Screenshot

தனது சுணிச்சலால் தமிழீழப் பெண் என்ற பேரை தனதாக்கிக்கொண்ட சிறுமி வாழ்க வழமுடன்

சின்னஞ்சிறு பெண் தமிமீழத்தைபூர்வீகமாக கொண்டவர்.

இன்று மொத்த சிங்களமும் அவர் மீது வன்மத்தை கொட்டுகின்றது.

கூடவே தமிழர்கள் சிலரும்..

அப்படி அவர் என்ன செய்துவிட்டார்?

தமிழர்களின் பாரம்பரிய உடையுடன் தமிழினவழிப்பை மேற்கொண்ட சிங்கள இராணுவ அதிகாரிகளிற்கு போட்டுபோட்டு ஆரத்தி எடுக்கும் தமிழீழப்பெண்கள் சிலருக்கு மத்தியில்,

யுவன், அனிருத், சாய் அபயங்கர் என இசை என்ற பெயரில் இரைச்சல் கொடுக்கும் தமிழக இசையமைப்பாளர்களிற்கு பணத்தை அள்ளிக்கொடுத்து அவர்களின் இசை நிகழ்ச்சிகளில் குத்தாட்டம் போடும் எம் இளையவர்களிற்கு மத்தியில்,

அண்மையில் தல , தளபதி என இரண்டு தற்குறிகள் லண்டனில் சந்தித்துக்கொண்டபோது கற்கால மனிதர்கள் போல நடந்துகொண்ட எம் இன இளையவர்கள் பலரிற்கு மத்தியில்,

தன் இன அடையாளத்தை வெளிப்படுத்திய இவரை ஈழத்தமிழினம் பாராட்டியே ஆகவேண்டும்.

அவரின் பின்னால் நாம் நின்றாகவேண்டும்.

களமுனைகளிலும், சகல தமிழீழ நடைமுறை அரசின் நிர்வாகத்திலும் கோலோச்சிய எம் இனத்து மறப்பெண்களின் வரலாறு ஒருபோதும் பொய்த்துப்போகாது. தலைமுறையின் அடையாளத்தை யார் தீர்மானிக்கிறார்கள்?ஒருவர் தனது identity-யை வெளிப்படையாகச் சொல்வதில் என்ன தயக்கம்? அதில் மறைக்க வேண்டியது என்ன இருக்கிறது?

தனது அடையாளத்தைப் பெருமையுடன் சொல்லிக்கொள்வது தவறல்ல, அது பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம்தானே! 🙏

ஆனால், ஒருவர் என்ன அடையாளத்தைச் சொல்ல வேண்டும் என்பதையே மற்றவர்கள் தீர்மானிக்கத் தொடங்கிவிட்டால், பிரச்சினை அங்கேதான் ஆரம்பிக்கிறது.

அவர் சொல்லாத ஒரு அடையாளத்திற்காக சிலர் கொந்தளிப்பதும், அதைப் பார்த்து இன்னும் சிலர் பதறிக் கொந்தளிப்பதும்… உண்மையில் சற்று வேடிக்கையாகத்தான் இருக்கிறது! 😏

அடையாளம் என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று, எமது அடையாளத்தை இன்னொருவர் மறுக்கவே/திணிக்கவோ முடியாது

“ பெருமைகொள் ஈழத்தமிழா “

ஒரு குடும்பம் தனது தாய்நாட்டை விட்டு அகதியாக வெளியேறுகிறது. போர், இனவழிப்பு, அரசியல் சூழ்நிலை, உயிர் பாதுகாப்பு இப்படி ஈழத்தமிழரின் ஒரு தலைமுறை வேற்றுமண்ணில் தஞ்சம் புகுந்தார்கள். அங்கேயே வாழ்க்கையைத் தொடங்கிவர்களின் குழந்தைகள் அந்த மண்ணிலேயே பிறக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு அந்த நாடுதான் பிறந்த மண், அந்த நாட்டின் கல்வி, மொழி, சமூக சூழல், சட்டப்பூர்வ குடியுரிமை, நண்பர்கள், வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் அவர்களின் அடையாளத்தை உருவாக்குகின்றன.

ஆனாலும் அவர்கள் தமது கனவுதேசத்தைக் காணவிரும்புகிறார்கள். பெற்றோரின் கடந்து வந்த பாதைகள் அவரலகளில் தாக்கம் செலுத்தும் என்பது உலகறிந்த உண்மை. தாம் அவர்களது பெற்றோருடன் நாடின்றி அலைந்த நாட்களின் வரலாற்றில் மூழ்கியது தான் அவர்களது அடையாளம்.

அப்படிப்பட்ட ஒரு தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் பிரபலமான இடத்தைத் தொடும்போது, “நான் இலங்கையர் அல்ல,நான் கனடியர்” என்று கூறுகிறார் எனது அடையாளம் கனவு தேசம் என்கிறார் எனில், அதைக் கேட்டு ஏன் இவ்வளவு கோபம் சிங்களவர்கள் அடைகிறார்கள்?

தனது அடையாளத்தைத் தானே தீர்மானிக்கும் உரிமை ஒருவருக்கு இல்லையா?

அவரது பெற்றோர் உரிமைகள் மறுக்கப்பட்ட இலங்கையில் பிறந்தவர்கள் என்பதற்காக, அவர் பிறந்ததும் வளர்ந்ததும் வேறு நாட்டில் என்ற உண்மையை மறைத்து, “நீ இலங்கையர்தான்” என்று இவர்கள் கட்டாயப்படுத்த முடியுமா? பிறந்த மண், வளர்ந்த சூழல், குடியுரிமை, தனிப்பட்ட அனுபவம், தாய்தந்தை வழிவந்த உளத்தின் அடையாளம் ஆகியவற்றுக்கு அதில் இடமில்லையா?

புலம்பெயர்ந்த சமூகங்கள் “ தங்கள் வேர்களை மறந்துவிடவில்லை தாய்மொழியைப் பாதுகாக்க வேண்டும், கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும், முன்னோர்களின் வரலாற்றை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுவதில் இவர்களுக்கு ஏன் பயம் மேலிடுகிறது..?”நாடுகள் கடந்து அடையாளமின்றி வாழ்ந்து பின் அவர்கள் சாதிக்கும் போதும் பிரபலாமாகும் போதும் “எனது தேசிய அடையாளம் வேறு” என்று அவர்கள் கூறும்போது மட்டும் ஏன் கோபம் உருவாகிறது?

ஒருவரின் கருத்துடன் உடன்படவில்லை என்றால், அந்தக் கருத்துக்கு கருத்தால் பதில் அளிக்கலாம். வரலாற்றுத் தகவல்களைக் கூறலாம். குடும்பப் பின்னணியைப் பற்றி கூட விவாதிக்கலாம். ஆனால் தனிப்பட்ட அவதூறாக மாற்றும் சிங்களவர்களது அடிப்படை மனோநிலை என்ன?

குறிப்பாக, ஒரு பெண் தனது தேசிய அடையாளத்தைப் பற்றி கருத்து தெரிவித்தவுடன், அவளை “நாடற்றவள்”, “கோழை” என்று அழைப்பதும், அவளது பாலினத்தை முன்வைத்து அவதூறாகப் பேசுவதும், அவளது உடலைக் குறிவைத்து பாலியல் ரீதியான கேலிப்படங்களை உருவாக்குவதும் எதை வெளிப்படுத்துகிறது?

ஒரு பெண்ணின் கருத்தை எதிர்க்க முடியாதபோது, ஏன் அவளது உடல் தாக்குதலுக்கான கருவியாக்குகிறார்கள்?

சிறிது நாட்களின் முன்பு தமிழீழ பென்டன் அணிந்த இன்ஸ்ரா பிரபலத்தைத் தாக்கினர். இப்போது கனடிய நட்சத்திரமான மைத்ரேயியைத் தாக்குகிறார்கள். எமது ஊடகத்தில் கூட புலம்பெயர் சிறார்கள் தமிழ், தமிழினம், அவர்களது தேசம் பற்றி வெளிப்படுத்தும் காணொளிகளுக்கு வன்மமான பின்னூட்டங்கள் இடுகிறார்கள்.

இங்கு உளவியல் ரீதியாக இன்னொரு கேள்வியும் எழுகிறது. போரில் நேரடியாக ஈடுபடாத அடுத்த தலைமுறையினர் கூட, தங்கள் பெற்றோரின் வரலாற்றின் அடையாளத்தைச் சுமக்க வேண்டிய நிலையில் தள்ளுவது இலங்கையின் குரோத எண்ணம் கொண்ட சிங்களவர்கள் என்பது தானே வெளிப்படை..?

