காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்தநிலையிலே இரண்டு நாடுகளினுடைய போர் விமானங்களும், கடற்படை கப்பல்களும் போர் ஒத்திகைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றது.

இதனையடுத்து, இந்தியாவின் கடற்படையினுடைய கப்பல்கள் அரபிக்கடலிலே நிலை நிறுத்தப்பட்டு கொண்டு இருக்கின்றது.

தமது கப்பல்கள் நிலைநிறுத்தி இருக்கும் பகுதிகளுக்கு ஏனைய கப்பல்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு மீறி வரும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் இந்தியா அறிவித்துள்ளது.

அத்தோடு, இந்தியாவினுடைய விமானப்படை உத்தர பிரதேசத்திலே போர் ஒத்திகைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையிலே, இந்தியாவை முந்திக்கொண்டு பாகிஸ்தான் இந்தியா மீது ஒரு அதிரடித் தாக்குதலை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாக சில மேற்குலகப் போரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

மேற்படி விடயங்கள் தொடர்பில் விரிவான மற்றும் தெளிவான விளக்கங்களை ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி…

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments