1987 செப்டெம்பர் 15. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சுற்றிய பகுதி.

அன்று தொடங்கிய ஒரு உண்ணாவிரத போராட்டம், சில நாட்களிலேயே இலங்கையை தாண்டி சர்வதேச கவனத்தையும் ஈர்த்தது.

இராசையா பார் த்தீபன் என்ற திலீ பன், பு லிகளின் யாழ்ப்பாண அரசியல் பிரிவின் பொறுப்பாளராக இருந்தவர். இலங்கை அரசாங்கத்திடம் ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, “சாகும் வரை உண்ணாவிரதம்” என்ற போராட்டத்தை அவர் ஆரம்பித்தார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்களை விடுவித்தல், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இடம்பெறும் சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் இடம்பெற்றிருந்தன.

ஆனால் நாட்கள் கடந்தும், அவர் எதிர்பார்த்த தீர்வு கிடைக்கவில்லை.

செப்டெம்பர் 22 ஆம் திகதி, அப்போதைய இந்திய உயர்ஸ்தானிகர் ஜே. என். தீட்சித் யாழ்ப்பாணத்துக்கு சென்று வேலுப் பிள்ளை பிரபாக ரனை சந்தித்தார்.

திலீ பனின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இந்த சந்திப்பு அமைந்தது. திலீ பனை சந்திப்பது குறித்தும் பேச்சுகள் இடம்பெற்றன.

ஆனால் திலீ பன் போராட்டத்தை கைவிடுவார் என்ற உறுதியை வழங்க முடியாத நிலையில், தீட்சித் நல்லூருக்கு செல்லவில்லை.

திலீ பனோ முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

செப்டெம்பர் 15 முதல் செப்டம்பர் 26 வரை — 12 நாட்கள்.

உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தபோதும், அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

இறுதியில், 1987 செப்டம்பர் 26 ஆம் திகதி தி லீபன் உயிர் இழந்தார்.

அவரது மரணம் அக்காலத்தில் இலங்கை அரசியல் சூழலிலும், இந்தியா–இலங்கை உறவுகளிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

பின்னர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகில் தி லீபனின் நினைவாக சிலை அமைக்கப்பட்டது. பின்னர் ஏற்பட்ட போர் சூழலில் அந்த சிலை அகற்றப்பட்டது.

இன்றும் திலீ பனின் உண்ணாவிரத போராட்டம் இலங்கை தமிழர்களின் அரசியல் வரலாற்றில் முக்கியமான ஒரு நிகழ்வாக நினைவு கூரப்படுகிறது.

12 நாட்கள் நீடித்த அந்த உண்ணாவிரதம் ஒரு கேள்வியை மட்டும் விட்டுச் சென்றது:

கோரிக்கைகளுக்காக ஒருவர் உயிரையே தியாகம் செய்யும் அளவுக்கு செல்ல வேண்டிய நிலை ஏன் உருவானது?

See less

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments