நாட்டின் வெவ்வேறு இரண்டு இடங்களில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நீரில் மூழ்கிய சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வவுனியா, நெளுக்குளம் காவல்துறை பிரிவின் புளியங்குளம் பகுதியில் உள்ள குளத்தில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் 63 வயதுடைய வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேற்படி பெண் தனியாக வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்
அவர் குளத்துக்கு அருகால் சென்றபோது தவறி விழுந்தமையால் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

கம்பஹா காவல்துறை பிரிவின் மாகேவிட்ட பிரதேசத்தில் உள்ள கல்ல சொரொவ்வு அணைக்கட்டு அருகில் நேற்று திங்கட்கிழமை மாலை நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த 18 வயதுடைய கணேமுல்ல பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் கம்பஹா மற்றும் நெளுக்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
