யாழ்ப்பாணம்-கிளிநொச்சி பிரதான வீதியில் உள்ள புதுக்காடு பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியைக் கடந்து சென்ற பசுவொன்றின் மீது முச்சக்கர வண்டி மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி,  பசுவின் மீது மோதிய பின்னர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இதில் முச்சக்கரவண்டி சாரதியும், பின் இருக்கையில் பயணித்த பெண் பயணியும் பலத்த காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி வீதியில் பசுவின் மீது முச்சக்கரவண்டி மோதி விபத்து:பெண்ணொருவர் உயிரிழப்பு | Jaffna Kilinochi Accident Died Cow

அவர்கள் முதலில் பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், பளை பகுதியைச் சேர்ந்த அறுபத்தெட்டு வயதானவர் ஆவார்.

இந்தச் சம்பவம் குறித்து பளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments