உயிரோடு இருப்பவர்கள் இப்படியான கீழ்தரமான வேலையை எவரும் செய்ய வேண்டாம் அந்தக் குழந்தையின் நிலமை மிகவும் கொடுமையான வாழ்கையாகயிருக்கும் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்?

யாழில் இளம் தாயொருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர் மாய்த்துள்ளார்.

கண்டாமை – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த கருநேசன் கார்த்திகா (வயது 28) என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் கடந்த 19ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தனது முதலாவது ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

பின்னர், நேற்றையதினம் வைத்தியசாலையில் இருந்து வீடு சென்றுள்ளார். பிற்பகல் 6.30க்கு வீட்டுக்கு சென்ற அவர், பிற்பகல் 7.30 மணியளவில் கிணற்றினுள் விழுந்து உயிர் மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments