திட்டமிட்டு அழிக்கப்படுகின்ற தமிழ் மக்களின் பொருளாதாரம்: கடுமையாக சாடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
வடக்கு கிழக்கை பொறுத்த வரையில் தமிழ் மக்களுடைய பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (7) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்கும் கருத்து தெரிவித்த அவர், தெற்கில் ஏற்பட்ட மாற்றம் ஒரு போலியான மாற்றமாகும், மக்கள் அபிவிருத்தியை விரும்புவது நியாயமான விடயமாகும்.
வடக்கு கிழக்கை பொறுத்த வரையில் தமிழ் மக்களுடைய பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
போரின் போதும், சுனாமியின் போதும், கொரோனா காலங்களின் போதும் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்பட்டது. இது இயற்கையாக நடைபெறவில்லை.
திட்டமிட்ட நடத்தப்பட்டதன் விளைவினாலே தெற்குடன் மோத முடியாமல் உள்ளது. இதனால் மக்கள் சிறிய சலுகைகளை கூட எதிர்ப்பார்க்கின்றனர், இதில் தவறேதும் இல்லை.
போர் நேரங்களில் அபிவிருத்தி செய்ய முடியாமல் சிறி லங்கா அரசு இருந்திருக்கலாம். ஆனால் போர் முடிந்து 15 வருடங்களின் பின்னரும் ஒன்றும் செய்யவில்லையே.
இதற்கு இனவாதம் என்ற ஒரே ஒரு காரணம் தான் உள்ளது.” என்றார்.
இது தொடர்பான மேலதிக விடயங்களை காணொளியில் காணலாம்…