மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் பல வருடங்களாக தமது காணிகளுக்கு உறுதிப் பத்திரங்கள் இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த 65 குடும்பங்களுக்கு இன்றைய தினம் புதன்கிழமை (28) மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து காணி உரித்து பத்திரங்கள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.

65 குடும்பங்களுக்கு காணி உறுதிகள் 

இதன் போது பல வருடங்களாக தமது காணிகளுக்கான ஆவணங்கள் இல்லாமல் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் வசித்து வந்த 65 குடும்பங்களுக்கு காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வழங்கப்பட்டன காணி உறுதிகள் : மக்களின் பல வருட கனவு நிறைவேற்றம் | Land Deeds Handed Over To 65 Families In Mannar

பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க,நாடாளுமன்ற உறுப்பினர்களாக காதர் மஸ்தான்,ஜெகதீஸ்வரன் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்,மன்னார் நகர சபையின் தவிசாளர்,மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோர் இணைந்து குறித்த இலவச உறுதி பத்திரங்களை மக்களிடம் வழங்கி வைத்தனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments