தெற்கு ஈரானில்(iran) உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த மிகப்பெரிய வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 1000 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சம்பவத்தைத் தொடர்ந்து, மாகாண அதிகாரிகள் மாகாணத்தில் மூன்று நாட்கள் பொது துக்கத்தை அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் உத்தரவு
ஹார்மோஸ்கான் நெருக்கடி மேலாண்மைக் கூட்டத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மோமெனி, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்(Masoud Pezeshkian) இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறினார்.

சனிக்கிழமை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, சுற்றியுள்ள பகுதிகளில் அழிவை ஏற்படுத்தியது மற்றும் மேற்கு பந்தர் அப்பாஸில் சில தொழில்களைப் பாதித்தது.
துறைமுகத்திற்கு அருகிலுள்ள நகரங்களில் உள்ள மக்கள் “மறு அறிவிப்பு வரும் வரை” வீட்டிலேயே இருக்கவும், மேலதிக பாதுகாப்பு ஆடைகளை அணியவும் சுகாதார அமைச்சகத்தால் கூறப்பட்டுள்ளது.(FGCSPDM)
ஈரானிய கடற்படையின் முக்கிய தளம் அமைந்துள்ள அருகிலுள்ள தெற்கு நகரமான பந்தர் அப்பாஸில், அவசரகால முயற்சிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்த அனுமதிக்கும் வகையில், அனைத்து பள்ளிகளும் அலுவலகங்களும் ஞாயிற்றுக்கிழமை மூட உத்தரவிடப்பட்டதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
புடினின் நெருக்கடிகால உதவி
இதனிடையே ஈரானின் ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் பேரழிவு தரும் வெடிப்பைத் தொடர்ந்து, தீயணைப்பு முயற்சிகளுக்கு உதவ பல விமானங்களை அனுப்ப ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(viladmir putin) உத்தரவிட்டுள்ளார்.

புடினின் உத்தரவின் பேரில், தெற்கு ஈரானில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதில் உள்ளூர் குழுக்களுக்கு உதவ ரஷ்யாவின் அவசர சூழ்நிலைகள் அமைச்சகத்தின் விமானங்கள் அனுப்பப்படுகின்றன என்று தெஹ்ரானில் உள்ள ரஷ்ய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.