தேசிய அடையாளம் என்பது மிகவும் ஆழமான மனித அனுபவம். ஒருவருக்கு அது பிறந்த நாடாக இருக்கலாம். இன்னொருவருக்கு குடியுரிமை பெற்ற நாடாக இருக்கலாம். மற்றொருவருக்கு பெற்றோரின் தாய் நாடாக இருக்கலாம். இன்னொருவருக்கு இரண்டு நாடுகளுடனும் தொடர்புடையதாக இருக்கலாம். இன்னொருவருக்கு எந்த ஒரு நாட்டுடனும் முழுமையான தொடர்பு இல்லாததாக கூட இருக்கலாம்.

எமது புலம்பெயர் தலைமுறைகள் இந்தச் சிக்கலான அடையாளங்களுக்கிடையே தான் வாழ்கின்றனர்.

அவர்களை ஒரு பெட்டிக்குள் அடைத்து, “உன் பெற்றோர் எங்கிருந்து வந்தார்கள் என்பதை வைத்து நீ யார் என்பதை நாங்களே தீர்மானிப்போம்” என்று கூற முடியுமா?

அப்படியானால், ஒரு மனிதனின் அடையாளம் அவனுடைய தனிப்பட்ட உரிமை என்பதை இவர்கள் மறுப்பது குற்றமில்லையா..?

ஒருவரின் கருத்தை விமர்சிக்கலாம். அவரது வரலாற்றைப் பற்றி கேள்வி எழுப்பலாம். அவரது கருத்துடன் கடுமையாக முரண்படலாம். ஆனால் ஒரு மனிதனை மனிதராகவே மறுக்கும் அளவுக்கு செல்வதும், குறிப்பாக ஒரு பெண்ணைப் பாலியல் அவதூறுகளால் தாக்குவதும், வெறும் கருத்து வேறுபாடு அல்ல. அது எமது சமூகத்தின் சகிப்புத்தன்மையையும், தலைமுறைகளாகச் சுமந்து வரப்படும் வரலாற்றுக் காயங்களையும், எமது தமிழ்ப்பெண்கள் தலைமுறைகளாக சிங்கள அதிகாரத்தினரிடம் எதிர்கொள்ளும் வன்முறை வெளிப்பாடன்றி வேறென்ன?ஒரு நாட்டவரின் சமூகவலைத்தளப் பதிவுக்கு இன்னொரு நாட்டில் இருந்த காரணத்தால் அந்த நாட்டுச் சட்டத்தின் கீழ் மரண தண்டனையை தீர்ப்பாக வழங்கமுடியுமென்றால், இலங்கை அரசின் சட்டங்கள் இந்த கூட்டு உளவியலில் தமிழ்ப் பெண்களைக் கேலி செய்யும் குரோத மனங்கொண்ட சிங்கள ஐடிகளை கண்டு கொள்ளாது இருப்பது ஏன்? அவர்களது ஜனநாயக மனோநிலை இந்தளவு கீழ்தரமானதா..?

“நீ யார்?” என்று அவளிடம் கேட்பதற்கு முன், “அவள் யார் என்பதை தீர்மானிக்க உனக்கு என்ன உரிமை?” என்று அவர்கள் தம்மை கேட்க வேண்டிய நேரமிது.

போர் முடிந்திருக்கலாம். எல்லைகள் மாறாமல் இருக்கலாம். நாடுகள் தங்கள் அரசியல் வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு போரின் நினைவுகளும் வெறுப்புகளும் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தப்பட்டுக்கொண்டே இருந்தால், அதன் விளைவுகள் இன்னும் சமூக மனங்களில் உயிரோடு இருக்கின்றன என்பதே உண்மை.

ஒரு தனிமனித சுதந்திரத்தைக் கடல் கடந்தும் தலைமுறை தாண்டியும் மதிக்கத் தெரியாத சிங்களத்தின் பலவீனமான பயந்த மனோநிலையைப் புலம்பெயர்ந்த எமது தலைமுறையினர் மீது வன்மமாக கொட்டி உளவியல் தாக்கத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படை.

திலீபத்தின் உடலில் இருந்து செத்துக்கொண்டிருந்த ஒவ்வொரு அணுக்களும் செய்து கொண்டிருக்கும் மக்கள் பு ர ட் சி காலங்கடந்தும் தலைமுறை தாண்டியும் நடக்கிறது என்பதை தமிழர்களாக ஆழ உணர்வதே இங்கு விழிப்புணர்வு.Why should anyone hesitate to openly express their identity? What is there to hide?

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments