லண்டனில் (London) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால் இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

நீதிக்கான போராட்டம்

கொட்டொலிகளுடன் ஆரம்பமான நீதிக்கான போராட்டம், பேரணியாக வெளிவிவகார அமைச்சகம் மற்றும் பிரதமர் இல்லம் வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், பிரித்தானிய தேசியக்கொடியை டொமிபில்லா ராஜநாயகம் ஏற்றி வைத்தார்.

நினைவுதூபி

தமிழீழ தேசியக்கொடியை யாதவி தயாளபவன் ஏற்றிவைத்ததை அடுத்து, மேனகா சுரேஷ் நினைவு சுடரினை ஏற்றிவைத்தார்.

லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக திரண்ட புலம்பெயர் தமிழர்கள் | Mullivaikkal Genocide Commemoration Day In London

இதனையடுத்த, நினைவுதூபிக்கு யதுசன் ஜெயக்குமார் மலர் மாலை அணிவித்ததுடன் தொடர்ந்து நினைவு தூபிக்கு மலர் வணக்கமும் தீபவணக்கமும் இடம்பெற்றன.

நிகழ்வில் கவிதைகள், உரைகளும், முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் பகிர்வுகளும் இடம்பெற்றதுடன் இறுதியாக, கலந்து கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments