ஈரானில் உள்ள பாடசாலை மற்றும் விளையாட்டு மையமொன்றின் மீது அமெரிக்கா நடத்திய இராணுவத் தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்குச் சமமானவை என்றும், அதேவேளை அரச எதிர்ப்புப் போராட்டங்களை அடக்குவதற்கு ஈரான் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது என்றும் நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் ஈரானின் மினாப் நகரில் அமைந்திருந்த பாடசாலையொன்றின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 120 பாடசாலை சிறுவர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

குறித்த பாடசாலை பொதுமக்கள் பயன்படுத்திய கட்டிடம் என்பதை உறுதிப்படுத்தாமல் அமெரிக்கா நடத்திய இந்த இலக்குத் தவறான தாக்குதல், சர்வதேசச் சட்டத்தின் கீழ் போர்க்குற்றமாகும் என ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மக்கள் மீதான சித்திரவதை

இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் ஈரானில் வெடித்த அரச எதிர்ப்புப் போராட்டங்களின் போது, பொதுமக்கள் மீது ஈரான் அரசாங்கம் மேற்கொண்ட அடக்குமுறைகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படுகின்றன.

அமெரிக்கா- ஈரான் போர் நடவடிக்கைகளுக்கு ஐ.நா. கண்டனம் - விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை | Un Condemns Us Iran Military Actions

இதில் சட்டவிரோதப் படுகொலைகள், சித்திரவதைகள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் போன்றவை உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை விடவும், இந்த அடக்குமுறைகளில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என ஐ.நா குழு கவலை வெளியிட்டுள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments