முல்லைத்தீவு மாத்தளன் நந்திகடல் களப்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (05.05.2025) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் அம்பலவன் பொக்கணையை 27 வயதுடைய சேர்ந்த ராஜசீலன் ராஜ்குமார் எனும் ஆறுமாத பெண்குழந்தையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீடட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

தமிழர் பகுதியிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு | Body Of Young Family Man Recovered From Tamil Area

முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணையை வசிப்பிடமாக கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளார்.

அதனையடுத்து உறவினர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இன்றையதினம் நந்திக்கடல் களப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு, சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து சென்று உடற்கூற்று பரிசாதனை செய்த பின்னர் உறவினர்களிடம் கையளிக்க உத்தரவிட்டுள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *