ஒரு தாயின் வாழ்நாள் கனவும், ஒரு மகளின் பல வருடக் கடின உழைப்பும் ஒரே நாளில் சாம்பலாகிப்போன பேரதிர்ச்சி ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரங்கேறியுள்ளது

நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்ட ஆடையில் புன்னகையோடு வலம்வர. ஒரு இருக்கை மட்டும் யாருமின்றி வெற்றிடமாய் நின்று அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்தது.

யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் இசைத்துறையில் பயின்றுவந்த 27 வயது நிரோஷினி என்ற மாணவி, தன் படிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்து பட்டமளிப்பு நாளுக்காகத் தான் ஆசையோடு காத்திருந்தார். அம்மா நான் பட்டதாரி ஆயிட்டேன் என்று தன் தாயைக் கட்டிப்பிடித்துக் கதற வேண்டிய அந்தப் பிஞ்சு நெஞ்சத்தை, புற்றுநோய் எனும் கொடூர நோய் பாதியிலேயே பறித்துச் சென்றுவிட்டது.

நேற்று மேடையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டபோது, நிரோஷினியின் பெயர் கேட்கப்பட்ட இடங்களில் எல்லாம் கைதட்டல்களுக்குப் பதிலாக விசும்பல் சத்தங்களே எதிரொலித்தன. எங்களோடு சேர்ந்து பட்டம் வாங்க வேண்டிய தோழி இன்று இல்லையே. என சக மாணவர்களும் பேராசிரியர்களும் மேடையிலேயே உடைந்து அழுத காட்சி அங்கே இருந்த ஒவ்வொருவரின் நெஞ்சையும் சுக்குநூறாக்கியது.

கைகளில் பட்டமும் சான்றிதழும் மிளிர வேண்டிய

இடத்தில், இன்று வெறும் நினைவுகளும் அஞ்சலி மலர்களும் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. கல்விப் பயணத்தின் இலக்கை எட்டியும், அதைத் தன் பெற்றோருடன் சேர்ந்து கொண்டாட முடியாமல் காலனின் கைக்குச் சென்ற அந்த இசைப் பூவுக்கு எமது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments