சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் (சிஃபாஸ்) திறப்பு விழா

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் (சிஃபாஸ்) திறப்பு விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் பிரமுகர்களும்.

1 of 4

படம்: பே. கார்த்திகேயன்

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் (சிஃபாஸ்) திறப்பு விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் பிரமுகர்களும்.

படம்: பே. கார்த்திகேயன்

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் (சிஃபாஸ்) புதிய வளாகத்தைத் திறந்துவைத்த பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு நினைவுப் பரிசு வழங்கினார் கழகத்தின் தலைவர் கே வி ராவ்.

படம்: பே. கார்த்திகேயன்

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ‘சிபாஸ்-போத்ரா’ அரங்கில்  உரையாற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங், தமது தீபாவளி வாழ்த்துகளை முன்கூட்டியே தெரிவிப்பதாகக் கூறினார்.

படம்: பே. கார்த்திகேயன்

ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்த மரபு இருப்பதாகவும் அதனைக் கட்டிக்காக்கவும் போற்றவும் தாங்கள் விரும்புவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

“இருந்தபோதும் சிங்கப்பூரர்கள் தங்களது சமூகங்களைத் தாண்டி பிறரது பண்பாடுகள், மரபுகள் ஆகியவற்றின்மீதான ஆர்வத்தைக் கொண்டிருக்கவேண்டும்,”  என்று அவர் கூறினார். 

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் (சிஃபாஸ்) திறப்பு விழாவில்  உரையாற்றியபோது திரு வோங் இவ்வாறு குறிப்பிட்டார். சனிக்கிழமை (அக்டோபர் 31) நடைபெற்ற அவ்விழாவில் ஏறத்தாழ 150 பேர் வந்திருந்தனர். முன்னதாக ஸ்டார்லைட் ரோட்டில் இயங்கி வந்த இந்தக் கலைப்பள்ளி,  இவ்வாண்டு ஜூன் முதல் மிடில் ரோட்டில்  செயல்படுகிறது.

பள்ளியில் ‘சிபாஸ்-போத்ரா’ அரங்கில் “மாலை வணக்கம்”, எனத் தமிழில் சொல்லி உரையைத் தொடங்கிய திரு வோங், தமது தீபாவளி வாழ்த்துகளை முன்கூட்டியே தெரிவிப்பதாகக் கூறினார்.

கலைப்பள்ளியினரோடு கலந்துறவாடும் பிரதமர் வோங்.

கலைப்பள்ளியினரோடு கலந்துறவாடும் பிரதமர் வோங். – படம்: பே. கார்த்திகேயன்

கலாசாரப் பன்முகத்தன்மை  சிங்கப்பூரைத் தனித்துவமானதாக்குவதாகக் கூறிய பிரதமர், வேறுபாடுகளை அழிக்கவோ அல்லது எல்லாவற்றையும் ஒரே மாதிரியான, ஒற்றைப் பண்பாடாக ஒன்றிணைக்கவோ தாங்கள் முனையவில்லை என்றார்.

“மாறாக, பல்வேறு மரபுகள் செழித்து வளர நாங்கள் இடமளிக்கிறோம். அதே வேளையில் அவை ஒன்றுக்கொன்று ஊடாடவும் தாக்கம் செலுத்தவும் ஒன்றை ஒன்று வளப்படுத்திக்கொள்ளவும் ஊக்குவிக்கிறோம்,”  என்று அவர் கூறினார்.1949ல் அறை ஒன்றில் ஆறு மாணவர்களுடன் தொடங்கிய இந்தப் பள்ளி,  70 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் சிறந்த இந்தியக் கலைக்கல்வி நிலையங்களில் ஒன்றாகத் திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர் கர்நாடக இசைக்கலைஞர்கள் சு‌‌‌ஷ்மா சோமா, ‘பாலா பாய்ஸ்’ சகோதரர் போன்றோர் இப்பள்ளியில் மாணவர்களாகப் பயின்று அனைத்துலக அரங்குகளில் ஏறியுள்ளதையும் திரு வோங் சுட்டினார்.

“சிஃபாசின் பங்களிப்பு, அதன் வாயில்களைக் கடந்து சென்ற மாணவர்களையும் தாண்டிப் பரந்து விரிந்துள்ளது. கலைஞர்கள், ஆசிரியர்கள், பார்வையாளர்களைக் கொண்ட முழுமையான சூழலை உருவாக்க இது உதவியுள்ளது. அத்துடன், இந்தச் செழுமையான கலை மரபுகள் சிங்கப்பூரில் தொடர்ந்து செழித்தோங்குவதையும் உறுதி செய்துள்ளது,”  என்று அவர் குறிப்பிட்டார். 

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்toggle-button-chevie

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் (சிஃபாஸ்) திறப்பு விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் பிரமுகர்களும்.

கையில் ஒப்பந்தங்களுடன் சிஏஏஎஸ் அமைப்பின்  இயக்குநர் ஹன் கொக் ஜுவான் (இடது), ஏஏகே அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கல் டேனியல்.

வேர்களை வலுவாக்குவது

மரபின் தொடர்ச்சியைப் பற்றியும் குறிப்பிட்ட பிரதமர், பண்பாட்டைக் கட்டிக்காப்பது என்பது நாம் தலைமுறைகளாகப் பெற்றவற்றைப் பாதுகாப்பது மட்டுமன்று எனக் குறிப்பிட்டார்.

“நமக்கு அடுத்து வரும் தலைமுறையினருக்கும் பண்பாடு தொடர்ந்து அர்த்தமுள்ளதாகவும் பொருத்தமானதாகவும் இருப்பதை உறுதி செய்வதையும் பற்றியது. சிஃபாஸ் தனது அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கும் இந்த வேளையில், இது அதற்கான ஒரு முக்கியப் பணியாகும்,” என்றார் அவர்.

பிரதமர் லாரன்ஸ் வோங் புதிய வளாகத்தைப் பார்வையிடுகிறார்.

பிரதமர் லாரன்ஸ் வோங் புதிய வளாகத்தைப் பார்வையிடுகிறார். – படம்: பே. கார்த்திகேயன்

உலகம் முழுவதிலுமிருந்து வரும் இசை, நடனம், பண்பாடு ஆகியவற்றுக்கு அறிமுகமாகியே இளையர்கள் வளர்வதாகக் குறிப்பிட்ட திரு வோங், முந்தைய தலைமுறையினரைக் காட்டிலும் அவர்களின் ரசனைகளும் தாக்கங்களும் பன்முகத்தன்மையை இயல்பாகக் கொண்டிருப்பதாகக் கூறினார். 

வளாகத்தின் அதிகாரபூர்வ திறப்பு.

வளாகத்தின் அதிகாரபூர்வ திறப்பு. – படம்: பே. கார்த்திகேயன்

“புதிய தாக்கங்களிலிருந்து நம் இளையர்களைப் பாதுகாப்பது இங்கு சவாலன்று. மாறாக, பரந்த உலகத்துடன் அவர்கள் நம்பிக்கையுடன் ஈடுபடும் வகையில், அவர்களுக்குப் போதுமான, வலுவான வேர்களை வழங்குவதே சவாலாகும்,” என்று அவர் கூறினார். நமக்குக் கிடைத்துள்ள மரபுகள் தோன்றும்போது முழுமையாகத் தோன்றவில்லை எனக் குறிப்பிட்ட திரு வோங், அவையுமே படிப்படியாக கலைஞர்களால்  உருப்பெற்றதாகக் குறிப்பிட்டார். “தங்களின் முன்னோடிகளிடமிருந்து கற்றுக்கொண்ட கலைஞர்களால் தலைமுறை தலைமுறையாக உருவாக்கப்பட்டன; அத்துடன் அவர்கள், காலத்திற்கேற்ப மாறினர், புதிய கூறுகளையும் புகுத்தினர். எனவே, பாரம்பரியமும் புதுமையும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments