கதிர்காம ஆலயத்திற்குச் சொந்தமான காணியில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு தனமல்வில, நிகவெவ பகுதியில் அமைந்துள்ள கதிர்காம ஆலயத்திற்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் தனமல்வில, போதாகம, மீகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமாகாத இளைஞன் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

கதிர்காம ஆலயத்திற்கு சொந்தமான, குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நிகவெவ 280 வத்தை பகுதியில் அமைந்துள்ள குறித்த தென்னந்தோட்டத்தைச் சுத்தம் செய்வதற்காக குறித்த இளைஞர் நேற்று (23) அங்கு சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காம ஆலயத்திற்குச் சொந்தமான காணியில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு | Body Of A Young Man Found Having Been Shot Dead

எனினும், அவர் மீண்டும் வீடு திரும்பாத காரணத்தினால், அவரது தந்தை இன்று (24) அதிகாலை சம்பந்தப்பட்ட காணிக்குச் சென்று தேடிப்பார்த்துள்ளார்.

அங்கு அவர் தனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்திருப்பதைக் கண்டதுடன், இது குறித்து தனமல்வில பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய, பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காகக் குற்றத்தடுப்புப் பிரிவு ஸ்தல பரிசோதனை அதிகாரிகளும், பொலிஸ் மோப்ப நாய் பிரிவினரும் குறித்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் யார் என்பது அல்லது அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் குறித்து தனமல்கவில்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments