தாயகம் விட்டுப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் நீண்டகால வலிகளையும், தியாகங்களையும், அழியாத பண்பாட்டு அடையாளத்தையும் பறைசாற்றும் விதமாக, பிராம்ப்டன் நகர மேயர் பேட்ரிக் பிரவுன் முன்னிலையில் தமிழீழ தேசியக் கொடி வானுயரப் பட்டொளி வீசிப் பறக்கவிடப்பட்டது. ‘
உலகளாவிய தமிழ் உரிமைகளுக்கான குரல்’ அமைப்பினரும், உணர்வுப்பூர்வமாகத் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகளும் கண்நிறைய இந்த வரலாற்று நிகழ்வைக் கண்டு நெகிழ்ந்தனர். இந்நாளில், நவம்பர் 21-ஆம் தேதியை ‘தமிழீழ தேசியக் கொடி நாளாக’ மேயர் பேட்ரிக் பிரவுன் அதிகாரப்பூர்வமாகப் பிரகடனப்படுத்தியது, உலகெங்கும் வாழும் தமிழர்களின் சுயமரியாதைக்கும், கனேடிய மண்ணில் அவர்கள் வேரூன்றி வளர்ந்த வரலாற்றுக்கும் கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
எத்தனை கடல்கள் கடந்து சென்றாலும், தங்களின் வேர்களையும் வரலாற்று நினைவுகளையும் தமிழர்கள் ஒருபோதும் மறப்பதில்லை என்பதற்கான உயிர்ப்புள்ள சாட்சியாக இன்றைய கொடியேற்ற நிகழ்வு அமைந்திருந்தது
இந்த மண்ணுலகில் தமிழர்கள் வாழும் வரை அவர்கள் தங்களின் மூதாதையர்கள் ஆன சோழமன்னனின் கொடியை பின்தொடர்வார்கள் .அந்தக்கொக்கு ஈழத்தமிழர்கள் சுமார் ஐம்பதினாயிரம் ஆண் பெண் தமிழ் இளைஞர்களின் இரத்தை பாய்ச்சி இருக்கின்றார்கள். அத்தோடு ஐந்து லட்சம் தமிழீழ மக்களின் உயிர்தியாகமும் அக்கொடியில் உள்ளது .அதனால்தான் அக்கொடி இரத்தக்களராக இருக்கின்றது?


