தமிழ் இனப்படுகொலைக்கான ஆதரங்கள் இல்லாமல் இல்லை அவை வெளிப்படுத்தபடாமல் உள்ளது என ஓய்வு நிலை சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி இரேனியஸ் செல்வின் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆதாரங்கள் இல்லாமல் எவ்விடயம் இந்த நூற்றாண்டில் காணப்படுவதில்லை.

ஆகவே, மே 18 ஆம் திகதி மற்றும் 19 ஆம் திகதி நடைபெற்ற அனைத்து விடயமும் உலகத்தின் கண்களுக்கு தெரிவதுடன் இனி என்ன நடக்கும் என்றும் அவர்களுக்கு தெரியும்.

அதற்கான பதிவுகளும் காணப்பட்டாலும் அந்த செயலை புரிந்தவன் யார் என்பதுதான் இங்கு பிரச்சினை, ஆகையால்தான் எல்லாம் தெரிந்தும் மறைக்கப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் இனப்படுகொலை, தமிழ் மக்களின் அரசியல், தமிழ் மக்கள் கடந்து வந்த பாதை, மே 18, முள்ளிவாய்க்கால் பின் மறைந்திருக்கும் வரலாறு மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments