1950களில் கல்லோயா குடியேற்றத் திட்டங்கள் தொடக்கம் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரையில் இந்த நாட்டில் தமிழ்மக்கள் பெரும்பான்மையின ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டினார். 

இலங்கையில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டது பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வெற்றியாகும்போது, இத்தீவிலுள்ள தமிழர்கள் எவ்வாறு தம்மை இலங்கையர்களாக உணர முடியுமெனவும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களை இலங்கையர்களாக உணரவைக்கும் நல்லிணக்கத்தை இத்தீவிலுள்ள பெரும்பான்மை இன ஆட்சியாளர்கள் இனியேனும் ஏற்படுத்தவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

மீளப் பறித்தெடுக்கப்பட்ட விடுதலை

நாடாளுமன்றில் நேற்று (09) உரையாற்றும் போது துரைராசா ரவிகரன் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இதுவரை கிட்டாத நீதிக்காக – 43 ஆண்டுகளாகியும் – எங்கள் ஒவ்வொரு சாட்சியும் மெல்ல மெல்ல வயது முதிர்ந்து காலமாகிச் செல்ல, எஞ்சியிருக்கும் சாட்சிகளோடு இன்றும் நீதிக்காக காத்திருக்கிறோம்!

Advertisement

ஒன்று சேர்ந்து எதிர்த்து நின்று போராடி பிரித்தானியரை வெளியேற்றி ஒன்றாகி அடைந்த ஒரு விடுதலை, பின்னாளில் தனித்த ஒரு பெரு இனத்துக்கு மட்டும் தானா?… என்று எம்மில் எல்லோருமே கேட்கின்ற அளவுக்கு இந்தத்தீவில் எங்களின் விடுதலை மீளப் பறித்தெடுக்கப்பட்டது.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது சிங்களவர்களுக்கு வெற்றியே : ரவிகரன் எம்.பி பகிரங்கம் | Killing Of Tamils Was A Victory For The Sinhalese

நாங்கள் நீண்ட காலமாக – மிக நீண்டகாலமாக நீதிக்காக காத்திருக்கிறோம். காத்திருப்பதும், சொந்த நிலங்களில் இருந்து கலைக்கப்படுவதும்,வன்முறையால் சொத்துகளும் உயிர்களும் அழிக்கப்படுவதும் தான் இத்தீவில் மாறி மாறி வந்த அரசுகள் எங்களுக்கு ஈந்திருப்பவை!

இவையே ஈழத்தமிழர்களாக எங்களின் இறந்த காலமாயும் நிகழ்காலமாயும் மாறிப்போனது! தீவு முழுமைக்குமான உட்கட்டமைப்பு விருத்தியிலும் நிருவாக நடைமுறைகளிலும் குடிமக்கள் பொதுவாழ்விலும் ஒப்பீட்டளவில் கூடிய அக்கறையை எடுக்கின்ற இந்த அரசாங்கம் கூட, மிக நீண்டகாலமாக நீதிக்காக காத்திருக்கும் ஈழத்தமிழினப் பக்கம் இன்னும் திரும்பவில்லை!

மைத்திரேயி இராமகிருஷ்ணன் விவகாரம்

கல்லோயா குடியேற்றத் திட்டங்களுக்காக 1950 களில் நாங்கள் கொல்லப்பட்டதில் இருந்து 2009ஆம் ஆண்டில் போரியல் அறங்கள் வீழ, பன்னாட்டு நீதியும் சாக, பாதுகாப்பு வலயம் என்று நம்பிச் சென்ற இடத்திலும் குண்டுகள் போட்டு சாகடிக்கப்பட்ட எங்களுக்கான நீதியை – உங்களிடம் நம்பி ஒப்படைத்து இன்று காணாமல் தேடிக்கொண்டிருக்கும் எங்கள் உறவுகளுக்கான நீதியை – எங்களுக்கு அரணாக நின்றதாலேயே இன்றளவிலும் சிறையில் வாடுகின்ற எங்களில் எஞ்சிய தமிழ் அரசியல் கைதிகளுக்கான நீதியை என… ஓர் இனமாக – இத்தீவில் பிரித்தானியர் வெளியேறிய காலந்தொட்டு நீதிக்காக காத்திருக்கிறோம்!

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது சிங்களவர்களுக்கு வெற்றியே : ரவிகரன் எம்.பி பகிரங்கம் | Killing Of Tamils Was A Victory For The Sinhalese

எங்கள் பிள்ளை மைத்திரேயி இராமகிருஷ்ணன் தன்னை தமிழ் ஈழப்பெண்ணாகக் கூறிவிட்டார் என்றவுடனேயே இத்தீவில் சலசலப்பும் சமூக வலைத்தள எதிர்ப்புகளும் குவிந்துவிட்டன.

நாங்கள் கொல்லப்பட்டதே உங்களுக்கு வெற்றியாகும் போது எவ்வாறு நீங்களும் நாங்களும் ஒன்றாக முடியும்! ஒரு கையால் மறுகையைத் துண்டிப்பதை வெற்றி எனலாமா!

புலம்பெயர்ந்ததால் மைத்திரேயி சொல்லிவிட்டாள். புலம்பெயராத எங்களில் எஞ்சியோரையேனும் இலங்கையராக உணரவைக்கும் நல்லிணக்கத்தை இத்தீவின் பெரும்பான்மை இனியேனும் தனது வாழ்வாகக் கொள்ளுமா” என தெரிவித்தார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments