முல்லைத்தீவு, உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இருவர், தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் இன்று பிற்பகல் தோணியில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற வேளை தோணி கவிழ்ந்துள்ளது.

தழிழர் பகுதியை உலுக்கிய சோக சம்பவம் ; பூ பறிக்கச் சென்று பறிபோன இரு உயிர்கள் | Two Die While Picking Flowers In Tamil Region

இதன்போது தோணியில் இருந்த இருவரும் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்

அளம்பில் தெற்கில் வசிக்கும் 10 வயதுடைய சி.பிரணவன், 25 வயதுடைய இ.நிஷாந்தன் ஆகியோரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments