2025 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்று முடிந்து தற்போது ஒவ்வொரு பகுதிகளுக்ககுமான தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் வடக்கு கிழக்கை பொறுத்தவரை யாழ் மாநகர சபையில் இருக்ககூடிய மொத்த ஆசனங்களில் தமிழரசுக்கட்சி 11 ஆசனங்களையும், 11 ஆசனங்களை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் முன்னணியும் வென்றுள்ளன.

தேசிய மக்கள்ள சக்தி 4 ஆசனங்களையும், தமிழ் தேசிய கட்சிகளுடைய கூட்டமைவு 1 ஆசனத்தையும் இதுவரை கைப்பற்றியுள்ளது.

கடந்த முறை உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ் மாநகரசபையில் ஏற்பட்ட இழுபறி இந்தமுறையும் தொடர்வதற்கு வாய்ப்புள்ளது.

எந்தவொரு கட்சியும் அறுதிப்பெரும்பாண்மை பெறுவதற்கு வாய்ப்பில்லாத ஒரு சூழ்நிலையை அவதானிக்ககூடியதாக உள்ளது.

எனினும் வடக்கு கிழக்கில் பல இடங்களில் தமிழரசுக்கட்சி பல இடங்களை தன்வசப்படுத்தியுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான விபரங்களை கீழுள்ள காணொளியில் காண்க…

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *