ஐக்கிய நாடுகள் சபையின் அமைதியான முறையில் கூடுவதற்கும் சங்கம் அமைப்பதற்குமான சுதந்திரத்திற்கான சிறப்பு நிபுணர் (UN Special Rapporteur on Freedom of Peaceful Assembly and Association – FoAA), 2027 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவை மற்றும் பொதுச் சபையில் சமர்ப்பிக்கவுள்ள இரண்டு முக்கிய அறிக்கைகளுக்காகப் பங்களிப்புகளை (Call for Inputs) கோரியுள்ளார்.
இதற்கான இறுதி நாள்: 30 நவம்பர் 2026.
நமது நோக்கம் மற்றும் முக்கியத்துவம்: புலம்பெயர் தேசங்களிலும், தாயகத்திலும் ஈழத் தமிழர்கள் சந்திக்கும் அரசியல் மற்றும் மனித உரிமை நெருக்கடிகளை சர்வதேச அரங்கில் பதிவு செய்ய இதுவொரு மிக முக்கியமான வாய்ப்பாகும். குறிப்பாக:
1. மேற்கத்திய நாடுகளின் தடைகள் (LTTE Ban) ஏற்படுத்தும் தாக்கம்: ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மீது விதித்துள்ள தடைகள், எவ்வாறு ஈழத் தமிழர்களின் “சுயநிர்ணய உரிமைக்கான” (Self-determination) அமைதியான போராட்டங்களையும், தமிழ் இன அழிப்பிற்கு (Eelam Tamils Genocide) நீதி கோரும் செயல்பாடுகளையும் முடக்குகின்றன என்பதை நாம் ஆதாரங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.
2. நாடுகடந்த அடக்குமுறை (Transnational Repression): தாயகத்திலும் சர்வதேச அளவிலும் தமிழர்களின் குரல்களையும் செயல்பாடுகளையும் ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படும் உத்திகள்.
3. இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் (People on the Move) சந்திக்கும் சவால்கள்.
நம்மிடையே உள்ள அனுபவங்கள், சட்டப்பூர்வ தடைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விபரங்களை ஐநாவிடம் சமர்ப்பிப்பது நமது வரலாற்று கடமையாகும்.
பங்களிப்பு வழங்குவது எப்படி?
• அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: hrc-sr-freeassembly@un.org
• மின்னஞ்சல் தலைப்பு (Subject Line): Input for 2027 Thematic Reports – SR FoAA
• மொழி: ஆங்கிலம் (முடிந்தவரை), அதிகபட்சம் 2,500 சொற்கள்.
• கடைசி நாள்: 30 நவம்பர் 2026.
உங்களது அமைப்பு அல்லது தனிப்பட்ட முறையில் இந்த அழைப்பிற்குப் பதிலளிக்குமாறும், இந்த விபரங்களை ஏனைய தமிழ் அமைப்புகளுடனும் பகிர்ந்து கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் ஒன்றிணைந்து சர்வதேச அரங்கில் நமது நீதிக்கான குரலை உரக்கப் பதிவு செய்வோம்!
நன்றியுடன்,
சுதந்திர தமிழ் ஈழத்துக்கான சங்கம் (AFTE)
(Association Free Tamil Eelam)
மின்னஞ்சல்: associationfreetamileelam@gmail.com
Pls like our like page Facebook: https://www.facebook.com/61565078993508
