இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக, அரபுக் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டமானது, இஸ்ரேல் – டெல் அவிவ்வில் நேற்று(31.10.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் முடிவுகளில் தோற்கடிக்கப்பட்ட நெதன்யாகு

இதன்போது, நெதன்யாகுவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டில் உண்மையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த இதுவே கடைசி வாய்ப்பு என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நெதன்யாகுவுக்கு நெருக்கடி - ஆட்சியை ஆட்டம் காண வைக்கும் அரபுக் கட்சிகளின் புதிய கூட்டணி | Pressure On Netanyahu

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்கோட், அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை நிராகரித்திருந்தார். எனினும், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால், அரபுக் கட்சிகளின் ஆதரவு அவருக்கு அவசியமாகியுள்ளது.

தேர்தல் முடிவுகளின்படி,நெதன்யாகுவின் கூட்டணி – 53 ஆசனங்கள், ஐசன்கோட்டின் கூட்டணி – 48 ஆசனங்கள் மற்றும் அரபு தலைமையிலான மூன்று கட்சிகள் – 19 ஆசனங்களை பெற்றுள்ளன.

ஆட்சியமைக்க தேவைப்படும் அரபுக் கட்சிகள்

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 ஆசனங்கள் உள்ள நிலையில், அரபுக் கட்சிகளுடன் ஐசன்கோட் கூட்டணி அமைத்தால், நாடாளுமன்றத்தில் மொத்தம் 67 ஆசனங்களுடன் பெரும்பான்மையைப் பெற முடியும்.

இதற்கிடையில், நெதன்யாகுவின் ஆதரவாளர்களும் எதிர்ப்பேரணியில் ஈடுபட்டு, பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய கட்சிகளைக் கொண்ட அரசாங்கம் அமைக்கக் கூடாது எனக் கோஷமிட்டுள்ளனர்.

நெதன்யாகுவுக்கு நெருக்கடி - ஆட்சியை ஆட்டம் காண வைக்கும் அரபுக் கட்சிகளின் புதிய கூட்டணி | Pressure On Netanyahu

இஸ்ரேல் தேர்தலில் அரபுக் கட்சிகள் பெற்றுள்ள வெற்றி, நாட்டின் அடுத்த அரசாங்கத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய அரசியல் சக்தியாக அவற்றை மாற்றியுள்ளது.

இந்த அரசியல் நகர்வு நெதன்யாகுவின் நீண்டகால ஆட்சிக்கு சவாலாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments