ஈரானின் (Iran) உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் (Ali Khamenei) கொல்ல இஸ்ரேல் (Israel) தீட்டிய ரகசிய திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) முடக்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் இரண்டு முதன்மை அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் உறுதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ஈரானியர்கள் ஏதேனும் அமெரிக்க பிரஜையை படுகொலை செய்ததாக இதுவரை தகவல் இல்லை.

உயர் அதிகாரிகள் 

அவர்கள் அப்படியான ஒரு முடிவுக்கு வரும் வரையில், ஈரானின் உச்ச தலைவர் தொடர்பில் அமெரிக்கா எந்த முடிவும் எடுக்காது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தலைவரை குறிவைத்த இஸ்ரேலின் கொலை திட்டம்: குறுக்கிட்ட ட்ரம்ப் | Trump Blocked Israel S Iran Assassination Plan

அத்தோடு, இஸ்ரேல் ஈரான் மீது பாரிய தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொல்ல வாய்ப்பு

இந்தநிலையில், இஸ்ரேல் தரப்பில் இருந்து அயதுல்லா அலி கமேனியைக் கொல்ல வாய்ப்பு அமைந்துள்ளதாக ட்ரம்பிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனால் உடனடியாக அந்த முடிவைக் கைவிட ட்ரம்ப் வலியுறுத்தியதாகவும் குறித்த அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஈரான் தலைவரை குறிவைத்த இஸ்ரேலின் கொலை திட்டம்: குறுக்கிட்ட ட்ரம்ப் | Trump Blocked Israel S Iran Assassination Plan

ட்ரம்ப் நேரடையாக தமது முடிவை தெரிவித்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் (Benjamin Netanyahu) ட்ரம்ப் அடிக்கடி தொடர்பு கொண்டு வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments