தொழிலதிபரும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவருமான அழகசுந்தரம் கிருபாகரன் காலமாகியுள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் (Jaffna) போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம்(19) மாலை உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டார்.
உயிரிழப்பு
தேர்தல் பிரச்சார காலங்களில் அவர் திடீர் சுகவீனம் அடைந்து சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் றேற்றைய தினம் மாலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.