கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்தியர் வெடிபொருட்களுடன் கைது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இந்திய பயணி ஒருவரின் பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து இன்று (21) காலை விமான நிலைய காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டநிலையில் குறித்த பயணி கைது செய்யப்பட்டார்.

இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 வயதுடைய இவர் குவைத்தில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிகிறார்.

சிறிய பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தோட்டா

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய ஸ்கான் சோதனையின் போது, ​​T-56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் இந்த தோட்டா , அவரது பொருட்களில் ஒரு சிறிய பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்தியர் வெடிபொருட்களுடன் கைது | Indian Manarrested With Live Ammunition

இது குறித்து கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினருக்கு தகவல் அளித்த பின்னர், காவல்துறை அதிகாரிகள் குழு வந்து பயணியைக் கைது செய்தது. குவைத்தில் திறந்தவெளியை சுத்தம் செய்யும் போது உயிருள்ள தோட்டாவை கண்டுபிடித்ததாக பயணி காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

 இந்த பயணியும் அவர் கொண்டு வந்த உயிருள்ள தோட்டாவும் இன்று (21) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட இருந்தன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments