இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது, களுத்துறை பிரதேசத்தில் இன்று (04) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சம்பத்தில் காயமடைந்த வேட்பாளர் களுத்துறையில் உள்ள நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.