புதிய இணைப்பு 

அக்குறணையில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் அலவத்துகொட காவல்துறையினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய கொங்கிறீட் கலவை வாகனத்தின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அக்குறணை, குருகொட சந்திப் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொங்கிறீட் கலவை வாகனமொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்குக் காரணம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம், வீதியில் பயணித்த முச்சக்கர வண்டிகள், லொறிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட சுமார் எட்டு வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இச்சம்பவத்தின் போது வீதியில் நடந்து சென்ற பாதசாரிகளும் விபத்தில் சிக்கியுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அக்குறணைப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

A9 வீதியின் அக்குறணை பகுதியில் பாரிய விபத்து : பலர் பலி! ஒருவர் அதிரடி கைது | Major Accident In Akurana

இரண்டாம் இணைப்பு

அக்குறணை பகுதியில்  இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்; மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்குறணையில் உள்ள குருகொட பகுதிக்கு அருகே, சென்றுகொண்டிருந்த பல வாகனங்கள் மீது சீமெந்து கலவையை ஏற்றி சென்ற கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments