப் புலிகளால் படையினர் அனைவரும் அழிக்கப்பட்டு அன்றிரவே படைத்தளம் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

“ரணவிரு மூழ்கடிக்கப்பட்டது”

19 ஆம் நாளன்று சிலாவத்தையில் தரையிறங்கிய படையினர் கடல்வழியால் வலுவட்டப் படுவதற்குக் கடற்புலிகள் அனுமதிக்கவில்லை. அன்று மாலை 4.30 மணியளவில் தரையிறக்க முயற்சியில் ஈடுபட்டிருந்த சங்காய் 3 வகைப் பீரங்கிப் படகான ரணவிரு கடற்கரும்புலிகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. அன்றும் சிங்களப் படைகளிற்கு வான்வழித் தரையிறக்கமே சாத்தியமானது. அதேசமயம் தரையிறங்கிய படையினர் மீதான விடுதலைப் புலிகளின் நெருங்கித் தாக்குதல்களும் எறிகணைத் தாக்குதல்களும் ஆரம்பமாகின.

“MI-24 சேதமாக்கப்பட்டது”

20 ஆம் நாளன்றும் கடல்வழித் தரையிறக்கம் சாத்தியமற்றுப்போக சிங்களப் படைகளின் ஒரேயொரு நம்பிக்கையாக இருந்த வான்வழித் தரையிறக்கத்திற்கும் ஆபத்து ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் எறிகணை வடிவில் வந்த அந்த ஆபத்து தரையிறக்க வந்த ஒரு MI-17 உலங்கூர்தியைச் சேதமாக்க அன்று வான்வழித் தரையிறக்கமும் சாத்தியமற்றுப் போனது.

“புலிகளின் இறுக்கமான முற்றுகைக்குள் தரையிறக்கப்படைகள்”

21 ஆம் நாளன்று பலத்த முயற்சியின் பின் ஒரு கடல்வழித் தரையிறக்கத்தைச் சிங்களக் கடற்படை மேற்கொண்டது. இவ்வாறு படையினர் தரையிறக்கப்பட்டு வலுவூட்டல் மேற்கொள்ளப்பட்டபோதும் அந்தப் படையினரால் புலிகளின் முற்றுகையை உடைத்துக்கொண்டு நகரமுடியவில்லை.

“தரையிறக்க முயற்சிகள் பயனற்றுப் போயின”

22 ஆம் நாளன்றும் தரையிறக்க முயற்சிகள் சாத்தியமாகவில்லையாயினும் சிங்களப் படைகள் தமது தரையிறக்க முயற்சிகளைத் தொடர்ந்தன. 23 ஆம் நாளன்று தரையிறக்க முயற்சியில் ஈடுபட்டிருந்த தரையிறங்கு கலமொன்று புலிகளின் எறிகணையில் சேதமடைந்தது. அத்துடன் கடற்கரும்புலிகளின் படகொன்று நெருங்கிச் சென்று மோத முன்னர் வெடித்ததால் மற்றொரு தரையிறங்கு கலம் சேதங்களுடன் தப்பித்துக் கொண்டது. இதனால் அன்றும் தரையிறக்கம் சாத்தியமாகவில்லை.

“மீட்கவந்த படைகள் பெரும் அவலத்தின் மத்தியில் மீட்டெடுக்கப்பட்டன”

25 ஆம் நாளன்று கடல்வழித் தரையிறக்கம் சாத்தியமான போதும் புலிகளின் இறுக்கமான முற்றுகையை உடைத்துத் தரையிறங்கிய படைகளால் ஒரு அங்குலமேனும் முன்னகர முடியவில்லை. அத்துடன் புலிகளின் எறிகணைத் தாக்குதலால் தரையிறங்கிய படைகள் இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தன.

இந்நிலையில் 26 ஆம் நாளன்று தரையிறங்கிய படைகளை மீட்டுச் செல்லவந்த தரையிறங்கு கலம் புலிகளின் எறிகணைத் தாக்குதலால் சேதங்களுடன் மயிரிழையில் தப்பித்துக் கொண்டது. இந்நிலையில் தரையிறங்கு கலம் மூலம் மிகுந்த இடர்களின் மத்தியில் தரையிறங்கிய படைகள் மீட்கப்பட்டன.

தரையிறங்கிய படைகளைக் களமுனையில் வழிநடாத்திய லெப்.கேணல். பஸ்லி லாபிர் இந்நடவடிக்கையில் கொல்லப்பட்டார். கேணல் லோரன்ஸ் பெர்னாண்டோ காயமடைந்தார். தரையிறங்கிய படையினரில் 75 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் மீட்பின்போது தப்பித்து ஓடிய படையினர் கடலில் எறிந்த 100 இற்கும் அதிகமான சுடுகலங்கள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.

“1200 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர்”

தரையிறக்கப்பட்ட படைகள் உட்பட 1,200 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். இரண்டு 122 மி.மீ ஆட்டிலறிப் பீரங்கிகள் உட்பட பெருந்தொகையான படைக்கலங்கள், அவற்றிற்கான வெடிபொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டன. இவை அனைத்திற்கும் மேலாகத் தமிழர் தம் பாரம்பரியப் பட்டினமாம் முல்லைப்பட்டினம் மீட்டெடுக்கப்பட்டது.

இந்த வெற்றிக்காக ஏழு கடற்கரும்புலிகள் உட்பட 314 மாவீரர்கள் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்து மாவீர்களானார்கள்.

 “அலைகள் ஓயாது”

ஓயாத அலைகள் – 01 நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டமையானது புலிகளின் புதிய பரிணாமத்தைப் பறைசாற்றியது. இந்த வெற்றியினால் புலிகளிற்குச் சாதகமான பல விளைவுகள் ஏற்பட்டன. யாழ். குடாவைச் சிங்களப் படைகள் வன்கவர்ந்தபோது வன்னிக்கு இடம்பெயர்ந்து அல்லற்பட்டு சோர்வுற்றிருந்த மக்கள் இந்த வெற்றியினால் புத்துணர்ச்சி பெற்றனர்.

புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்ற மாயை தகர்த்தெறியப்பட்டது. இவ்வாறு ஆரம்பித்த ஓயாத அலைகள் பின்னர் 02, 03 என ஓங்கியடித்துத் தமிழர்களினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் பலத்தைப் பகைவனிற்கும்

 14/12/2006 பாலசிங்கம் லண்டனில் வீரச்சாவு

எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.

-வே. பிரபாகரன்

தாயகத்தின் சுதந்திர போராட்ட வாழ்வில் காத்திரமான ஒரு பங்களிப்பை தனது அரசியல் ஆளுமையால் வழங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் மற்றும் தலைமை பேச்சாளர் போன்ற வகிபாவங்களினூடாக தமிழர் போராட்டத்தின் நியாயங்களை சர்வதேச பரப்பில் எடுத்துச்சொன்ன ஒருவராக தாயக போராட்ட வரலாற்றில் அன்ரன் பாலசிங்கம் முதன்மை பெறுகிறார் .

மட்டக்களப்பில் பிறந்த இவர் பிரித்தானிய பிரஜாவுரிமை கொண்ட ஈழத்தமிழரவார்.

ஆரம்ப காலத்தில் இலங்கையின் தமிழ் நாளிதழ் ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றிய பாலசிங்கம் பின்னர் கொழும்பின் பிரித்தானிய தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார்.

தேசத்தின் குரல்

பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள் கடமையாற்றியதனால் பிரித்தானிய குடியுரிமை பெற்றுக்கொண்டார்.

1970களில் பாலசிங்கம் அவர்கள் இங்கிலாந்தில் இருந்து எழுதிய கொரில்லாப் போர் முறை குறித்த நூலை வாசித்த தமிழீழ தேசியத் தலைவர், பாலசிங்கம் அவர்களுடன் தொடர்பு கொண்டதன் மூலம் இவருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்குமான தொடர்புகள் ஆரம்பமாகியது.

1985, திம்பு பேச்சுவார்த்தையில் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு ஆலோசகராக செயலாற்றிய இவர், காலப்போக்கில் விடுதலைப் புலிகளின் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் விளங்கினார்.

லண்டனில் மறைவு

தொடர்ச்சியாக வைத்திய பராமரிப்பில் இருந்துவந்த அன்ரன் பாலசிங்கம் 2006 ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் தனது 68ஆவது வயதில் லண்டனில் காலமானார்.

மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு “தேசத்தின் குரல்” எனும் கௌரவத்தை தமிழீழ தேசியத் தலைவர் வழங்கியிருந்தார்.

தாயக சுதந்திர போராட்ட வாழ்வில் காத்திரமான பங்களிப்பை வழங்கிய தேசத்தின் குரலின் 16ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.  [7]ச்சாவு பாலசிங்கம் முதலில் மார்க்சிய வாதியாக இருந்தவர். பின்னர் அதில் இருந்து தன்னை விலக்கி, ஈழத் தமிழ்த் தேசியத்தை வரையறை செய்பவர்களில் ஒருவரானார். தமிழீழ விடுதலைப் புலிகளில் கற்றறிவு, அனுபவ அறிவு, ஆங்கில மொழி அறிவு, மிதவாதத் தன்மை[5], வெளிஉலக பார்வைத் தொடர்பு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றைக் கொண்ட ஒரு மிக முக்கிய தலைவராக விளங்கினார். முற்போக்கான, மேற்குலகைப் புரிந்த ஆளுமையாக பிபிசி ஆய்வாளர்கள் இவரின் முக்கியத்துவத்தை பற்றிய ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளனர் [6]. இறுதி வரைக்கும் ஆயுதங்களை பயன்படுத்தாத தமிழீழப் போராளியாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் இருந்து செயலாற்றியதும் இவரின் மிதவாத போக்குக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு ஆகும்.

இலங்கையின் நாளேடு ஒன்றின் கருத்துப்படி, விடுதலைப் புலிகளை பேச்சுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றி வந்ததோடு 2002 இல் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பாலசிங்கம் உழைப்பு முக்கியமானதாகும். புலிகள் இயக்கத்தில் உள்ள தீவிரவாத கருத்துள்ள தலைவர்களிடமிருந்து புலிகளை மீட்டு அரசியல் தீர்வுகளுக்கு இட்டுச் செல்ல முனைந்த முக்கிய தலைவராவார்’தேசத்தின் குரல்’ அன்ரன் 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments