இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13ம் திகதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் ; ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் | Attack On Us Ships Houthi Rebels Threaten

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து இன்று 9வது நாளாக மோதல் நடைபெற்று வருகிறது.

இந்த மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் ; ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் | Attack On Us Ships Houthi Rebels Threaten

ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஈரானுடனான மோதலில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தால் செங்கடலில் அமெரிக்க போர் கப்பல்கள், சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments