யாழ். தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜா
உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று(19.10.2024) மாலை அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீவிர சிகிச்சை
இந்நிலையில் எமது ஊடகம் அவரது உறவினர்களை தொடர்புகொண்டு வினவிய போது, உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது அவரது உடல்நிலை சீராகிவருவதாகவும் உறவினர்களால் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து சம்பந்தன் இவர் போன்றவர்களின் இழப்பு சிங்கள தேசியவாதிகளின் இழப்பாகவே இதைப் பார்க்க வேண்டும், எதிர்காலத்தில் புலி ஆதரவாளர்கள் ஒருங்கினைந்து இனவளிப்பிற்கு எதிராக வெளிநாட்டுத்தலைவர்களோடு ஒரு உடன்படிக்கை ஏற்பட்டால் ,சிங்களவர்களை கடவுளாலும் பாதுகாற்ற முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என தெரிவிப்பு?