அகில இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசிய மட்டத்திலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில், யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் 16 வயதுக்குட்பட்ட மகளிர் உதைபந்தாட்ட அணியினர் வெற்றியைப் பெற்று தேசிய சம்பியன் பட்டத்தைத் தமதாக்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். 

இச்சாதனை மூலம் கல்லூரிக்கும் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை சேர்த்த வெற்றி வீராங்கனைகளைக் கௌரவிக்கும் வகையில், இன்று காலை மருதனார்மடம் சந்தியிலிருந்து பான்ட் வாத்திய அணிவகுப்புடன் ஆரம்பமான சிறப்பு ஊர்வலம், கே.கே.எஸ். வீதி ஊடாக யூனியன் கல்லூரியைச் சென்றடைந்தது.

தேசிய சம்பியன் வீராங்கனைகள் கௌரவிப்பு

கல்லூரி அதிபர் தில்லையம்பலம் வரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தேசிய சம்பியன் வீராங்கனைகளை  வரவேற்றுக் கௌரவித்தனர்.  

வரலாற்றுச் சாதனை : தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மகளிர் உதைபந்தாட்ட அணிக்கு அமோக வரவேற்பு! | Tellippalai Union College Girls Football Team

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments