இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆயுத விநியோகம் மற்றும் இராணுவப் பின்னணி குறித்த முக்கிய இரகசியங்களை முன்னாள் இராணுவத் தளபதியும் ஃபீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா வெளியிட்டுள்ளார். 

போருக்கான ஆயுதங்கள் அனைத்தும் சீனாவிலிருந்து கடனாகவே பெறப்பட்டன என்று அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் ஒன்றில், போர்க்கால நிர்வாகம் மற்றும் ஆயுதக் கொள்வனவு குறித்துப் பேசும் போதே சரத் பொன்சேகா இந்த விபரங்களை வெளியிட்டார்.

ஆயுதக் கடன்.. 

அவர் மேலும், “கடந்த போரின் போது, நாம் பயன்படுத்திய ஆயுதங்கள் அனைத்தும் சீனாவிலிருந்து கடனாகப் பெறப்பட்டவை ஆகும்.

இறுதி போரின் போது இயங்கிய இரகசிய அறை.. சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல் | Final War China Sri Lanka Govt Sarath Fonseka

இதற்கென இலங்கையில் ஒரு தனிக் களஞ்சியமே (Bond House) இயங்கி வந்தது. இந்த விநியோகக் கட்டமைப்பின் காரணமாக, இராணுவத்தினராகிய எங்களுக்குத் தேவையான ஆயுதங்களை எவ்விதத் தடையுமின்றி, எங்கள் விருப்பப்படி சுதந்திரமாக எடுத்துப் பயன்படுத்துவதற்கான முழு வாய்ப்பு இருந்தது.

இராணுவத் தளபதியாகிய எனக்கும், அன்றைய விமானப்படைத் தளபதிக்கும் இடையே இருந்த சிறந்த புரிதலும் ஒத்துழைப்பும் இந்த ஆயுதப் பயன்பாட்டை மேலும் எளிதாக்கியது”என்றார். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments