ஒக்ஸ்போர்ட் உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் சிறப்பாக நடைபெற்ற மதிப்பளித்தலுடனான விருந்து உபசார ஒன்றுகூடல்! 🌹
உலகத் தமிழர் வரலாற்று வளாகமும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து நடத்திய “மதிப்பளித்தலுடன் கூடிய விருந்து உபசார ஒன்றுகூடல்” நிகழ்வு, 18.10.2026 ஞாயிற்றுக்கிழமை, இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. அன்ரன் நோபர்ட் (சசி) மற்றும் திரு. மணிவண்ணன் பத்மனாபன் ஆகியோரின் தலைமையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைச் செயலகத்திலிருந்து பெருந்திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
தமிழர் வரலாறு, பண்பாடு, தேசிய அடையாளம் மற்றும் ஒற்றுமையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வு, உறவுகளுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் பரஸ்பர மதிப்பையும் வலுப்படுத்தும் ஒரு சிறப்பான ஒன்றுகூடலாக அமைந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் அனைத்து உறவுகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நிகழ்வைச் சிறப்பாக ஒழுங்கமைக்கப் பங்களித்த அனைவருக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகள்.
ஒற்றுமையே எமது பலம்!
தமிழர் வரலாறே எமது அடையாளம்!
ஒன்றிணைந்து வலுவான தமிழர் எதிர்காலத்தை உருவாக்குவோம்!

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments