தமிழர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு 155 ஆம் கட்டைப்பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 33 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

குறித்த பகுதியில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிய வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு | Father Of Three Killed In Accident In Kilinochchi

விபத்தில் மோட்டார் சைக்கிளிலில் இருவர் பயணித்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றையவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி விநாயகபுரத்தைச்சேர்ந்த 33வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments