இந்த நாட்டில் உள்ள இனவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் மதவாதிகள் அதிகாரத்தை இழக்கும் போதெல்லாம், விடுதலைப் புலிகள் மீண்டும் நாட்டில் எழுச்சி பெறுவார்கள் என்று பொய்களைப் பரப்புவதாக சிவில் ஆர்வலர் சிரந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பொய்யான அறிக்கைகளை வெளியிடுபவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி இன்று (07.06.2025) காவல்நிலைய தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வெள்ளவத்தை கடற்கரையில் சமீபத்தில் தனது உயிரிழந்த உறவினர்களை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற நினைவேந்தல் நகழ்வை இந்த நாட்டில் இனவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் மத வெறியர்கள் நாசப்படுத்த முயன்றார்கள். 

விடுதலைப் புலிகள்

போரின் போது அவரது குடும்ப உறுப்பினர்கள் இறந்திருக்கலாம். அவர்களை நினைவுகூருவது தவறல்ல, குடும்ப உறுப்பினரை இழந்ததன் வலி குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே தெரியும்.

எனவே, வெள்ளவத்தை கடற்கரையில் இறந்த அவரது குடும்ப உறுப்பினர்களின் நினைவேந்தல் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. 

இது எந்த வகையிலும் விடுதலைப் புலிகள் அமைப்பை வளப்படுத்தவோ அல்லது மீண்டும் எழுச்சி பெறவோ அனுமதிக்காது என்று சிவில் ஆர்வலர் சிரந்த அமரசிங்க சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments