எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த துயரம் நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற 26 வயதுடைய நெதர்லாந்து நாட்டுப் பெண் ஒருவர் இன்று (24) மதியம் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இரு வெளிநாட்டு யுவதிகள் நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக எல்ல சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.

எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த துயரம் | Tragedy Strikes Foreign Tourist At Ella Falls

 மேலதிக விசாரணை

பிரதேச மக்களின் உதவியுடன் கடும் சிரமங்களுக்கு மத்தியில் சடலம் மீட்கப்பட்டு, 1990 அவசர அம்பியூலன்ஸ் சேவை மூலம் பதுளை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அப்பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நீர்வீழ்ச்சியை பார்வையிடச் செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments