ஹைஃபா விரிகுடாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இதுவரை மூன்று பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்விளைவாக, குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் அனைத்து வசதிகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெல் அவிவ் பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில், வசதிகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் விளைவாக, மின் உற்பத்தி நிலையம் கணிசமாக சேதமடைந்தது, எனவே சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் துணை நிறுவனங்களின் அனைத்து வசதிகளும் மூடப்பட்டன.

மேலும், குறித்த பகுதிக்கு மின்சாரம் வழங்குவதை மீண்டும் தொடங்க இஸ்ரேலிய மின்சார சபையுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானில் வெடித்து சிதறிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ; மூன்று பேர் பலி | Oil Refinery Explosion In Iran Three Dead

அத்துடன் இஸ்ரேலிய செய்தி தளங்களுக்கு ஈரான் வெளியேற்ற எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலியப் படைகள் இன்று ஈரானின் அரச ஒளிபரப்பு நிறுவனத்தின் கட்டிடத்தின் மீது ஏவுகணை தாக்குதலை மெற்கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து , இஸ்ரேலிய செய்தி தளங்களுக்கு ஈரான் வெளியேற்ற எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, இஸ்ரேலின் N12 மற்றும் N14 செய்தி நிறுவனங்களுக்கு ஈரான் வெளியேற்ற எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் இஸ்லாமியக் குடியரசின் ஒளிபரப்பு சேவைக்கு எதிராக சியோனிச எதிரியின் விரோதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஈரானிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *