போர் நிறுத்தத்தை மீறி மீண்டும் தாக்குதலை நடந்தும் பாகிஸ்தான் இராணுவம்இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் தாக்குதலை நடத்தி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதம்பூரில் பாகிஸ்தான் டீரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்து வருவதாக கூறப்படுகிறது.

போர் நிறுத்தத்தை மீறி மீண்டும் தாக்குதலை நடந்தும் பாகிஸ்தான் இராணுவம் | Pakistan Army Resumes Offensive Despite Violation

ஜம்மு செக்டாரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

ஜம்மு, உதம்பூர், அக்னூர், நெளஷேரா, ராஜௌரி, ஆர்.எஸ்.புரா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஸ்ரீநகரின் பல்வேறு இடங்களிலும் வெடிச் சத்தம் கேட்டதை காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்,” போர் நிறுத்த ஒப்பந்தம் என்ன ஆனது? ஸ்ரீநகரின் பல்வேறு இடங்களிலும் வெடிச் சத்தம் கேட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments