திருகோணமலை, பாலைஊத்து பகுதியில் வைத்து இரண்டு பெண்களைக் கடத்திச் சென்று, கடற்படை முகாமின் நிலத்தடிப் பதுங்கு குழியில் தடுத்து வைத்துச் சித்திரவதை செய்து படுகொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகள்

கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்தில், மேரி டெல்ஷியா மற்றும் சசிகுமார் தேன்மொழி ஆகிய இரு பெண்களே உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலையில் இரு பெண்கள் படுகொலை ; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது | Women Murdered Trincomalee Three Retired Arrested

இச்சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கூட்டுச் சூறையாடல் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்த தீவிர விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை, பூஸ்ஸ மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 47 மற்றும் 53 வயதுடைய, கடற்படையின் நிர்வாகப் பிரிவில் தலைமைச் சிற்றதிகாரிகளாக (Chief Petty Officers) பணியாற்றி ஓய்வுபெற்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments