ஈழத்தமிழர்களின் சுதந்திரத்தை, சுதந்திரத்தின் பெயரால் பறித்தெடுத்து அதனை சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தவரின் கைகளில் பிரித்தானிய அரசால் 1948 பெப்வைரி 04 இல் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது.
அன்று தொடங்கிய அவல வாழ்வு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணிகளின் பெயரால் ஈழத்தமிழர்களை விடாது துரத்தி வருகின்றது.
தாய் நிலத்தில் வாழவே முடியாத நிலையில் விடிவு தேடும் ஈழத்தமிழர்களின் முதற்தெரிவாக தமிழகம் நோக்கிய புலம்பெயர்வே அமைந்து விடுகிறது.
இவ்வாறு விடிவு தேடும் புலம்பெயர்வு நாலா திசைகளை நோக்கியதாக இருந்து வந்தாலும், தமிழ்நாடு நோக்கிய புலம்பெயர்வு என்பது சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாகவே பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு மாறிவிடுவது கசப்பான உண்மையாகும்.
தமிழ்நாட்டுடனான கடல் வணிகம் செய்து வந்த ஈழத்தமிழர்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக தமது சொந்தப் படகுகளிலேயே சத்தம் சந்தடியின்றி தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தமை ஆரம்ப நாட்களில் இடம்பெற்றிருந்தது.
இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் பெயரால் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக வடமராட்சிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அட்டூழியங்களில் இருந்து தப்பிக்கும் நோக்குடனேயே இவ்வாறான குடிப்பெயர்வு ஆரம்ப நாட்களில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் ஈழத்தமிழருடைய வாழ்வின் ஒரு பகுதியை திரையில் காண்பித்த திரைப்படம் தான் “டூரிஸ்ட் பேமிலி”
ராமேஸ்வரத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்துக்கு சசிகுமார் குடும்பம் தான் காரணம் என காவல்துறை அதிகாரி அவர்களைத் தேடி சென்னை வருகிறார்.
அதன்பிறகு நடந்தது என்ன? இந்த சதியில் சசிகுமார் குடும்பம் சிக்கியதா அல்லது மீண்டதா? என்பதே படத்தின் மீதிக் கதை.
உலகில் பல்வேறு நாடுகளில் ஏற்படும் யுத்தங்கள் மற்றும் பஞ்சங்களில் சிக்கி உயிரை விடுவதை விட, எங்காவது சென்று உயிரோடு வாழலாம் என எண்ணி சொந்த மண்ணை விட்டு, உறவுகளை விட்டு அகதியாக வரும் வருவோரின் மனவேதனையை உணர்ச்சியை கலந்து நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அபிஷன்.
இலங்கையில் இருந்து தமிழகம் வருவோர் சந்திக்கும் பிரச்னைகளை சொல்லி இருப்பதுடன் அவர்களிடம் இருக்கும் அன்பையும் மனித நேயத்தையும் இதில் எடுத்துக் காட்டிருக்கிறார் இயக்குனர் .
இந்த திரைப்படம் தொடர்பில் தமிழ் மக்களின் கருத்துக்களை தாங்கி வருகிறது இந்த காணொளித் தொடர்…