காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம்தான் தற்போது உலகளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இதில், காப்பாற்ற வந்த இராணுவத்தினரை பார்த்து பயங்கரவாதிகள் என நினைத்து, பாதிக்கப்பட்டவர்கள் கதறி அழும் காணொளியொன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹால்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

இராணுவ உடை 

குறித்த தாக்குதலை இராணுவ உடை அணிந்து வந்து பயங்கரவாதிகள் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகை உலுக்கிய காஷ்மீர் தாக்குதல் : கதறும் மக்களின் வைரல் காணொளி | Tourists Killed In Kashmir Attack Video Goes Viral

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு இந்திய இராணுவ வீரர்கள் விரைந்துள்ளனர்.

இதன்போது அங்கு வந்த இராணுவ வீரர்களை பயங்கரவாதிகள் என நினைத்து பாதிக்கப்பட்ட மக்கள் கதறி அழும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.

இராணுவ வீரர்கள்

இதில், கணவனை இழந்த பெண் ஒருவர், தங்களை விட்டு விடும்படி கதறி அழுதுள்ளமை பார்ப்போரை கவலையடைய வைத்துள்ளது.

இதனை பார்த்த இராணுவ வீரர்கள், அவரிடம், “பயப்பட வேண்டாம், நாங்கள் இந்திய இராணுவ வீரர்கள், உங்களை காப்பாற்ற வந்துள்ளோம்” என ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

உலகை உலுக்கிய காஷ்மீர் தாக்குதல் : கதறும் மக்களின் வைரல் காணொளி | Tourists Killed In Kashmir Attack Video Goes Viral

தொடர்ந்து, அங்கிருந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் கொடுத்து பாதுகாப்புடன் அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த காணொளி தற்போது வைரலாகி, பார்ப்போர் இடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *