கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் – அநுர அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை கடற்படையின் “யுஎஸ்எஸ் துல்சா (LCS 16)” போர்க்கப்பல் இன்று (07.10.2026) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அமெரிக்க கடற்படையின் வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 மாதங்களுக்கு பின்..

கடற்படை மரபுகளுக்கு அமைய, இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றுள்ளனர். “கடலோரப் போர்” (Littoral Combat Ship) வகையைச் சேர்ந்த இந்தக் கப்பல் 127.7 மீற்றர் நீளமுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் - அநுர அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை | Us Warship Arrives In Colombo

இந்தக் கப்பலின் தளபதியாக பி.எம். வானியர் செயற்படுகின்றார். 2019ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் திகதி அமெரிக்க கடற்படையில் இணைக்கப்பட்ட “யுஎஸ்எஸ் துல்சா (LCS 16)” கப்பல், அன்று முதல் அமெரிக்க கடற்படையில் சேவையாற்றி வருகின்றது.

இந்த நிலையில், குறித்த கப்பல் இதற்கு முன்னரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments