மன்னார் – யாழ்ப்பாணம் பள்ளமடு பகுதியில் விபத்து : ஒருவர் பலி – யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் இன்று(12.10.2026) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முழங்காவில் பகுதியில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணியாளர்களை ஏற்றி வந்த சிறிய ரக பேருந்து ஒன்று பள்ளமடு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இதன் போது பேருந்தில் பயணித்த 20 பேரில் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் காயங்களுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

GalleryGalleryGalleryGallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments